சௌமிய சாகரம்

பாரப்பா ஆதாரம் ஆறாதாரம் பதிவான ஆதார மடத்துக் குள்ளே நேரப்பா அக்கினிதான் சீவாத் மாவாய் நிறைந்து நின்ற வாய்வதுதான் பரமாத் மாவாய்ப் பேரப்பா பெருகிநின்ற கடத்தி னுள்ளே பிலமாக நின்றுவிளை யாட்டாயாடிக் காரப்பா ஆகாசம் சாட்சியாகக் கருணையுடன் நின்றதடாகருவாய் தானே! 24 பஞ்சபூதம் காணப்பாதத்துவத்தின் விபரந் தன்னைக் கருணையுடன் சொல்லுகிறேன் கனிவாய்க் கேளு பேணப்பா பூதமைந்துஞ் சொல்லக் கேளு பிரதிவியு மப்புடனே தேய்வு மாகப் பூணப்பா வாய்வுடனே ஆகாசந்தான் பொருந்திநின்ற பூதமடா அஞ்சு மாச்சு தோணப்பா மனக்கண்ணால் நன்றாய்ப் பார்த்துத் துலங்கிநின்ற பூதமதை நன்றாய்க் காரே! 25 ஞானேந்திரியம் காரப்பா அஞ்சுபஞ்ச பூதந் தன்னைக் கண்குவித்து மனக்கண்ணால் நன்றாய்ப் பார்த்தால் மேரப்பா மேருகிரி காணலாகு மேறான சதுரகிரி விலாசந் தோணும் ஆரப்பா உனக்கீடு சொல்லப் போறேன் அரகரா பூதவகையறிந்து கொண்டால் நேரப்பா நின்றகயிலாசந் தோன்றும் நிசமான ஞானேந்திரியங் கேளே!
பாரப்பா ஆதாரம் ஆறாதாரம் பதிவான ஆதார மடத்துக் குள்ளே நேரப்பா அக்கினிதான் சீவாத் மாவாய் நிறைந்து நின்ற வாய்வதுதான் பரமாத் மாவாய்ப் பேரப்பா பெருகிநின்ற கடத்தி னுள்ளே பிலமாக நின்றுவிளை யாட்டாயாடிக் காரப்பா ஆகாசம் சாட்சியாகக் கருணையுடன் நின்றதடாகருவாய் தானே ! 24 பஞ்சபூதம் காணப்பாதத்துவத்தின் விபரந் தன்னைக் கருணையுடன் சொல்லுகிறேன் கனிவாய்க் கேளு பேணப்பா பூதமைந்துஞ் சொல்லக் கேளு பிரதிவியு மப்புடனே தேய்வு மாகப் பூணப்பா வாய்வுடனே ஆகாசந்தான் பொருந்திநின்ற பூதமடா அஞ்சு மாச்சு தோணப்பா மனக்கண்ணால் நன்றாய்ப் பார்த்துத் துலங்கிநின்ற பூதமதை நன்றாய்க் காரே ! 25 ஞானேந்திரியம் காரப்பா அஞ்சுபஞ்ச பூதந் தன்னைக் கண்குவித்து மனக்கண்ணால் நன்றாய்ப் பார்த்தால் மேரப்பா மேருகிரி காணலாகு மேறான சதுரகிரி விலாசந் தோணும் ஆரப்பா உனக்கீடு சொல்லப் போறேன் அரகரா பூதவகையறிந்து கொண்டால் நேரப்பா நின்றகயிலாசந் தோன்றும் நிசமான ஞானேந்திரியங் கேளே !