சௌமிய சாகரம்

53 ஆமென்ற மகாரமுடன்மைந்தா கேளு அருள்பெருக அகாரமுடனுகாரங் கூட்டி ஓமென்ற பிரணவத்தின் மகிமை யாலே உறுதியுடன் மூன்றெழுத்துஞ் செபித்தா யாகில் தாமென்ற தன்னிலையே பிரம மாகித் தானாகித்தானவனாய் தான்தானாவாய் நாமென்ற நாதாந்த மூர்த்தி யாலே நடுவெழுந்த மூன்றெழுத்துஞ் சித்தி காணே. 199 காணவே மூன்றெழுத்துங்கருணையாகக் கட்டாகச் செய்தபின்பு இன்னங் கேளு பேணவே சிகாரமென்றால் ஆர்தான் காண்பார் பேரண்ட மானபூரணமே யாகும் தோணவே பூரணத்தைக் கண்டு கொண்டு சுகமான சிவசத்தி வாலை யோடே பூணவே தானிருத்திச் செபித்தால் மைந்தா பூரணமாய்க் காயசித்தி புனித மாமே. 200 புனிதமுடன்தானிருந்து பூசை பண்ணிப் பொற்கமல உச்சியிலே மனத்தை வைத்து இனிதமுடன் வகாரமென்றால் வாசி யாச்சு ஏகமென்ற வாசியிலே இன்பம் வைத்துக் கனிகரண மானசிவசத்தி வாலை கண்ணான பூரணந்தான் நாலுங் கூட்டி மனிகரனமானதொரு அஞ்சுமைந்தா மகஸ்த்தான பஞ்சகெண தீட்சையாச்சே! 201 ஆச்சப்பாபஞ்சகெண தீட்சை யோத அப்பனே வகைவிபரம் நன்றாய்க் கேளு நீச்சப்பாசிவதீட்சை உதய மாகும் நிசமாக மாலையிலே சத்தி தீட்சை பேச்சப்பா பேசாத வாலை தீட்சை பேணிமனங் கண்டவுடன் தெண்டம் பண்ணு மூச்சப்பாநிறைந்ததொரு வாம ரூப முத்திகொண்ட பஞ்சகண நாதந்தானே! 202
53 ஆமென்ற மகாரமுடன்மைந்தா கேளு அருள்பெருக அகாரமுடனுகாரங் கூட்டி ஓமென்ற பிரணவத்தின் மகிமை யாலே உறுதியுடன் மூன்றெழுத்துஞ் செபித்தா யாகில் தாமென்ற தன்னிலையே பிரம மாகித் தானாகித்தானவனாய் தான்தானாவாய் நாமென்ற நாதாந்த மூர்த்தி யாலே நடுவெழுந்த மூன்றெழுத்துஞ் சித்தி காணே . 199 காணவே மூன்றெழுத்துங்கருணையாகக் கட்டாகச் செய்தபின்பு இன்னங் கேளு பேணவே சிகாரமென்றால் ஆர்தான் காண்பார் பேரண்ட மானபூரணமே யாகும் தோணவே பூரணத்தைக் கண்டு கொண்டு சுகமான சிவசத்தி வாலை யோடே பூணவே தானிருத்திச் செபித்தால் மைந்தா பூரணமாய்க் காயசித்தி புனித மாமே . 200 புனிதமுடன்தானிருந்து பூசை பண்ணிப் பொற்கமல உச்சியிலே மனத்தை வைத்து இனிதமுடன் வகாரமென்றால் வாசி யாச்சு ஏகமென்ற வாசியிலே இன்பம் வைத்துக் கனிகரண மானசிவசத்தி வாலை கண்ணான பூரணந்தான் நாலுங் கூட்டி மனிகரனமானதொரு அஞ்சுமைந்தா மகஸ்த்தான பஞ்சகெண தீட்சையாச்சே ! 201 ஆச்சப்பாபஞ்சகெண தீட்சை யோத அப்பனே வகைவிபரம் நன்றாய்க் கேளு நீச்சப்பாசிவதீட்சை உதய மாகும் நிசமாக மாலையிலே சத்தி தீட்சை பேச்சப்பா பேசாத வாலை தீட்சை பேணிமனங் கண்டவுடன் தெண்டம் பண்ணு மூச்சப்பாநிறைந்ததொரு வாம ரூப முத்திகொண்ட பஞ்சகண நாதந்தானே ! 202