சௌமிய சாகரம்

156 குருவான தங்காதி குருவை மைந்தா குணமான நவலோகத் தன்னில் பூட்டத் திருவான தங்கமடா அங்க மாகும் தேகமென்ற அங்கமது திறக்க வேண்டி உருவான செந்தூரம் பணவிடைதான் கொண்டால் உண்மையுள்ள ஆதாரம் சிவந்து போகும் கருவான முலைப்பாலில் மண்டலமே கொண்டால் கைலாச வாசமதாய் வாழலாமே. 591 வாழ்வதற்கு இன்னமொரு வரிசை கேளு வரிசையுள்ள அரப்பொடியும் காந்தங் கூட்டி ஆள்வதற்குக் கல்வமதில் இட்டு மைந்தா அப்பனே சம்பளத்தின் சாற்றால் ஆட்டி வாழ்வதற்கு வகைகேளுமைந்தாமைந்தா மகத்தான ரசமுடனே நாகம் வங்கம் தாழ்வதற்கும் அயக்காந்தத்துடனே கூட்டிச் சங்கையுடன் சம்பளத்தில் சாற்றால் ஆட்டே! 592 ஆட்டையிலே அதில் சேர்க்கும் மருந்து கேளு அந்திடைக்குப் பத்திலொன்று தங்கங் கூட்டி நீட்டையிலே கெந்தி அரிதாரம் லிங்கம் நிசமான கெவுரியுடன் மனோசிலையும் பச்சை பூட்டையிலே பாஷாணம் முதார் சிங்கு புகழான வீரமுடன் பூரம் காரம் வாட்டையிலே தங்க இடை சரியாய்ப் போட்டு மைந்தனே வெடியுப்பு நீரால் ஆட்டே. ஆட்டிநன்றாய் வழித்துருட்டி வட்டுப் பண்ணி அப்பனே ரவிமுகத்தில் காய வைத்துத் தாட்டிகமாய் ஓட்டில்வைத்து ஓடு மூடிச் சந்துவாய் தெரியாமல் மண்ணும் பூசி வாட்டுவாய் புடந்தனிலே மைந்தா நீயும் மகத்தான செந்தூரங் கண்கொள்ளாது நாட்டிநன்றாய் இவ்விதமாய்ச் சிந்தூரஞ் செய்து நாலான காரியமும் வகையாய்ப் பாரே. 593
156 குருவான தங்காதி குருவை மைந்தா குணமான நவலோகத் தன்னில் பூட்டத் திருவான தங்கமடா அங்க மாகும் தேகமென்ற அங்கமது திறக்க வேண்டி உருவான செந்தூரம் பணவிடைதான் கொண்டால் உண்மையுள்ள ஆதாரம் சிவந்து போகும் கருவான முலைப்பாலில் மண்டலமே கொண்டால் கைலாச வாசமதாய் வாழலாமே . 591 வாழ்வதற்கு இன்னமொரு வரிசை கேளு வரிசையுள்ள அரப்பொடியும் காந்தங் கூட்டி ஆள்வதற்குக் கல்வமதில் இட்டு மைந்தா அப்பனே சம்பளத்தின் சாற்றால் ஆட்டி வாழ்வதற்கு வகைகேளுமைந்தாமைந்தா மகத்தான ரசமுடனே நாகம் வங்கம் தாழ்வதற்கும் அயக்காந்தத்துடனே கூட்டிச் சங்கையுடன் சம்பளத்தில் சாற்றால் ஆட்டே ! 592 ஆட்டையிலே அதில் சேர்க்கும் மருந்து கேளு அந்திடைக்குப் பத்திலொன்று தங்கங் கூட்டி நீட்டையிலே கெந்தி அரிதாரம் லிங்கம் நிசமான கெவுரியுடன் மனோசிலையும் பச்சை பூட்டையிலே பாஷாணம் முதார் சிங்கு புகழான வீரமுடன் பூரம் காரம் வாட்டையிலே தங்க இடை சரியாய்ப் போட்டு மைந்தனே வெடியுப்பு நீரால் ஆட்டே . ஆட்டிநன்றாய் வழித்துருட்டி வட்டுப் பண்ணி அப்பனே ரவிமுகத்தில் காய வைத்துத் தாட்டிகமாய் ஓட்டில்வைத்து ஓடு மூடிச் சந்துவாய் தெரியாமல் மண்ணும் பூசி வாட்டுவாய் புடந்தனிலே மைந்தா நீயும் மகத்தான செந்தூரங் கண்கொள்ளாது நாட்டிநன்றாய் இவ்விதமாய்ச் சிந்தூரஞ் செய்து நாலான காரியமும் வகையாய்ப் பாரே . 593