சௌமிய சாகரம்

141 பாரப்பா உள்ளமதைத் தினமும் மைந்தா பத்திகொண்டு சுத்தமுடன் பார்த்தாயானால் பேரப்பாபெற்றதொரு உள்ளந்தானும் பெருமையுடன் தான்பார்க்குமுறைமை வைத்துக் காரப்பாகருணைவளர் அமுர்த போதம் கண்ணறிந்த போதமதால் யோகத் தேகிச் சாரப்பாசராசரமேதானாய் நின்று சங்கற்ப விகற்பமதிற் சார்ந்து தள்ளே. 535 தள்ளுவது யாரையென்றால் மைந்தா கேளு தன்னுணர்வு இல்லாத சமயத் தோரை உள்ளுணர்ந்து உள்ளமதைக்காரார் தன்னை உத்தசிவ சத்திபத மறியார் தன்னை நல்லுணர்வாய்ப் பேசாத நாய்கள் தன்னை நாதாந்த வேதமதைக்காணார்தன்னைச் சொல்லுணர்வாய் நாவில் வைத்துப் பேச வேண்டாம் சோதிமய மானசிவ ஞானம் பாரே. 536 பாரடாசிவஞானம் என்னவென்றால் பாருலகில் நின்றவுயிர்ப் பயிர்க ளெல்லாம் நேரடாதன்னகம்போற் காண வேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்க வேணும் காரடாசகலகலைக் கியான மெல்லாம் கருத்துகந்து பூரணமாய்க்காணவேணும் மேரடாமேருகிரி அந்தங் கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கு வாறே. 537 வாறான உலகமது மாய வாழ்க்கை மகத்தான வாழ்க்கையிலே மருவி நின்று நேரான நிச்செயத்தை அறியா மற்றான் நிசமான வெளியென்றும் ஒளிதா னென்றும் பேறாக ஈஸ்பரமென்றும் பிரம மென்றும் பெருகிநின்ற சத்தியென்றும் சிவம்தா னென்றும் கூறாக யோகமென்றும் எண்ணியெண்ணிக் கொண்டு நின்ற நிச்செயத்தை அறியார் காணே. 538
141 பாரப்பா உள்ளமதைத் தினமும் மைந்தா பத்திகொண்டு சுத்தமுடன் பார்த்தாயானால் பேரப்பாபெற்றதொரு உள்ளந்தானும் பெருமையுடன் தான்பார்க்குமுறைமை வைத்துக் காரப்பாகருணைவளர் அமுர்த போதம் கண்ணறிந்த போதமதால் யோகத் தேகிச் சாரப்பாசராசரமேதானாய் நின்று சங்கற்ப விகற்பமதிற் சார்ந்து தள்ளே . 535 தள்ளுவது யாரையென்றால் மைந்தா கேளு தன்னுணர்வு இல்லாத சமயத் தோரை உள்ளுணர்ந்து உள்ளமதைக்காரார் தன்னை உத்தசிவ சத்திபத மறியார் தன்னை நல்லுணர்வாய்ப் பேசாத நாய்கள் தன்னை நாதாந்த வேதமதைக்காணார்தன்னைச் சொல்லுணர்வாய் நாவில் வைத்துப் பேச வேண்டாம் சோதிமய மானசிவ ஞானம் பாரே . 536 பாரடாசிவஞானம் என்னவென்றால் பாருலகில் நின்றவுயிர்ப் பயிர்க ளெல்லாம் நேரடாதன்னகம்போற் காண வேணும் நேர்மையுடன் சத்தியமாய் நிற்க வேணும் காரடாசகலகலைக் கியான மெல்லாம் கருத்துகந்து பூரணமாய்க்காணவேணும் மேரடாமேருகிரி அந்தங் கண்டு விள்ளாத பொருளதுவே விளங்கு வாறே . 537 வாறான உலகமது மாய வாழ்க்கை மகத்தான வாழ்க்கையிலே மருவி நின்று நேரான நிச்செயத்தை அறியா மற்றான் நிசமான வெளியென்றும் ஒளிதா னென்றும் பேறாக ஈஸ்பரமென்றும் பிரம மென்றும் பெருகிநின்ற சத்தியென்றும் சிவம்தா னென்றும் கூறாக யோகமென்றும் எண்ணியெண்ணிக் கொண்டு நின்ற நிச்செயத்தை அறியார் காணே . 538