குமாரசுவாமியம்

306 ஒருநாள் முழுவதும் ஒருபுறமாகச் சரம் ஓடில் வருடம் ஒன்றில் மரணம். இரண்டு நாள் ஓடில் ஒரு அயனத்தில் மரணம், மூன்று நாள் ஓடில் நாள் இருபத்தேழில் மரணம். சரீரம் அசையாமல் நிழல் அசையில் பதினைந்து நாளில் மரணம். வாய் நீர் உமிழும்போது வானவில்போலும் பஞ்ச நிறமும் வளைதலும் இல்லாமல் நேர் ஓடிலும், நிலத்தில் காணிலும், செவிக்குள் ஓசை அறியிலும், ருசி பேதிக்கிலும், நயன விழிப்பு ஒளிக்கிலும் பத்து நாளையில் மரணம். இதனமேல் திரிமல சம்பிரதாயவியல் சொல்லுவோம். காலமறிதல் படலம் முற்றிற்று. ஆகப்படலம் ஐம்பதிற்குக் கவி 411 51. திரிமல சம்பிரதாயப் படலம் புதுமலர்வா சனைதனம்பூ விரிமனம்சம் போகம் புத்திரர்பா லுற்றவர்பொன் றுவதுசுண்ணாம் புக்காம் மதமதனத் தேன்ரோகம் பானகம்அற் பாயுள் மலடுபுலால் நாவிமணம் தீர்க்காயு வனசம் சுகரதிக முவர்தொழும்புற் றிடல்கமுகின் பாளை சுகமதிகம் சுவறலிற்று விடில்சுடிறுக் கமுகா மிதமில்வெறுத் திடலிறைச்சி மலமிறப்பிந் திரியத் தியல்புமிதாம் இதன்மேல்சின் னீரதனுக் கியல்பே. 412 இந்திரியம் விடும் போது புதுமலர் வாசனை வீசில் தனம் உண்டாம். பூவிரி வாசம் வீசில் சம்போகம், பால்போலும்கமழில் புத்திரப்பேறு. சுண்ணாம்பு நாற்றமாகில் பெற்றிழப்பு. யானை மதம் போலும் வீசில் தரித்திரம், தேன் போலும்கமழில் ரோகம். பானகம் போலும் மணக்கில் அற்பாயுள், புலால் நாற்றம் தோன்றில் மலடி. கஸ்தூரிபோலும் பரிமளிக்கில் தீர்க்காயுள். தாமரைபோல்வாசிக்கில் வெகுபுத்திரர். உவர் நாற்றம் தோன்றில் தொண்டுபடல். கமுகின் பாளைபோலும் மணக்கில் அதிகசுகம். சுவறுதல், இற்றுவிழுதல், சுடுதல் இவையாகில் துக்கம். சதா ஓடி சஞ்சலம் இறைச்சி, மலம் போலும் நாற்றம் தோன்றில் மரண காலம். இதன் மேல் சிறுநீர் இயல்பு சொல்லுவோம்.
306 ஒருநாள் முழுவதும் ஒருபுறமாகச் சரம் ஓடில் வருடம் ஒன்றில் மரணம் . இரண்டு நாள் ஓடில் ஒரு அயனத்தில் மரணம் மூன்று நாள் ஓடில் நாள் இருபத்தேழில் மரணம் . சரீரம் அசையாமல் நிழல் அசையில் பதினைந்து நாளில் மரணம் . வாய் நீர் உமிழும்போது வானவில்போலும் பஞ்ச நிறமும் வளைதலும் இல்லாமல் நேர் ஓடிலும் நிலத்தில் காணிலும் செவிக்குள் ஓசை அறியிலும் ருசி பேதிக்கிலும் நயன விழிப்பு ஒளிக்கிலும் பத்து நாளையில் மரணம் . இதனமேல் திரிமல சம்பிரதாயவியல் சொல்லுவோம் . காலமறிதல் படலம் முற்றிற்று . ஆகப்படலம் ஐம்பதிற்குக் கவி 411 51 . திரிமல சம்பிரதாயப் படலம் புதுமலர்வா சனைதனம்பூ விரிமனம்சம் போகம் புத்திரர்பா லுற்றவர்பொன் றுவதுசுண்ணாம் புக்காம் மதமதனத் தேன்ரோகம் பானகம்அற் பாயுள் மலடுபுலால் நாவிமணம் தீர்க்காயு வனசம் சுகரதிக முவர்தொழும்புற் றிடல்கமுகின் பாளை சுகமதிகம் சுவறலிற்று விடில்சுடிறுக் கமுகா மிதமில்வெறுத் திடலிறைச்சி மலமிறப்பிந் திரியத் தியல்புமிதாம் இதன்மேல்சின் னீரதனுக் கியல்பே . 412 இந்திரியம் விடும் போது புதுமலர் வாசனை வீசில் தனம் உண்டாம் . பூவிரி வாசம் வீசில் சம்போகம் பால்போலும்கமழில் புத்திரப்பேறு . சுண்ணாம்பு நாற்றமாகில் பெற்றிழப்பு . யானை மதம் போலும் வீசில் தரித்திரம் தேன் போலும்கமழில் ரோகம் . பானகம் போலும் மணக்கில் அற்பாயுள் புலால் நாற்றம் தோன்றில் மலடி . கஸ்தூரிபோலும் பரிமளிக்கில் தீர்க்காயுள் . தாமரைபோல்வாசிக்கில் வெகுபுத்திரர் . உவர் நாற்றம் தோன்றில் தொண்டுபடல் . கமுகின் பாளைபோலும் மணக்கில் அதிகசுகம் . சுவறுதல் இற்றுவிழுதல் சுடுதல் இவையாகில் துக்கம் . சதா ஓடி சஞ்சலம் இறைச்சி மலம் போலும் நாற்றம் தோன்றில் மரண காலம் . இதன் மேல் சிறுநீர் இயல்பு சொல்லுவோம் .