சௌமிய சாகரம்

170 கண்கொள்ளாக் காட்சிதரு செந்தூரத்தைக் கைமுறையாய்த் தானெடுத்துப் பதனம் பண்ணி விண்ணிறைந்த சோதியெனத் தியானம் பண்ணி மெய்யாகப் பணவிடைதானிருபோதுண்ணு தன்மனமே சாட்டியதாய்த் தினமுங் கொண்டால் தங்கமய மாகுமடா அங்கந் தானும் பொன்மயமாய் நின்றுவிளையாடும் போது பூரணசெந்தூரமதின் புதுமை கேளே. 647 கேளப்பா வெள்ளி செம்பு தகடு பண்ணிக் கிருபையுள்ள செந்தூர மதனிற் பூசி வாளப்பா அக்கினியில் வாட்டிப் பார்க்க வரிசையுடன் தகடுருவிப் பழுக்கு மைந்தா சூளப்பாசுத்தமுடன் பழுத்து நின்ற சோதியென்ற தங்கமடாசொற்க மாச்சு ஆளப்பா சொர்ணமது பத்துக் கொன்று அருள்பெருகப் பூரணமாயடங்கி வாழே. 648 அடங்கிமிக வாழ்வதற்கு அண்ட மேவி ஆதிசிவ சாம்பவியார் பாதங் கண்டு துடங்கியந்த வாசிமலர்தனையெ டுத்துச் சுத்தமுடன் நித்தியமும் பூசை பண்ணித் திடங்களொடு சிவயோகஞ் சித்தியாகும் திருவான அமுர்தரச மருவிப் பாயும் மடங்களென்ற மடபதிகள் மங்காதய்யா மந்திரபஞ் சாக்கரத்தை மருவிப் பாரே. 649 பாரப்பா அகாரமது சிவமு மாச்சு பதிவான சிவமதுதான் உயிரு மாச்சு நேரப்பாவுகாரமது சத்தி யாச்சு நேர்மையுள்ள சத்தியது உடல்தானப்பா சாரப்பா மகாரமது மவுன மாச்சு சாயுச்சிய மவுனமது சோதி யாச்சு தேரப்பாசிகாரமது தீயு மாச்சு கிருவான மகாரமது வாய்வு மாச்சே. 650
170 கண்கொள்ளாக் காட்சிதரு செந்தூரத்தைக் கைமுறையாய்த் தானெடுத்துப் பதனம் பண்ணி விண்ணிறைந்த சோதியெனத் தியானம் பண்ணி மெய்யாகப் பணவிடைதானிருபோதுண்ணு தன்மனமே சாட்டியதாய்த் தினமுங் கொண்டால் தங்கமய மாகுமடா அங்கந் தானும் பொன்மயமாய் நின்றுவிளையாடும் போது பூரணசெந்தூரமதின் புதுமை கேளே . 647 கேளப்பா வெள்ளி செம்பு தகடு பண்ணிக் கிருபையுள்ள செந்தூர மதனிற் பூசி வாளப்பா அக்கினியில் வாட்டிப் பார்க்க வரிசையுடன் தகடுருவிப் பழுக்கு மைந்தா சூளப்பாசுத்தமுடன் பழுத்து நின்ற சோதியென்ற தங்கமடாசொற்க மாச்சு ஆளப்பா சொர்ணமது பத்துக் கொன்று அருள்பெருகப் பூரணமாயடங்கி வாழே . 648 அடங்கிமிக வாழ்வதற்கு அண்ட மேவி ஆதிசிவ சாம்பவியார் பாதங் கண்டு துடங்கியந்த வாசிமலர்தனையெ டுத்துச் சுத்தமுடன் நித்தியமும் பூசை பண்ணித் திடங்களொடு சிவயோகஞ் சித்தியாகும் திருவான அமுர்தரச மருவிப் பாயும் மடங்களென்ற மடபதிகள் மங்காதய்யா மந்திரபஞ் சாக்கரத்தை மருவிப் பாரே . 649 பாரப்பா அகாரமது சிவமு மாச்சு பதிவான சிவமதுதான் உயிரு மாச்சு நேரப்பாவுகாரமது சத்தி யாச்சு நேர்மையுள்ள சத்தியது உடல்தானப்பா சாரப்பா மகாரமது மவுன மாச்சு சாயுச்சிய மவுனமது சோதி யாச்சு தேரப்பாசிகாரமது தீயு மாச்சு கிருவான மகாரமது வாய்வு மாச்சே . 650