சௌமிய சாகரம்

157 பாரப்பா இன்னமொரு சூட்சஞ் சொல்வேன் பதிவான அயமுடனேவெள்ளி செம்பு நேரப்பாதங்கமுடன் நாலு மைந்தா நீ மகனே ஓரிடையாய்த் தகடு செய்து காரப்பா பழச்சாற்றில் போட்டு மைந்தா கருணையுடன் மறுநாள்தான் கழுவிப் போட்டுச் சேரப்பா நாலுவகைத் தகட்டை மைந்தா செம்மையுடன் குகையிலிடு காரம் போடே. 595 போடப்பாகாரமிட்டு உருக்கிப் பாரு பூரணமாய் நாலுமொன்றாய் உருகி நிற்கும் நாடப்பா உருகுமுகந்தன்னைப் பார்த்து நாதாந்த ரசமுடனே நாகங் கூட்டிச் சூடப்பா உருகுமுகந்தன்னி லீயச் சுருக்காக நாலும் ரெண்டும் குருவாய்ப் போகும் ஆடப்பா குருவெடுத்து வைத்துக் கொண்டு அனுதினமும் சற்குருவைப் பணிந்து போற்றே. 596 பணிந்துநின்று சற்குருவைத் தியானம் பண்ணிப் பதிவான வெள்ளியிலே பத்துக் கொன்று கனிந்து மனங்கனியவே குடுத்துப் பாரு கனிந்துமிக உருகியது கனக மாகும் அணிந்து அந்தக் கனகமதைப் பூசை பண்ணி அட்டாங்க யோகமதால் திட்டம் பார்த்தால் தணிந்துலகம் உனது பதம் பணியுமையா தானவனாய் நீயிருந்து தன்னைப் பாரே, 597 தன்னைப்பார்தன்னறிவின்கண்ணால் நீயும் தானறிந்து பார்ப்பதற்குச்சங்கே கேளு விண்ணப்பாத்தந்த நிலை தன்னில் நின்று வேதாந்த சத்திசிவ பூசை பண்ணிக் கண்ணப்பா மனக்கண்ணால் வாலை பூசை கருத்துவைத்துக் கேசரியில் கால் கொண்டூணி உண்ணப்பா பூரணமே கெதியென் றெண்ணி ஊடாடும் வாசியை நீ உற்றுப் பாரே. 598
157 பாரப்பா இன்னமொரு சூட்சஞ் சொல்வேன் பதிவான அயமுடனேவெள்ளி செம்பு நேரப்பாதங்கமுடன் நாலு மைந்தா நீ மகனே ஓரிடையாய்த் தகடு செய்து காரப்பா பழச்சாற்றில் போட்டு மைந்தா கருணையுடன் மறுநாள்தான் கழுவிப் போட்டுச் சேரப்பா நாலுவகைத் தகட்டை மைந்தா செம்மையுடன் குகையிலிடு காரம் போடே . 595 போடப்பாகாரமிட்டு உருக்கிப் பாரு பூரணமாய் நாலுமொன்றாய் உருகி நிற்கும் நாடப்பா உருகுமுகந்தன்னைப் பார்த்து நாதாந்த ரசமுடனே நாகங் கூட்டிச் சூடப்பா உருகுமுகந்தன்னி லீயச் சுருக்காக நாலும் ரெண்டும் குருவாய்ப் போகும் ஆடப்பா குருவெடுத்து வைத்துக் கொண்டு அனுதினமும் சற்குருவைப் பணிந்து போற்றே . 596 பணிந்துநின்று சற்குருவைத் தியானம் பண்ணிப் பதிவான வெள்ளியிலே பத்துக் கொன்று கனிந்து மனங்கனியவே குடுத்துப் பாரு கனிந்துமிக உருகியது கனக மாகும் அணிந்து அந்தக் கனகமதைப் பூசை பண்ணி அட்டாங்க யோகமதால் திட்டம் பார்த்தால் தணிந்துலகம் உனது பதம் பணியுமையா தானவனாய் நீயிருந்து தன்னைப் பாரே 597 தன்னைப்பார்தன்னறிவின்கண்ணால் நீயும் தானறிந்து பார்ப்பதற்குச்சங்கே கேளு விண்ணப்பாத்தந்த நிலை தன்னில் நின்று வேதாந்த சத்திசிவ பூசை பண்ணிக் கண்ணப்பா மனக்கண்ணால் வாலை பூசை கருத்துவைத்துக் கேசரியில் கால் கொண்டூணி உண்ணப்பா பூரணமே கெதியென் றெண்ணி ஊடாடும் வாசியை நீ உற்றுப் பாரே . 598