சௌமிய சாகரம்

99 பாரடா மோகினிமுத்திரையைச் சொல்வேன் பதிவாக இருகையுங் கூப்பிக் கொண்டு நேரடாதற்சனியிரு விரலும் விரித்து நேரான அங்குட்ட மத்தியிலும் படவே காரடா மத்தியிலுங்கனுட்டைமுனை படவே கையறிந்து கொண்டதினால் மோகினிமுத்திரையாஞ் சேரடா முத்திரையைக் கையறிந்து கொண்டு தீர்க்கமுடன் ஓமென்று செபித்துக் காணே! 371 காணவே நிருவாணிமுத்திரையைக் கேளு! கைகூட்டித் தற்சனியிரு விரலும் விரித்துப் பூணவே மத்திமைஅனாமிகை மூன்றும் போதமுடன் விரலழுந்து திராவினைமுத்திரையாம் பேணவே முத்திரையைக் குருவருளாற் கண்டு பிலமாக வங்கென்று தியானித்தாக்கால் தோணவே சகலசித்தி தானே உண்டாய்ச் சுத்தமுடன் வசீகரமாய் வாழுந்தானே! 372 தானென்ற யோனிமுத்திரையைக் கேளு! சங்கையுடன் சொல்லுகிறேன் அங்குட்டம் ரெண்டும் பூணென்ற கனுட்டையடி விரல்படவே வைத்துப் பொருந்தரெண்டு கைகூப்பிப் பிடித்துக் கொண்டால் தேனென்ற யோனிமுத்திரையும் ஆச்சு செம்மையுடன் முத்திரையைத் தீர்க்கம் பண்ணி ஊனென்ற ரீங்காரம் மனதிற் கொண்டு உறுதியுடன் தான்செபிக்கத் தேவதைகள் சித்தே! 373 சித்தமுடன் பூசைவிதி தன்னில் மைந்தா தீர்க்கமுடன் பதினாறு முத்திரைகள் சொன்னேன் சுத்தமுள்ள முத்திரைகள் தன்னிலேதான் சுகமான ஆறுவகை முத்திரைகள் நன்று பத்தியுடன் ஆறுவகை முத்திரையினாலே பகுத்தறிந்து ஆதார தெரிசனைகள் பெற்று வித்தான பிறவிதனை நன்றாய் நீக்கி வேதாந்த பூரணமாய் விளங்க முத்தி. 374
99 பாரடா மோகினிமுத்திரையைச் சொல்வேன் பதிவாக இருகையுங் கூப்பிக் கொண்டு நேரடாதற்சனியிரு விரலும் விரித்து நேரான அங்குட்ட மத்தியிலும் படவே காரடா மத்தியிலுங்கனுட்டைமுனை படவே கையறிந்து கொண்டதினால் மோகினிமுத்திரையாஞ் சேரடா முத்திரையைக் கையறிந்து கொண்டு தீர்க்கமுடன் ஓமென்று செபித்துக் காணே ! 371 காணவே நிருவாணிமுத்திரையைக் கேளு ! கைகூட்டித் தற்சனியிரு விரலும் விரித்துப் பூணவே மத்திமைஅனாமிகை மூன்றும் போதமுடன் விரலழுந்து திராவினைமுத்திரையாம் பேணவே முத்திரையைக் குருவருளாற் கண்டு பிலமாக வங்கென்று தியானித்தாக்கால் தோணவே சகலசித்தி தானே உண்டாய்ச் சுத்தமுடன் வசீகரமாய் வாழுந்தானே ! 372 தானென்ற யோனிமுத்திரையைக் கேளு ! சங்கையுடன் சொல்லுகிறேன் அங்குட்டம் ரெண்டும் பூணென்ற கனுட்டையடி விரல்படவே வைத்துப் பொருந்தரெண்டு கைகூப்பிப் பிடித்துக் கொண்டால் தேனென்ற யோனிமுத்திரையும் ஆச்சு செம்மையுடன் முத்திரையைத் தீர்க்கம் பண்ணி ஊனென்ற ரீங்காரம் மனதிற் கொண்டு உறுதியுடன் தான்செபிக்கத் தேவதைகள் சித்தே ! 373 சித்தமுடன் பூசைவிதி தன்னில் மைந்தா தீர்க்கமுடன் பதினாறு முத்திரைகள் சொன்னேன் சுத்தமுள்ள முத்திரைகள் தன்னிலேதான் சுகமான ஆறுவகை முத்திரைகள் நன்று பத்தியுடன் ஆறுவகை முத்திரையினாலே பகுத்தறிந்து ஆதார தெரிசனைகள் பெற்று வித்தான பிறவிதனை நன்றாய் நீக்கி வேதாந்த பூரணமாய் விளங்க முத்தி . 374