சௌமிய சாகரம்

பாரப்பா நயனமது மனக்கண்ணாச்சு பதிவானதீபமது மனக்கண்ணாச்சு நேரப்பா வாசியது மனக்கண்ணாச்சு நேர்மையுள்ள சிவயோக மனக்கண்ணாச்சு சாரப்பா குருமொழியும் மனக்கண் ணாச்சு சகலகலைக் கியானமெல்லாம் மனக்கண்ணாச்சு தேரப்பா தெரிசனமும் மனக்கண்ணாச்சு சிவசிவா சின்மயமும் மனக்கண்ணாமே. 754 கண்ணான விண்ணறிந்து கால்கொண்டூணிக் கருணைவளர் கேசரியிற் கருத்தை வைத்து முன்னான முச்சுடரின் நடுவி லேதான் முதலான ஞானசிவ சோதி சூட்சம் ஒண்ணான சூட்சமதை யூணிப் பார்க்க உண்மையென்ற அதிசயத்தை யென்ன சொல்வேன்? விண்ணான அதிசயத்தைப் பார்க்க வென்றால் வேதமுறை தவறாமற் சிவமே செய்யே. 755 செய்யப்பா சிவமதுதான் செய்ய வென்றால் தீர்க்கமுள்ள ருத்திராட்ச செயத்தைக் கேளு மையப்பா மய்யமென்ற சுமுனைக் கண்ணாய் வளர்ந்துமிகப் பொருதிருத்தி ராட்சமாச்சு மெய்யப்பாருத்திரனே குடியாய் நின்று மேல்கீழும் ஒன்றான தமர்தானாச்சு பையப்பாதமர்வாசலறிந்து சேர்ந்து பத்தியுடன் சிவதவபிராணாயஞ் செய்யே. 756 வாரங்களிலஷ்டசித்து செய்யடா பிராணாயம் நன்றாய்ச் செய்ய சிவதலத்தில் மனதுருமை யாக நின்று மெய்யடா சொல்லுகிறேன் ஆதி வாரம் மேன்மையுள்ள வசீரகத்துக் குருமை யாச்சு மையடாமய்யனென்ற சோம வாரம் மகத்தான மோகனங்கள் வரிசையாகும் கையடாதவறாது செவ்வாய் மைந்தா கனதையுள்ளதம்பனத்துக்கடிதானாமே. 757
பாரப்பா நயனமது மனக்கண்ணாச்சு பதிவானதீபமது மனக்கண்ணாச்சு நேரப்பா வாசியது மனக்கண்ணாச்சு நேர்மையுள்ள சிவயோக மனக்கண்ணாச்சு சாரப்பா குருமொழியும் மனக்கண் ணாச்சு சகலகலைக் கியானமெல்லாம் மனக்கண்ணாச்சு தேரப்பா தெரிசனமும் மனக்கண்ணாச்சு சிவசிவா சின்மயமும் மனக்கண்ணாமே . 754 கண்ணான விண்ணறிந்து கால்கொண்டூணிக் கருணைவளர் கேசரியிற் கருத்தை வைத்து முன்னான முச்சுடரின் நடுவி லேதான் முதலான ஞானசிவ சோதி சூட்சம் ஒண்ணான சூட்சமதை யூணிப் பார்க்க உண்மையென்ற அதிசயத்தை யென்ன சொல்வேன் ? விண்ணான அதிசயத்தைப் பார்க்க வென்றால் வேதமுறை தவறாமற் சிவமே செய்யே . 755 செய்யப்பா சிவமதுதான் செய்ய வென்றால் தீர்க்கமுள்ள ருத்திராட்ச செயத்தைக் கேளு மையப்பா மய்யமென்ற சுமுனைக் கண்ணாய் வளர்ந்துமிகப் பொருதிருத்தி ராட்சமாச்சு மெய்யப்பாருத்திரனே குடியாய் நின்று மேல்கீழும் ஒன்றான தமர்தானாச்சு பையப்பாதமர்வாசலறிந்து சேர்ந்து பத்தியுடன் சிவதவபிராணாயஞ் செய்யே . 756 வாரங்களிலஷ்டசித்து செய்யடா பிராணாயம் நன்றாய்ச் செய்ய சிவதலத்தில் மனதுருமை யாக நின்று மெய்யடா சொல்லுகிறேன் ஆதி வாரம் மேன்மையுள்ள வசீரகத்துக் குருமை யாச்சு மையடாமய்யனென்ற சோம வாரம் மகத்தான மோகனங்கள் வரிசையாகும் கையடாதவறாது செவ்வாய் மைந்தா கனதையுள்ளதம்பனத்துக்கடிதானாமே . 757