சௌமிய சாகரம்

து 184 மாயமென்ற மாயமெல்லாங் கண்ணின் சூட்சம் மகத்தான சூடசமடா மனக்கண் பார்வை தாயகமாய் நீயிருந்து மனக்கண் கூர்ந்து தன்னைமிகத் தானறிந்து தானே நின்றால் நேயமுடன் காயமது காரணமாய் நின்று நினைத்தபடி சித்துவிளையாடும் பாரு ஞாயமுடன் நடுவிருந்து நாட்டம் பாரு ஞானமென்ற அக்கினிதான் வசமாம் பாரே. 701 பாரப்பா அக்கினியே போத மாகும் பதிவான போதமதே ஞான மாகும் நேரப்பாஞானமதே தீப மாகும் நிசமான தீபமடா மனக்கண் பார்வை காரப்பாகருணைவிழி மலர்க்கண் தன்னைக் காலறிந்து மேலேறிக் கடைக்கண் கொண்டு தேரப்பா ஆதாரம் முழுதும் பார்த்துத் தெளிந்து மன தறிவாலே யாதி பாரே. 702 ஆதியென்ற இருதயமே கமல பீடம் அண்டசரா சரங்களெல்லாம் அடங்கும் பீடம் நீதியுடன் ரவிமதி சென்றிருக்கும் பீடம் நேர்மையுடன் சிவதவத்துக்குகந்த பீடம் ஓதியதோர் மந்திரகலைக் கியான பீடம் உறுதியுள்ள ரிஷிமுனிவருகந்த பீடம் சோதிமணி தோற்றொடுக்க மான பீடம் சுருதிவளர் பீடமதைச் சூழ்ந்து பாரே. 703 சூழ்ந்து பார் இருதயமே சொர்க்க வீடு சோதிமணி நாகமது துலங்கும் வீட்டில் தாழ்ந்து கொண்டு தன்னறிவே தன்னைப் பார்த்தால் தானிருந்து பூரணமாய்த் தன்னைப் பார்த்தால் வீழ்ந்து செடம் போகாது வேதந்தூக்கும் வேதமென்ற சின்மயத்தில் விரும்பி நின்று வாழ்ந்திருக்கச் சொன்னனடா மவுன வீட்டில் மனங்குவிந்து சிலம்பொலியை மகிழ்ந்து காணே. 704
து 184 மாயமென்ற மாயமெல்லாங் கண்ணின் சூட்சம் மகத்தான சூடசமடா மனக்கண் பார்வை தாயகமாய் நீயிருந்து மனக்கண் கூர்ந்து தன்னைமிகத் தானறிந்து தானே நின்றால் நேயமுடன் காயமது காரணமாய் நின்று நினைத்தபடி சித்துவிளையாடும் பாரு ஞாயமுடன் நடுவிருந்து நாட்டம் பாரு ஞானமென்ற அக்கினிதான் வசமாம் பாரே . 701 பாரப்பா அக்கினியே போத மாகும் பதிவான போதமதே ஞான மாகும் நேரப்பாஞானமதே தீப மாகும் நிசமான தீபமடா மனக்கண் பார்வை காரப்பாகருணைவிழி மலர்க்கண் தன்னைக் காலறிந்து மேலேறிக் கடைக்கண் கொண்டு தேரப்பா ஆதாரம் முழுதும் பார்த்துத் தெளிந்து மன தறிவாலே யாதி பாரே . 702 ஆதியென்ற இருதயமே கமல பீடம் அண்டசரா சரங்களெல்லாம் அடங்கும் பீடம் நீதியுடன் ரவிமதி சென்றிருக்கும் பீடம் நேர்மையுடன் சிவதவத்துக்குகந்த பீடம் ஓதியதோர் மந்திரகலைக் கியான பீடம் உறுதியுள்ள ரிஷிமுனிவருகந்த பீடம் சோதிமணி தோற்றொடுக்க மான பீடம் சுருதிவளர் பீடமதைச் சூழ்ந்து பாரே . 703 சூழ்ந்து பார் இருதயமே சொர்க்க வீடு சோதிமணி நாகமது துலங்கும் வீட்டில் தாழ்ந்து கொண்டு தன்னறிவே தன்னைப் பார்த்தால் தானிருந்து பூரணமாய்த் தன்னைப் பார்த்தால் வீழ்ந்து செடம் போகாது வேதந்தூக்கும் வேதமென்ற சின்மயத்தில் விரும்பி நின்று வாழ்ந்திருக்கச் சொன்னனடா மவுன வீட்டில் மனங்குவிந்து சிலம்பொலியை மகிழ்ந்து காணே . 704