சௌமிய சாகரம்

189 செய்யப்பா சிவபூசை சக்தி பூசை செயமான வாலையுட பூசை செய்து மெய்யப்பாதவறாமற் பூசை பண்ணி வேதாந்தப் பூரணத்தில் விரும்பி நின்று மையப்பா மய்யமென்ற மவுன வீட்டில் மார்க்கமுடன் தானிருந்து வாசி பூட்டிப் பையப்பாரேசக பூரகமுஞ் செய்து பக்தி கொண்டு தன்னகத்தைப் பதிவாய்க்காரே. 721 காரப்பாதன்னகத்தைக்கார்க்க வேணும் காயாதி கற்பமதைக் கொள்ள வேணும் நேரப்பா நிலையறிந்து கொள்ள வேணும் நிலையறிந்து சிவயோகத் திருக்க வேணும் தேரப்பாசிவயோகத்திருந்து கொண்டு செகசால மாய்கையெல்லாந் தெளிந்து பார்த்து மேரப்பாமேருகிரி வாச மாகி மெய்ஞான சித்துவிளையாடக் கேளே. 722 செம்புசுத்தி கேளப்பாசித்துவிளையாடு தற்குக் கிருபையுடன் செம்புசுத்தி சொல்லக் கேளு வாளப்பாவெடியுப்புத் துருசுங் கூட்டி மகத்தான கருவங்க மிடையே சேர்த்துச் சூளப்பாகமலரசம் விட்டு ஆட்டிச் சுகமாகக் கடலைமணிபோலே செய்து ஆளப்பாவெள்ளிதனை உருக்கிக் கொண்டு அந்திடைக்கு வங்கமணியதனிற் றாக்கே. 723 தாக்கிநன்றாய் உருக்கியதை எடுத்துக் கொண்டு தன்மையுடன் செம்புதனில் நாலுக் கொன்று தூக்கியே தானுருக்கி எடுத்துக் கொண்டு துப்புரவாய் ஒட்டில்வைத்து ஊதிப் போட்டால் நோக்கியதோர் தீபவொளி போலே மைந்தா நுண்மையுள்ள செம்புபிரகாச மாகும் பாக்கியமே படைத்தவர்க்கு எல்லாஞ்சித்தி பத்தியுடன் இன்னமொரு பாகங் கேளே. 724
189 செய்யப்பா சிவபூசை சக்தி பூசை செயமான வாலையுட பூசை செய்து மெய்யப்பாதவறாமற் பூசை பண்ணி வேதாந்தப் பூரணத்தில் விரும்பி நின்று மையப்பா மய்யமென்ற மவுன வீட்டில் மார்க்கமுடன் தானிருந்து வாசி பூட்டிப் பையப்பாரேசக பூரகமுஞ் செய்து பக்தி கொண்டு தன்னகத்தைப் பதிவாய்க்காரே . 721 காரப்பாதன்னகத்தைக்கார்க்க வேணும் காயாதி கற்பமதைக் கொள்ள வேணும் நேரப்பா நிலையறிந்து கொள்ள வேணும் நிலையறிந்து சிவயோகத் திருக்க வேணும் தேரப்பாசிவயோகத்திருந்து கொண்டு செகசால மாய்கையெல்லாந் தெளிந்து பார்த்து மேரப்பாமேருகிரி வாச மாகி மெய்ஞான சித்துவிளையாடக் கேளே . 722 செம்புசுத்தி கேளப்பாசித்துவிளையாடு தற்குக் கிருபையுடன் செம்புசுத்தி சொல்லக் கேளு வாளப்பாவெடியுப்புத் துருசுங் கூட்டி மகத்தான கருவங்க மிடையே சேர்த்துச் சூளப்பாகமலரசம் விட்டு ஆட்டிச் சுகமாகக் கடலைமணிபோலே செய்து ஆளப்பாவெள்ளிதனை உருக்கிக் கொண்டு அந்திடைக்கு வங்கமணியதனிற் றாக்கே . 723 தாக்கிநன்றாய் உருக்கியதை எடுத்துக் கொண்டு தன்மையுடன் செம்புதனில் நாலுக் கொன்று தூக்கியே தானுருக்கி எடுத்துக் கொண்டு துப்புரவாய் ஒட்டில்வைத்து ஊதிப் போட்டால் நோக்கியதோர் தீபவொளி போலே மைந்தா நுண்மையுள்ள செம்புபிரகாச மாகும் பாக்கியமே படைத்தவர்க்கு எல்லாஞ்சித்தி பத்தியுடன் இன்னமொரு பாகங் கேளே . 724