சௌமிய சாகரம்

314 தானேதான் தானாகப் பூரணத்தில் நின்று சகலவுயிர்தானாகத் தானே எண்ணி ஊனேதான் உள்ளுணர்வாய்க் கண்டு கொண்டால் உற்றசிவ யோகியென உரைக்கலாகும் பேணவே சிவயோகியானால் மைந்தா பேசாத மவுனமதிற் கெவுனஞ் சொல்வான் பூணவே இத்தனைக்கும் வருவதென்ன? புத்தியுடன் விட்டகுறை வேளை பாரே. 119 வேளையிலே விட்டகுறை அமைப்பே யாச்சு வேதாந்த நந்திகுறை கண்ணிற் காணும் சாளையமாய்ப் போகாது தன்னைக் காட்டிச் சச்சுதானந்தபூரணமுங் கூட்டிக் கோளையெல்லாங்கக்கிவைத்ததமரைக் காட்டிக் குறிப்பாகத் தொடுகுறியாந்தமரைக் காட்டித் தாளைநினை வாய்திறந்து அமுர்த மூட்டிச் சாதிக்கும் யோகத்தின் நிலைசொல் வாரே. 1190 சொல்லடா ஓங்காரச் சூட்சந்தன்னைச் சூரியன் போல் வட்ட மதாயிருக்கு தென்று சொல்லடாமவுனமிது நாதமிது வென்றுஞ் சுமுனையென்றும் விந்துவென்றும் நந்தி மூலம் சொல்லடா அதின்வட்டம் உள்சூட் சந்தான் தொடுகுறி போல் சண்முகமாம் அறுகோணத்தில் சொல்லடா இதினுள்ளே முக்கோணத்திற் சோதியெனுங் கண்டநுனி சொர்க்கந்தானே. 1191
314 தானேதான் தானாகப் பூரணத்தில் நின்று சகலவுயிர்தானாகத் தானே எண்ணி ஊனேதான் உள்ளுணர்வாய்க் கண்டு கொண்டால் உற்றசிவ யோகியென உரைக்கலாகும் பேணவே சிவயோகியானால் மைந்தா பேசாத மவுனமதிற் கெவுனஞ் சொல்வான் பூணவே இத்தனைக்கும் வருவதென்ன ? புத்தியுடன் விட்டகுறை வேளை பாரே . 119 வேளையிலே விட்டகுறை அமைப்பே யாச்சு வேதாந்த நந்திகுறை கண்ணிற் காணும் சாளையமாய்ப் போகாது தன்னைக் காட்டிச் சச்சுதானந்தபூரணமுங் கூட்டிக் கோளையெல்லாங்கக்கிவைத்ததமரைக் காட்டிக் குறிப்பாகத் தொடுகுறியாந்தமரைக் காட்டித் தாளைநினை வாய்திறந்து அமுர்த மூட்டிச் சாதிக்கும் யோகத்தின் நிலைசொல் வாரே . 1190 சொல்லடா ஓங்காரச் சூட்சந்தன்னைச் சூரியன் போல் வட்ட மதாயிருக்கு தென்று சொல்லடாமவுனமிது நாதமிது வென்றுஞ் சுமுனையென்றும் விந்துவென்றும் நந்தி மூலம் சொல்லடா அதின்வட்டம் உள்சூட் சந்தான் தொடுகுறி போல் சண்முகமாம் அறுகோணத்தில் சொல்லடா இதினுள்ளே முக்கோணத்திற் சோதியெனுங் கண்டநுனி சொர்க்கந்தானே . 1191