சௌமிய சாகரம்

194 செந்தூரபற்பம் வைத்தகுப்பி மூக்களவு சாம்பலிட்டு மகத்தான சற்குருவை மனதிற் கொண்டு மெய்த்திட்ட மாகவேதானடுப்பி லேத்தி மேன்மைபெற அனல்மூட்டிப் பதத்தைப் பாரு கைத்திட்ட மாகவேதான் சலாகை போட்டுக் கதிர்முனையிற் சிவந்தவர்ணங்கண்டால் மைந்தா மைத்திட்ட மானபதஞ்சரிதானென்று மார்க்கமுடன் தானிறக்கியாற வையே. 740 ஆறவே வைத்ததொரு பாண்டத்துள்ளே அருள்பெருகும் குப்பிதனை யெடுத்துப் பாரு தேறவேவைத்த குப்பிக் குள்ளேமைந்தா சிவந்திருந்த செந்தூர மென்ன சொல்வேன்? நேரவே நவலோகந்தங்க மாகும் நீமகனே பணவிடைதான் கொண்டாயானால் கூறவே நாவேது தேக காந்தி கோடான கோடிரவி போலாமென்னே. 741 எந்நேரமுங் குருவைத் தியானம் பண்ணி ஏகாந்த மானரசவாதம் பார்க்கக் கண்ணாரக் கண்டபடி சொல்லக் கேளு கருவான அரப்பொடியைக் கல்வத் திட்டு விண்ணான கமலரசந்தன்னாலாட்டி மேலான நாகரசம் வங்கஞ் சேர்த்துப் பொன்னான தாரமுடன் கெந்தி லிங்கம் பொருளான தங்கமுடன் வீரஞ் சேரே. 742
194 செந்தூரபற்பம் வைத்தகுப்பி மூக்களவு சாம்பலிட்டு மகத்தான சற்குருவை மனதிற் கொண்டு மெய்த்திட்ட மாகவேதானடுப்பி லேத்தி மேன்மைபெற அனல்மூட்டிப் பதத்தைப் பாரு கைத்திட்ட மாகவேதான் சலாகை போட்டுக் கதிர்முனையிற் சிவந்தவர்ணங்கண்டால் மைந்தா மைத்திட்ட மானபதஞ்சரிதானென்று மார்க்கமுடன் தானிறக்கியாற வையே . 740 ஆறவே வைத்ததொரு பாண்டத்துள்ளே அருள்பெருகும் குப்பிதனை யெடுத்துப் பாரு தேறவேவைத்த குப்பிக் குள்ளேமைந்தா சிவந்திருந்த செந்தூர மென்ன சொல்வேன் ? நேரவே நவலோகந்தங்க மாகும் நீமகனே பணவிடைதான் கொண்டாயானால் கூறவே நாவேது தேக காந்தி கோடான கோடிரவி போலாமென்னே . 741 எந்நேரமுங் குருவைத் தியானம் பண்ணி ஏகாந்த மானரசவாதம் பார்க்கக் கண்ணாரக் கண்டபடி சொல்லக் கேளு கருவான அரப்பொடியைக் கல்வத் திட்டு விண்ணான கமலரசந்தன்னாலாட்டி மேலான நாகரசம் வங்கஞ் சேர்த்துப் பொன்னான தாரமுடன் கெந்தி லிங்கம் பொருளான தங்கமுடன் வீரஞ் சேரே . 742