சௌமிய சாகரம்

48 தானேதான் தன்மயமாய்ச் சாட்சியாகத் தன்மையுடன் பூரணமாய் நின்றாயானால் கோனேதான்தானவனாயிருவர் தங்கு குருவான நவக்கிரக சூட்சத் தாலே பூணேநீ பொற்கமல உச்சி மீதிற் பூரணமாய் நின்றிலங்கும் போதத்தாயே தானேதான் நீயெனவேதன்மையாக நாட்டமுடன் வாசியினில் நயந்து பாரே. 179 பாரப்பா நயனவெளி சூட்சத்தாலே பதிவான மூலமதில் ஆறாதாரங் காரப்பா ஆதாரலிங்க பீடம் கண்ணிறைந்த முச்சுடராங்கமல பீடம் நேரப்பா நின்றதொரு விந்து பீடம் நின்றிலங்குங் கற்பூர தீப பீடம் ஆரப்பா அறிவார்கள் ஆதி பீடம் அந்தரங்கப் பீடமதைப் பூசை பண்ணே . 180 பூசைநெறி யறியாமல் ஆண்பெண் ரெண்டும் பொல்லாத மாய்கைவலை தன்னிற் சென்று ஆசைகொண்டு மோகமதால் அறிவுங் கெட்டு அங்கமென்ற சங்கதியை அறியா மற்றான் பாசமென்ற பலருசியில் மனத ழுந்திப் பரகதியை யறியாத பாவி மாரோ ஓசைபெறச்சத்தமுதித் தொடுங்கும் வீட்டை உத்தமனே கண்ணாலே நித்தம் பாரே. 181 கணபதி பூசை நித்தமும்நின் புத்தியுடன் பார்த்து மைந்தா நேர்மையுடன் அந்திசந்தி பூசை பண்ணச் சுத்தமுடன் சொல்லுகிறேன் புலத்தியாகேள் சோதியென்ற ஆதார மூலம் பார்த்துப் பத்தியுடன் அய்யுங்கிலியு ஓமென்று நீயும் பதிவாக மானதமா உருவே செய்தால் சித்தியுள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா சிந்தைதனில் ஒளிவிளக்காய்த் தெரிசிப்பாயே 182
48 தானேதான் தன்மயமாய்ச் சாட்சியாகத் தன்மையுடன் பூரணமாய் நின்றாயானால் கோனேதான்தானவனாயிருவர் தங்கு குருவான நவக்கிரக சூட்சத் தாலே பூணேநீ பொற்கமல உச்சி மீதிற் பூரணமாய் நின்றிலங்கும் போதத்தாயே தானேதான் நீயெனவேதன்மையாக நாட்டமுடன் வாசியினில் நயந்து பாரே . 179 பாரப்பா நயனவெளி சூட்சத்தாலே பதிவான மூலமதில் ஆறாதாரங் காரப்பா ஆதாரலிங்க பீடம் கண்ணிறைந்த முச்சுடராங்கமல பீடம் நேரப்பா நின்றதொரு விந்து பீடம் நின்றிலங்குங் கற்பூர தீப பீடம் ஆரப்பா அறிவார்கள் ஆதி பீடம் அந்தரங்கப் பீடமதைப் பூசை பண்ணே . 180 பூசைநெறி யறியாமல் ஆண்பெண் ரெண்டும் பொல்லாத மாய்கைவலை தன்னிற் சென்று ஆசைகொண்டு மோகமதால் அறிவுங் கெட்டு அங்கமென்ற சங்கதியை அறியா மற்றான் பாசமென்ற பலருசியில் மனத ழுந்திப் பரகதியை யறியாத பாவி மாரோ ஓசைபெறச்சத்தமுதித் தொடுங்கும் வீட்டை உத்தமனே கண்ணாலே நித்தம் பாரே . 181 கணபதி பூசை நித்தமும்நின் புத்தியுடன் பார்த்து மைந்தா நேர்மையுடன் அந்திசந்தி பூசை பண்ணச் சுத்தமுடன் சொல்லுகிறேன் புலத்தியாகேள் சோதியென்ற ஆதார மூலம் பார்த்துப் பத்தியுடன் அய்யுங்கிலியு ஓமென்று நீயும் பதிவாக மானதமா உருவே செய்தால் சித்தியுள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா சிந்தைதனில் ஒளிவிளக்காய்த் தெரிசிப்பாயே 182