சௌமிய சாகரம்

100 கரநியாசம் முத்தியுள்ள கரத்தின்விரல் மகிமை தன்னை மோனமுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு பத்தியுள்ள அங்குட்டம் பெருவிரலாய் நிற்கும் பதிவாக அடுத்தவிரல் தற்சனியாமைந்தா சித்தியுள்ள நடுவிரல்தான் மத்திமையாய் நிற்கும் திருவான பவுத்திரந்தான் அனாமிகந்தானய்யா சுத்தமுள்ள சுண்டுவிரல் கனுட்டையென லாகுஞ் சுகமாக இதையறிந்து முத்திரையைச் செய்யே! 375 செய்யப்பா பூசைவிதி யந்த மாகும் சிவசிவாயாதியந்தம் ஆர்தான் காண்பார்? மெய்யப்பா ஆதியிலே அமைத்தவிதி மைந்தா! மெய்ஞான மூலமடா ஓங்காரந்தான் மையப்பா ஓங்காரம் ரவியு மாச்சு மகத்தான மகாரமடா மதியு மாச்சு பையப்பா ரவிமதியுந் தானே நின்று பார்க்க இரு கண்காட்சி தானுண்டாச்சே! 376 ஆச்சப்பா அமைந்தவிதி யிதுதானாச்சு ஆதியந்த பூரணமு மிதுதானாச்சு மூச்சப்பா நின்றவிட மிதுதானாச்சு மூவுலகு மாண்டயிட மிதுதானாச்சு காச்சப்பா அந்த இடம் சொந்த மாச்சு காலறிந்து மேலானகமலக் கண்ணைப் பாச்சப்பாகாலறிந்து இடைபின்னாகப் பகுத்தறிந்து மூலமதிற் பதிவாய் நில்லே . 377 பதிவான இடமதுதான் புருவ மத்தி பரஞான கேசரியாளிருக்கும் வீடு விதியான வீடறிந்து கெதியென் றெண்ணி மெய்ஞான அமுதரசங் கொண்டாயானால் மதியான சந்திரகலை ரவியிற் சென்று மகத்தான சோதி பிரகாசங்காணும் கெதியான சோதிபிரகாசங்கண்டால் கேசரத்தை யாளுகிற வாசிதானே! 378
100 கரநியாசம் முத்தியுள்ள கரத்தின்விரல் மகிமை தன்னை மோனமுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு பத்தியுள்ள அங்குட்டம் பெருவிரலாய் நிற்கும் பதிவாக அடுத்தவிரல் தற்சனியாமைந்தா சித்தியுள்ள நடுவிரல்தான் மத்திமையாய் நிற்கும் திருவான பவுத்திரந்தான் அனாமிகந்தானய்யா சுத்தமுள்ள சுண்டுவிரல் கனுட்டையென லாகுஞ் சுகமாக இதையறிந்து முத்திரையைச் செய்யே ! 375 செய்யப்பா பூசைவிதி யந்த மாகும் சிவசிவாயாதியந்தம் ஆர்தான் காண்பார் ? மெய்யப்பா ஆதியிலே அமைத்தவிதி மைந்தா ! மெய்ஞான மூலமடா ஓங்காரந்தான் மையப்பா ஓங்காரம் ரவியு மாச்சு மகத்தான மகாரமடா மதியு மாச்சு பையப்பா ரவிமதியுந் தானே நின்று பார்க்க இரு கண்காட்சி தானுண்டாச்சே ! 376 ஆச்சப்பா அமைந்தவிதி யிதுதானாச்சு ஆதியந்த பூரணமு மிதுதானாச்சு மூச்சப்பா நின்றவிட மிதுதானாச்சு மூவுலகு மாண்டயிட மிதுதானாச்சு காச்சப்பா அந்த இடம் சொந்த மாச்சு காலறிந்து மேலானகமலக் கண்ணைப் பாச்சப்பாகாலறிந்து இடைபின்னாகப் பகுத்தறிந்து மூலமதிற் பதிவாய் நில்லே . 377 பதிவான இடமதுதான் புருவ மத்தி பரஞான கேசரியாளிருக்கும் வீடு விதியான வீடறிந்து கெதியென் றெண்ணி மெய்ஞான அமுதரசங் கொண்டாயானால் மதியான சந்திரகலை ரவியிற் சென்று மகத்தான சோதி பிரகாசங்காணும் கெதியான சோதிபிரகாசங்கண்டால் கேசரத்தை யாளுகிற வாசிதானே ! 378