சௌமிய சாகரம்

95 தாயாகியாதார மூல மாகித் தண்ணொளிவும் விண்ணொளிவும் தான்தானாகித் தீயாகிக் காற்றாகி வானு மாகிச் சிவமாகி மண்ணாகிப் புனலு மாகி வாயாகிக் கண்ணாகி மூக்கு மாகி வானிறைந்த காத்தாகிப்பரிசமாகிச் சேயாகித் திருவாகிச் செல்வ மாகித் தேவிமனோன் மணியான கண்ணேயென்னே! 356 கண்ணாகிக் கண்ணிறைந்த சாட்சியாகிக் கருணைவளர் கற்பூரதீபமாகி ஒண்ணாகிச் சத்திசிவ மிரண்டு மாகி உத்தகலை ரவிமதியின் சுடர்மூன் றாகி விண்ணாகி வேதமென்ற நாலு மாகி வேதாந்தப் பஞ்சகர்த்தாள் அஞ்சு மாகி முன்னாகிச்சடாட்சரங்கள் ஆறு மாகி முத்தியுள்ள வகைத்தோற்ற மேழு மாமே. 357 ஆமென்ற அஷ்டாங்கம் எட்டு மாகி ஆதிநவக் கிரகமுடன் தீட்சையாகி ஓமென்ற தீட்சைதனக் குயிராய் நின்று ஓங்கார றீங்கார உருவு மாகி நாமென்ற நவ்வுடனே மவ்வு மாகி நலமான சிவ்வுடனே வவ்வும் யவ்வாய்த் தாமென்ற அய்யுடனே கிலியு மாகிச் சகலவுயிர் சிவ்வாகி நின்ற தாயே! 358 தாயாகி மூலகணபதியு மாகித் தன்மையுள்ள நான்முகனும் மாலு மாகித் தீயாகிருத்திரனும் மயேசனாகிச் சிவசிவா சதாசிவனும் மனோன்மணியு மாகி ஓயாத முச்சுடரும் ஒளியு மாகி ஒன்றுமற்று நின்ற பொருள் தானு மாகி வாயார ஓதுகின்ற மந்திரமு மாகி மந்திரமெல்லாமடங்குஞ் சோதி தானே! 350
95 தாயாகியாதார மூல மாகித் தண்ணொளிவும் விண்ணொளிவும் தான்தானாகித் தீயாகிக் காற்றாகி வானு மாகிச் சிவமாகி மண்ணாகிப் புனலு மாகி வாயாகிக் கண்ணாகி மூக்கு மாகி வானிறைந்த காத்தாகிப்பரிசமாகிச் சேயாகித் திருவாகிச் செல்வ மாகித் தேவிமனோன் மணியான கண்ணேயென்னே ! 356 கண்ணாகிக் கண்ணிறைந்த சாட்சியாகிக் கருணைவளர் கற்பூரதீபமாகி ஒண்ணாகிச் சத்திசிவ மிரண்டு மாகி உத்தகலை ரவிமதியின் சுடர்மூன் றாகி விண்ணாகி வேதமென்ற நாலு மாகி வேதாந்தப் பஞ்சகர்த்தாள் அஞ்சு மாகி முன்னாகிச்சடாட்சரங்கள் ஆறு மாகி முத்தியுள்ள வகைத்தோற்ற மேழு மாமே . 357 ஆமென்ற அஷ்டாங்கம் எட்டு மாகி ஆதிநவக் கிரகமுடன் தீட்சையாகி ஓமென்ற தீட்சைதனக் குயிராய் நின்று ஓங்கார றீங்கார உருவு மாகி நாமென்ற நவ்வுடனே மவ்வு மாகி நலமான சிவ்வுடனே வவ்வும் யவ்வாய்த் தாமென்ற அய்யுடனே கிலியு மாகிச் சகலவுயிர் சிவ்வாகி நின்ற தாயே ! 358 தாயாகி மூலகணபதியு மாகித் தன்மையுள்ள நான்முகனும் மாலு மாகித் தீயாகிருத்திரனும் மயேசனாகிச் சிவசிவா சதாசிவனும் மனோன்மணியு மாகி ஓயாத முச்சுடரும் ஒளியு மாகி ஒன்றுமற்று நின்ற பொருள் தானு மாகி வாயார ஓதுகின்ற மந்திரமு மாகி மந்திரமெல்லாமடங்குஞ் சோதி தானே ! 350