சௌமிய சாகரம்

162) 615 சத்தேபா ரென்றுசொன்ன சொல்லே யான சங்கையுள்ள ஆசையெல்லா மாயா மாயம் வித்தான ஆதியந்த மாயா மாயம் விலாசமுள்ள வெளிஒளியும் மாயா மாயம் சுத்தான சாத்திரங்கள் மாயா மாயம் சுழன்று உயிர் பயிர்களெல்லாம் மாயா மாயம் சித்தான அசத்தையெல்லாம் தெளிந்து பார்க்கச் சின்மயானந்தமாய்த் தெளிந்து போச்சே தெளிந்துநின்ற சின்மயத்தின் தெளிவு தன்னைச் சிவசிவா சதாசிவனும் மயேசன் றானும் மளிந்து நின்ற ருத்திரன்மால் பிரமன்றானும் மாதவனுஞ் சந்திரனோடேழு பேரும் நெளிந்துநித மலைந்தவருந் தேடிக் காணார் நிசமான நிச்செயத்தை யார்தான் காண்பார் தெறிந்து கொண்டு சின்மயமாயிருந்தாயாகில் சின்மயத்தில் தன்மயங்கொண் டேறும் பாரே. 616 சின்மயத்தின் கூறு பாரப்பாசின்மயத்தின்மைந்தா கேளு பனிரெண்டு பூரணந்தான் பிறந்து தப்பா நேரப்பா பூரணந்தானின்று ஆடி நேசமென்ற பாசமெல்லாம் கண்டு தேறிக் காரப்பா என்று பரி பூரணமாய் நின்று கருணையுடன் பூரணத்திற் கலந்து போச்சே ஆரப்பா அறிவார்கள் சின்மயத்தின் வடிவு அங்குமில்லை இங்குமில்லை யெங்குந் தானே. 611 எங்குந்தான் தானாகி நின்ற சூட்சம் ஏகபராபரமான மயமே யாகும் சங்கையில்லாப் பரமசுகஞ்சின்மயமே யாச்சு சைதன்ய மானசின்மயத்தை மைந்தா அங்கமுடன் பிரமமென்று வெளிதா னென்றும் அரூபமாய் நின்ற திரு ஒளிதானென்றும் மங்களமாய் நிறைந்ததிரு வாசி யென்றும் மவுனமாய் நின்றமயந்தானென் றாரே. 618
162 ) 615 சத்தேபா ரென்றுசொன்ன சொல்லே யான சங்கையுள்ள ஆசையெல்லா மாயா மாயம் வித்தான ஆதியந்த மாயா மாயம் விலாசமுள்ள வெளிஒளியும் மாயா மாயம் சுத்தான சாத்திரங்கள் மாயா மாயம் சுழன்று உயிர் பயிர்களெல்லாம் மாயா மாயம் சித்தான அசத்தையெல்லாம் தெளிந்து பார்க்கச் சின்மயானந்தமாய்த் தெளிந்து போச்சே தெளிந்துநின்ற சின்மயத்தின் தெளிவு தன்னைச் சிவசிவா சதாசிவனும் மயேசன் றானும் மளிந்து நின்ற ருத்திரன்மால் பிரமன்றானும் மாதவனுஞ் சந்திரனோடேழு பேரும் நெளிந்துநித மலைந்தவருந் தேடிக் காணார் நிசமான நிச்செயத்தை யார்தான் காண்பார் தெறிந்து கொண்டு சின்மயமாயிருந்தாயாகில் சின்மயத்தில் தன்மயங்கொண் டேறும் பாரே . 616 சின்மயத்தின் கூறு பாரப்பாசின்மயத்தின்மைந்தா கேளு பனிரெண்டு பூரணந்தான் பிறந்து தப்பா நேரப்பா பூரணந்தானின்று ஆடி நேசமென்ற பாசமெல்லாம் கண்டு தேறிக் காரப்பா என்று பரி பூரணமாய் நின்று கருணையுடன் பூரணத்திற் கலந்து போச்சே ஆரப்பா அறிவார்கள் சின்மயத்தின் வடிவு அங்குமில்லை இங்குமில்லை யெங்குந் தானே . 611 எங்குந்தான் தானாகி நின்ற சூட்சம் ஏகபராபரமான மயமே யாகும் சங்கையில்லாப் பரமசுகஞ்சின்மயமே யாச்சு சைதன்ய மானசின்மயத்தை மைந்தா அங்கமுடன் பிரமமென்று வெளிதா னென்றும் அரூபமாய் நின்ற திரு ஒளிதானென்றும் மங்களமாய் நிறைந்ததிரு வாசி யென்றும் மவுனமாய் நின்றமயந்தானென் றாரே . 618