சௌமிய சாகரம்

112 செயலான செயலறிந்து செயலைக் காணத் திரமான தீர்க்கமொன்று செப்பக் கேளு மயலான மயல்கருத்து மவுனங் கொண்டு மகத்தான கேசரியாமண்டத் தேகிச் சுயமான பூரணமாஞ் சோதித் தாயைச் சுத்தமுடன் தான்வணங்கித் தொழுது போத்தி நயமாக வைத்துரிமை செய்து கொண்டு நாதாந்தப் பூரணத்தை நயமாய் வாங்கே. 423 வாங்கியந்தப் பூரணத்தை மைந்தா நீயும் வணக்கமுடன் பீங்கானில் வைத்துப் போற்றிப் பாங்குபெற ரவிபீசம் அறிவாய்ச் சேர்த்துப் பதமாக மத்தித்து ரவியில் வைத்துச் சாங்கமாய்க் காய்ந்தபின்பு எடுத்துப் பாரு சதாசிவத்தின் செயலதனால் மெழுகாய்ப் போகும் பூங்கமல அமுர்தரசமெழுகை வாங்கிப் புத்தியுடன் சத்திசிவ வாலை சேரே. 424 சேரப்பா அஞ்சையுமே ஒன்றாய்ச் சேர்த்துத் திறமாக மத்தித்து ரவியில் போடு சாரப்பா இன்னமொரு கருமானங்கேள் சத்தியுப்பு தன்னுடனே வீரம் பூரம் காரப்பாகருவறிந்து சேர்த்துக் கொண்டு கலசமதில் தானமிழ்த்தித் தயிலம் வாங்கி நேரப்பா முன்சொன்ன அஞ்சும் போட்டு நிசமானதைலத்தை விட்டுக் கிண்டே. 425 கிண்டிமிகத் தானெடுத்து ரவியிற் போட்டுக் கிருபையுடன் பீங்கான்தன் தாளி சென்று அண்டகே சரிமாது தன்னைப் போற்றி ஆக்கைநிலை தனையறிந்து அந்தி சந்தி குன்றிமணி யளவெடுத்துக் கொண்டாயானால் குடிலமென்ற தீவினைகள்காணா தோடும் எண்டிசையுங் கீர்த்தி பெற வாழ்வாயப்பா இன்பரசகாயாதி கற்பந்தானே. 426
112 செயலான செயலறிந்து செயலைக் காணத் திரமான தீர்க்கமொன்று செப்பக் கேளு மயலான மயல்கருத்து மவுனங் கொண்டு மகத்தான கேசரியாமண்டத் தேகிச் சுயமான பூரணமாஞ் சோதித் தாயைச் சுத்தமுடன் தான்வணங்கித் தொழுது போத்தி நயமாக வைத்துரிமை செய்து கொண்டு நாதாந்தப் பூரணத்தை நயமாய் வாங்கே . 423 வாங்கியந்தப் பூரணத்தை மைந்தா நீயும் வணக்கமுடன் பீங்கானில் வைத்துப் போற்றிப் பாங்குபெற ரவிபீசம் அறிவாய்ச் சேர்த்துப் பதமாக மத்தித்து ரவியில் வைத்துச் சாங்கமாய்க் காய்ந்தபின்பு எடுத்துப் பாரு சதாசிவத்தின் செயலதனால் மெழுகாய்ப் போகும் பூங்கமல அமுர்தரசமெழுகை வாங்கிப் புத்தியுடன் சத்திசிவ வாலை சேரே . 424 சேரப்பா அஞ்சையுமே ஒன்றாய்ச் சேர்த்துத் திறமாக மத்தித்து ரவியில் போடு சாரப்பா இன்னமொரு கருமானங்கேள் சத்தியுப்பு தன்னுடனே வீரம் பூரம் காரப்பாகருவறிந்து சேர்த்துக் கொண்டு கலசமதில் தானமிழ்த்தித் தயிலம் வாங்கி நேரப்பா முன்சொன்ன அஞ்சும் போட்டு நிசமானதைலத்தை விட்டுக் கிண்டே . 425 கிண்டிமிகத் தானெடுத்து ரவியிற் போட்டுக் கிருபையுடன் பீங்கான்தன் தாளி சென்று அண்டகே சரிமாது தன்னைப் போற்றி ஆக்கைநிலை தனையறிந்து அந்தி சந்தி குன்றிமணி யளவெடுத்துக் கொண்டாயானால் குடிலமென்ற தீவினைகள்காணா தோடும் எண்டிசையுங் கீர்த்தி பெற வாழ்வாயப்பா இன்பரசகாயாதி கற்பந்தானே . 426