சௌமிய சாகரம்

137 காணுவதும் பூணுவதும் பாசமாகும் கலங்குவதும் முழங்குவதும் பாச மாகும் பேணுவதும் பிசத்துவதும் பாச மாகும் பெருகுவதுங் குறுகுவதும் பாச மாகும் பூணுவதும் போற்றுவதும் பாச மாகும் போதநெறி யானதுவும் பாசமாகும் தோணுவதுஞ்சுற்றுவதும் பாசமாகும் சுத்தமுடன் நின்றபடி தன்னுள் பாரே. பாரப்பாதன்னுள்ளே புகுந்து பார்க்கில் பாழான பிருதிலிதான் மண்ணாய்ப் போச்சு நேரப்பா அப்பதுவுந்தண்ணீராச்சு நிசமான தேய்வதுவுந்தீயு மாச்சு காரப்பாவாய்வதுவும் காத்து மாச்சு கருவான ஆகாசம்சாட்சி யாச்சு தேரப்பா அது அதுவும் அதுவே ஆச்சு தேட்டமென்ன வாட்டமென்ன தெளிந்து பாரே. 521 தெளிந்து நிலை தனையறிந்து தெளிந்து பார்க்கில் தெளிவறிந்து சொல்வதற்கு நாவங்கில்லை அளிந்தந்த வடிவான வடிவே யல்லால் அரூபமென்றும் ரூபமென்றும் மருளப் போமோ? நெளிந்து மனம் போகாமலழுந்தி யந்த நேரறிந்து நிலையறிந்து நின்றால் மைந்தா வளிந்தோடிப் போகாது அந்தத் தேரு மாதவமே பேதகமாய் வாழுங்காணே. ரசக்கட்டு நாகசுத்தி காணவே சூதத்தின் கட்டுச் சொல்வேன் கருணைவளர்சூதமது பலந்தானொன்று பூணவே கல்வத்தில் இட்டுக் கொண்டு புத்தியுடன் வெத்திலைச்சார் செங்கல் தூளும் பேணவே மத்தித்துக்கழுவிப் போட்டுப் பிலமான ரவிதனிலே காய்ந்த பின்பு நொணவே வழலை பச்சைத்துருசுங்கூட்டிச் சுந்தமுடன் நாதவிந்தை விட்டு ஆட்டே. 23
137 காணுவதும் பூணுவதும் பாசமாகும் கலங்குவதும் முழங்குவதும் பாச மாகும் பேணுவதும் பிசத்துவதும் பாச மாகும் பெருகுவதுங் குறுகுவதும் பாச மாகும் பூணுவதும் போற்றுவதும் பாச மாகும் போதநெறி யானதுவும் பாசமாகும் தோணுவதுஞ்சுற்றுவதும் பாசமாகும் சுத்தமுடன் நின்றபடி தன்னுள் பாரே . பாரப்பாதன்னுள்ளே புகுந்து பார்க்கில் பாழான பிருதிலிதான் மண்ணாய்ப் போச்சு நேரப்பா அப்பதுவுந்தண்ணீராச்சு நிசமான தேய்வதுவுந்தீயு மாச்சு காரப்பாவாய்வதுவும் காத்து மாச்சு கருவான ஆகாசம்சாட்சி யாச்சு தேரப்பா அது அதுவும் அதுவே ஆச்சு தேட்டமென்ன வாட்டமென்ன தெளிந்து பாரே . 521 தெளிந்து நிலை தனையறிந்து தெளிந்து பார்க்கில் தெளிவறிந்து சொல்வதற்கு நாவங்கில்லை அளிந்தந்த வடிவான வடிவே யல்லால் அரூபமென்றும் ரூபமென்றும் மருளப் போமோ ? நெளிந்து மனம் போகாமலழுந்தி யந்த நேரறிந்து நிலையறிந்து நின்றால் மைந்தா வளிந்தோடிப் போகாது அந்தத் தேரு மாதவமே பேதகமாய் வாழுங்காணே . ரசக்கட்டு நாகசுத்தி காணவே சூதத்தின் கட்டுச் சொல்வேன் கருணைவளர்சூதமது பலந்தானொன்று பூணவே கல்வத்தில் இட்டுக் கொண்டு புத்தியுடன் வெத்திலைச்சார் செங்கல் தூளும் பேணவே மத்தித்துக்கழுவிப் போட்டுப் பிலமான ரவிதனிலே காய்ந்த பின்பு நொணவே வழலை பச்சைத்துருசுங்கூட்டிச் சுந்தமுடன் நாதவிந்தை விட்டு ஆட்டே . 23