சௌமிய சாகரம்

34 காணப்பா பரமசிவ மருளுண்டாகக் கருணையுள்ள திருமாதைக் கண்ணால் மேவிப் பூணவே சதாசிவத்தைப் பார்க்கும் போது புத்தியுடன் பேரண்டம் படைத்து நின்றார் ஊணவே மயேஸ்பரனைப் பார்க்க வேதான் உருமிடியும் வாய்வுதனைப் படைத்து நின்றார் தோணவே ருத்திரனைக் கண்ணால் பார்க்கத் துலங்குமின்ன லக்கினியும் படைத்தார் பாரே. 124 பாரான திருமாலைப் பார்க்கும் போது பதிவானகடல்மேகம் படைத்து நின்றார் ஆரான பிரமனையும் நோக்கும் போது அளவற்ற பூமிதனைப் படைத்து நின்றார் நேரான சத்திதனைக் கண்ணால் மேவ நிசமான சூரியனைப் படைத்து நின்றார் பேரான சிவமதுவும் மதியாநின்றார் பெருமையுடன் எழுவர்அதி காரங் காணே. 125 காணவே அண்டவரையிதுதான்மைந்தா காசினியி லன்புடையோ ரதிகஞ் சொல்லார் தோணவே கண்டபடி அண்டந்தன்னைத் தொகுத்துரைக்க மாட்டார்கள்கணங்கச் சாதி பேணவே அண்டமதில் மனுஉண்டாக்கும் பெருமைதனைக் குருவருளால் பேசு வேன்கேள் பூணவே மேலேழுலோகந் தன்னைப் புத்தியுடன் பலவிதமாய்ப் படைத்தார் கேளே! 126 கேளப்பாலோகமதைப் படைத்த பின்பு கிருபையுடன் பரமசிவ மனுவுண்டாக்க கேளப்பாசத்திதனை வரவழைத்துக் கெனிதமுடன் மனுபடைக்க விபரஞ் செய்தார் கேளப்பாபராபரையின் கிருபை பெற்றுக் கெனிதமுடன் சதாசிவத்துக்குபதே சித்தார் கேளப்பா சதாசிவனுங்கிருபை பெற்றுக் கெதியுடைய மயேஸ்பரற்கு மீந்தார் பாரே. 127
34 காணப்பா பரமசிவ மருளுண்டாகக் கருணையுள்ள திருமாதைக் கண்ணால் மேவிப் பூணவே சதாசிவத்தைப் பார்க்கும் போது புத்தியுடன் பேரண்டம் படைத்து நின்றார் ஊணவே மயேஸ்பரனைப் பார்க்க வேதான் உருமிடியும் வாய்வுதனைப் படைத்து நின்றார் தோணவே ருத்திரனைக் கண்ணால் பார்க்கத் துலங்குமின்ன லக்கினியும் படைத்தார் பாரே . 124 பாரான திருமாலைப் பார்க்கும் போது பதிவானகடல்மேகம் படைத்து நின்றார் ஆரான பிரமனையும் நோக்கும் போது அளவற்ற பூமிதனைப் படைத்து நின்றார் நேரான சத்திதனைக் கண்ணால் மேவ நிசமான சூரியனைப் படைத்து நின்றார் பேரான சிவமதுவும் மதியாநின்றார் பெருமையுடன் எழுவர்அதி காரங் காணே . 125 காணவே அண்டவரையிதுதான்மைந்தா காசினியி லன்புடையோ ரதிகஞ் சொல்லார் தோணவே கண்டபடி அண்டந்தன்னைத் தொகுத்துரைக்க மாட்டார்கள்கணங்கச் சாதி பேணவே அண்டமதில் மனுஉண்டாக்கும் பெருமைதனைக் குருவருளால் பேசு வேன்கேள் பூணவே மேலேழுலோகந் தன்னைப் புத்தியுடன் பலவிதமாய்ப் படைத்தார் கேளே ! 126 கேளப்பாலோகமதைப் படைத்த பின்பு கிருபையுடன் பரமசிவ மனுவுண்டாக்க கேளப்பாசத்திதனை வரவழைத்துக் கெனிதமுடன் மனுபடைக்க விபரஞ் செய்தார் கேளப்பாபராபரையின் கிருபை பெற்றுக் கெனிதமுடன் சதாசிவத்துக்குபதே சித்தார் கேளப்பா சதாசிவனுங்கிருபை பெற்றுக் கெதியுடைய மயேஸ்பரற்கு மீந்தார் பாரே . 127