சௌமிய சாகரம்

101 வாசியென்ற சிவயோகம் தனக்கு மைந்தா மகத்தான காரமுள்ள மூப்புச் சொல்வேன் தேசியென்ற உப்புடனே காரம் பூரம் திரமாக மூன்று மொன்றாய்க் கல்வத்திட்டு ஊசியென்ற உப்புநீர் தன்னாலாட்டி. உறுதியுடன் தானெடுத்து வட்டுப் பண்ணி மாசியென்ற எருவதனாற் சிறுபுடத்தைப் போடு மகத்தான சுண்ணமிது காரந்தானே! 379 தானென்ற காரமடா அண்டச்சத்து தருவான பூமியுட நாத சத்து வானென்ற வீரமடாபூரச்சத்து மார்க்கமுடன் சத்துவகை மூன்றுங் கூட்டி மானென்ற கல்வமதில் நன்றாயாட்டி மனதிருக வழித்துருட்டிப் புடத்தைப் போடு ஊனென்ற சத்துவகை மூன்று மொன்றாய் உடன்சேர்ந்து உருகியது சுண்ணமாச்சே! மூப்புச்சுண்ணம் ஆச்சப்பா இன்னமொரு சுண்ணம் சொல்வேன் ஆதியென்ற பூரமுடன் அந்தஞ் சேர்த்துக் காச்சப்பாகளும்பானதுருசு கூட்டிக் கல்வமதில் பழச்சாற்றால் நன்றாயாட்டி மூச்சப்பாதானிறுக ரவியிற் போட்டு முன்னவனைத் தான்பணிந்து புடத்தைப் போடு நீச்சப்பா நிலையறிந்த கார மாச்சு நிசமானகாரம் வெகு சுண்ணம் பாரே! 381 பாரப்பா சுண்ணவகை மூன்று மொன்றாய்ப் பக்குவமாய்க் கல்வத்தில் வைத்துக் கொண்டு காரப்பா அறுவகைநீர்தன்னாலாட்டிக் கருணைபெற வழித்துருட்டி ரவியிற் போட்டுச் சாரப்பா நீர்வத்த நன்றாய்க் காய்ந்தால் சற்குருவைத் தான்பணிந்து புடத்தைப் போடு வீறப்பாதானொடுங்கி நீறிப் போகும் வெகுசுருக்கு மூன்றுவகை சுண்ணந்தானே! 382
101 வாசியென்ற சிவயோகம் தனக்கு மைந்தா மகத்தான காரமுள்ள மூப்புச் சொல்வேன் தேசியென்ற உப்புடனே காரம் பூரம் திரமாக மூன்று மொன்றாய்க் கல்வத்திட்டு ஊசியென்ற உப்புநீர் தன்னாலாட்டி . உறுதியுடன் தானெடுத்து வட்டுப் பண்ணி மாசியென்ற எருவதனாற் சிறுபுடத்தைப் போடு மகத்தான சுண்ணமிது காரந்தானே ! 379 தானென்ற காரமடா அண்டச்சத்து தருவான பூமியுட நாத சத்து வானென்ற வீரமடாபூரச்சத்து மார்க்கமுடன் சத்துவகை மூன்றுங் கூட்டி மானென்ற கல்வமதில் நன்றாயாட்டி மனதிருக வழித்துருட்டிப் புடத்தைப் போடு ஊனென்ற சத்துவகை மூன்று மொன்றாய் உடன்சேர்ந்து உருகியது சுண்ணமாச்சே ! மூப்புச்சுண்ணம் ஆச்சப்பா இன்னமொரு சுண்ணம் சொல்வேன் ஆதியென்ற பூரமுடன் அந்தஞ் சேர்த்துக் காச்சப்பாகளும்பானதுருசு கூட்டிக் கல்வமதில் பழச்சாற்றால் நன்றாயாட்டி மூச்சப்பாதானிறுக ரவியிற் போட்டு முன்னவனைத் தான்பணிந்து புடத்தைப் போடு நீச்சப்பா நிலையறிந்த கார மாச்சு நிசமானகாரம் வெகு சுண்ணம் பாரே ! 381 பாரப்பா சுண்ணவகை மூன்று மொன்றாய்ப் பக்குவமாய்க் கல்வத்தில் வைத்துக் கொண்டு காரப்பா அறுவகைநீர்தன்னாலாட்டிக் கருணைபெற வழித்துருட்டி ரவியிற் போட்டுச் சாரப்பா நீர்வத்த நன்றாய்க் காய்ந்தால் சற்குருவைத் தான்பணிந்து புடத்தைப் போடு வீறப்பாதானொடுங்கி நீறிப் போகும் வெகுசுருக்கு மூன்றுவகை சுண்ணந்தானே ! 382