சௌமிய சாகரம்

வெளியீட்டாளர் முகவுரை அரிய இலக்கியச் சுவடிகளையும் மருத்துவச் சுவடிகளையும் தன்னகத்தே கொண்ட சரசுவதி மகால் நூலகம், பன்மொழிச் சுவடிகளையும் தொடர்ந்து சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றது. அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வருகின்ற அரும்பணியின் தொடர்ச்சியாக சௌமிய சாகரம் என்னும் தமிழ்நூல் ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பெற்று தற்சமயம் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்படுகின்றது. இந்நூல், சரசுவதி மகால் நூலகத் தமிழ்த் துறையில் இடம் பெற்றுள்ள 319ஆம் எண்ணிட்ட ஓலைச் சுவடியை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப் பெற்றதாகும். செய்யுள் நடையில் அமைந்த இந்நூல், சித்தர்தம் படைப்பாகத் திகழ்கின்றது. அகத்தியர் பெயரால் வழங்கும் இந்நூல் மருத்துவச் செய்திகளையும், யோக ஞான வேதாந்த சாரங்களையும் தெளிவுற எடுத்துரைக்கின்றது.
வெளியீட்டாளர் முகவுரை அரிய இலக்கியச் சுவடிகளையும் மருத்துவச் சுவடிகளையும் தன்னகத்தே கொண்ட சரசுவதி மகால் நூலகம் பன்மொழிச் சுவடிகளையும் தொடர்ந்து சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டு வருகின்றது . அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வருகின்ற அரும்பணியின் தொடர்ச்சியாக சௌமிய சாகரம் என்னும் தமிழ்நூல் ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பெற்று தற்சமயம் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்படுகின்றது . இந்நூல் சரசுவதி மகால் நூலகத் தமிழ்த் துறையில் இடம் பெற்றுள்ள 319ஆம் எண்ணிட்ட ஓலைச் சுவடியை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப் பெற்றதாகும் . செய்யுள் நடையில் அமைந்த இந்நூல் சித்தர்தம் படைப்பாகத் திகழ்கின்றது . அகத்தியர் பெயரால் வழங்கும் இந்நூல் மருத்துவச் செய்திகளையும் யோக ஞான வேதாந்த சாரங்களையும் தெளிவுற எடுத்துரைக்கின்றது .