சௌமிய சாகரம்

297 சுத்தமுடன் நின்றுவிளைய யாடு தற்குத் தொடுகுறிபோல் இன்னமொரு சூட்சஞ் சொல்வேன் பத்தமுடன் ஏகாந்த சித்த மாகிப் பரமகயிலாசகுரு பாதம் போற்றிப் புத்தியுடன் நின்றுதிரு வாசி யேறிப் பூரணமாஞ் சுழுனையிலே மனக்கண் சாத்திச் சத்தமுடன் ஒங்கார விசையினாலே சரியையிலே நின்றுமனந் தாங்கி நில்லே. 1121 நில்லடா சரியையிலே நின்று தேறி நிசமான கிரியையிலே தேர்ந்து கொண்டு உள்ளடா உடலறிந்து யோகம் பண்ணு உண்மையென்ற யோகமதி லுறுதி யானால் செல்லடா ஞானமென்ற நிலையில் நின்று திருவான பூரணத்தைக் கண்டு கொண்டு சொல்லடா சொல் நிறைந்த மவுனத் தேகிச் சுகமறிந்து சூட்சநிலை கண்டு கொள்ளே. 1122 கண்டதொரு நாலுக்கும் பகையே தென்றால் கசடானகாமியமாஞ் சித்தத்தாலே விண்டதொரு பிராரத்வகர்மத்தாலே விளங்கிநின்ற நாலுக்கும் விக்கினங்க ளாச்சே கொண்டதொரு நாலுதனைச் சொல்லக் கேளு கொடிதான வறுமையொடு கிலேசந் தீரும் சென்றதொரு பெண்ணாசை மண்பொன்னாசை செகத்திலுள்ளோர் தான்மயங்கித் தியங்கு வாரே.1123 தியங்கினால் வாசியது மயங்கிப் போகும் திறமறியா மானிடர்கள் செகத்தினுள்ளே மயங்கினார் மாய்கையிலே மகிழ்ந்து கொண்டு மாசற்ற சோதியிலே மனஞ்செல்லாமல் தயங்குகின்ற காமவலைக் குள்ளே சென்று தன்னிலையைத் தானறிய மாட்டாமல்தான் மயங்கியதோர் மயக்கத்தால் ஞானம் போச்சு மகத்தான அறிவதும் மாண்டு போச்சு. 1124
297 சுத்தமுடன் நின்றுவிளைய யாடு தற்குத் தொடுகுறிபோல் இன்னமொரு சூட்சஞ் சொல்வேன் பத்தமுடன் ஏகாந்த சித்த மாகிப் பரமகயிலாசகுரு பாதம் போற்றிப் புத்தியுடன் நின்றுதிரு வாசி யேறிப் பூரணமாஞ் சுழுனையிலே மனக்கண் சாத்திச் சத்தமுடன் ஒங்கார விசையினாலே சரியையிலே நின்றுமனந் தாங்கி நில்லே . 1121 நில்லடா சரியையிலே நின்று தேறி நிசமான கிரியையிலே தேர்ந்து கொண்டு உள்ளடா உடலறிந்து யோகம் பண்ணு உண்மையென்ற யோகமதி லுறுதி யானால் செல்லடா ஞானமென்ற நிலையில் நின்று திருவான பூரணத்தைக் கண்டு கொண்டு சொல்லடா சொல் நிறைந்த மவுனத் தேகிச் சுகமறிந்து சூட்சநிலை கண்டு கொள்ளே . 1122 கண்டதொரு நாலுக்கும் பகையே தென்றால் கசடானகாமியமாஞ் சித்தத்தாலே விண்டதொரு பிராரத்வகர்மத்தாலே விளங்கிநின்ற நாலுக்கும் விக்கினங்க ளாச்சே கொண்டதொரு நாலுதனைச் சொல்லக் கேளு கொடிதான வறுமையொடு கிலேசந் தீரும் சென்றதொரு பெண்ணாசை மண்பொன்னாசை செகத்திலுள்ளோர் தான்மயங்கித் தியங்கு வாரே . 1123 தியங்கினால் வாசியது மயங்கிப் போகும் திறமறியா மானிடர்கள் செகத்தினுள்ளே மயங்கினார் மாய்கையிலே மகிழ்ந்து கொண்டு மாசற்ற சோதியிலே மனஞ்செல்லாமல் தயங்குகின்ற காமவலைக் குள்ளே சென்று தன்னிலையைத் தானறிய மாட்டாமல்தான் மயங்கியதோர் மயக்கத்தால் ஞானம் போச்சு மகத்தான அறிவதும் மாண்டு போச்சு . 1124