சௌமிய சாகரம்

86 ஒண்ணான நிச்சயத்தை உரைக்க வென்றால் உண்ணாக்கும் அண்ணாக்கும் ஒன்றுங் காணேன் கண்ணான பேரொளியை என்ன சொல்வேன் கருப்பல்ல வெளுப்பல்ல சிவப்பு மல்ல விண்ணான நீலமல்ல பச்சை யல்ல விளிம்புதற்கு அரிதான அண்டத்துள்ளே பண்ணான பாழ்விட்டு இருளுக் குள்ளே பாய்ந்துதன்னைப் பார்க்கவெல்லாம் இருளாய்ப்போச்சே! இருளான இருளினுட ஒளியைப் பார்க்க என்னசொல்வேன் அதினுடைய இன்பந் தன்னை மருளான மனம்நிறுத்தி மனக்கண் கொண்டு மாசற்ற இருளொளியை மகிழ்ந்தோர் தானும் அருளான பேருலகில் தானே தானாய். அமர்ந்துவெளி தனையறிந்து ஒளியைப் பற்றி வெருளாமல் இருளருளிற் றானே தானாய் விளங்குமருள் பொருளெனவே மேவு வாரே! 321 மேவுகின்ற ஆதியந்தம் உதிக்கு முன்னே மெய்ஞ்ஞான இருளதிலே அருளுண்டாச்சு தாவுகின்ற அருளதிலே ஒளியுண்டாச்சு தன்னொளிவு தானதினால் வெளியுண்டாச்சு கூவுகின்ற பரவெளியிற் சதாசி வன்றான் கூர்மையுடன் பேரண்டம் படைத்து நின்றார் பாவுகின்ற மயேஸ்வரனார் சத்தத் தோடே பதிவான வாய்வுதனைப் படைத்தார் பாரே 322 பஞ்சகர்த்தாபடைப்பு மார்க்கம் பாரப்பாருத்திரனார்தவத்தால் வந்த பக்குவமாய் அக்கினியைப் படைத்து நின்றார் பேரப்பாபெற்றதொரு பிரமாவுந்தான் பெருகிநின்ற பூமிதனைப் படைத்தாரையா நேரப்பாதிருமால்தான் கருணையாலே நிச்சயமாய்ச் செலமதனைப் படைத்து நின்றார் காரப்பாமுன்சொன்னசத்திசிவம் ரெண்டும் கருணையுடன் ரவிமதியும் ஆனார் தானே 323
86 ஒண்ணான நிச்சயத்தை உரைக்க வென்றால் உண்ணாக்கும் அண்ணாக்கும் ஒன்றுங் காணேன் கண்ணான பேரொளியை என்ன சொல்வேன் கருப்பல்ல வெளுப்பல்ல சிவப்பு மல்ல விண்ணான நீலமல்ல பச்சை யல்ல விளிம்புதற்கு அரிதான அண்டத்துள்ளே பண்ணான பாழ்விட்டு இருளுக் குள்ளே பாய்ந்துதன்னைப் பார்க்கவெல்லாம் இருளாய்ப்போச்சே ! இருளான இருளினுட ஒளியைப் பார்க்க என்னசொல்வேன் அதினுடைய இன்பந் தன்னை மருளான மனம்நிறுத்தி மனக்கண் கொண்டு மாசற்ற இருளொளியை மகிழ்ந்தோர் தானும் அருளான பேருலகில் தானே தானாய் . அமர்ந்துவெளி தனையறிந்து ஒளியைப் பற்றி வெருளாமல் இருளருளிற் றானே தானாய் விளங்குமருள் பொருளெனவே மேவு வாரே ! 321 மேவுகின்ற ஆதியந்தம் உதிக்கு முன்னே மெய்ஞ்ஞான இருளதிலே அருளுண்டாச்சு தாவுகின்ற அருளதிலே ஒளியுண்டாச்சு தன்னொளிவு தானதினால் வெளியுண்டாச்சு கூவுகின்ற பரவெளியிற் சதாசி வன்றான் கூர்மையுடன் பேரண்டம் படைத்து நின்றார் பாவுகின்ற மயேஸ்வரனார் சத்தத் தோடே பதிவான வாய்வுதனைப் படைத்தார் பாரே 322 பஞ்சகர்த்தாபடைப்பு மார்க்கம் பாரப்பாருத்திரனார்தவத்தால் வந்த பக்குவமாய் அக்கினியைப் படைத்து நின்றார் பேரப்பாபெற்றதொரு பிரமாவுந்தான் பெருகிநின்ற பூமிதனைப் படைத்தாரையா நேரப்பாதிருமால்தான் கருணையாலே நிச்சயமாய்ச் செலமதனைப் படைத்து நின்றார் காரப்பாமுன்சொன்னசத்திசிவம் ரெண்டும் கருணையுடன் ரவிமதியும் ஆனார் தானே 323