குமாரசுவாமியம்

255 3. முகூர்த்தகாண்டம் 38. தினாதி சுபாசுபப் படலம் உதயவரெண் ணிலதிக்கில் ஒருகோணத் திலகு மொளிக்கொளியற் றுண்மழங்கவு தித்தொளிர்பே ரழகென் விதயமுள தாகவறி வீனமுள புழுவுக் கிறகுயிர்ப்பத் தன்னுயிராய் இயற்றியவேட் டுவப்பேர் அதயுமுரைப் பதற்காய்ச்செய் வனபோனா யடியேற் கருள்சுரந்தா ளக்கடனென் றாண்டுகொண்டாய் அதனால் விதையும் விதைக் கிடமுமென மேவியலா ! வேறா விண்ணப்ப மொன்றுளதென் றேத்தினன்வே ணியனே, 337 எண்ணிறந்த கோடி சூரியர் உதிக்கிலும் ஒரு கோணத்தில் இலங்கா நின்ற ஒளிக்கும் ஒளியற்று உள்மழுங்கும்படி அதிகப் பிரகாசமாகப் பிரகாசியா நின்ற நினது திருவழகு என் இதயத்தில் உளதாகும்படி அறிவீனம் உள்ள புழுவுக்கு இறகும் உயிரும் உண்டாகத் தனது வடிவமாய்ச் செய்த தன்னுடைய பெயரும் கொடுத்த வேட்டுவக் குளவியின் தன்மையைப் போல தேவரீர் ! திருவுளம் இரங்கித் தடுத்தாட்கொண்டு அருளவேண்டும், கடனுக்காக நாயடியேனை ஆட்கொண்டவா ! விதையும் விதைக்கு இடமுமாக மேவியவா ! திருச்செவிக்கு ஏறாதாயினும் அடியேன் விண்ணப்பம் ஒன்று உள்ளதென்று மிகுதியும் துத்தியம் பண்ணினான் அகத்தியமாமுனிவன், வேணிதென் மலையரவி லென்றனனென் னாமுன் வீழ்ந்தடிதாழ்ந் தெழுந்த முதல் சாதகவி லாசம் காணும்வரை தொகை இனமும் இன்னதின்ன தெனந் காட்டினதென் னிருசெவிக்கும் கனிகனிந்த தூற் றமிர்த ஊணது ஊட்டியபோல் என் னுளத்தினவா வடங்க உரைத்தனையீ தன்றியுள்ள முகூர்த்தவிலா சத்தும் பூணும் விருப் புற்றனனென் றோதுமுனிக் கன்பால் புகன்றனன் முன் நினத்தியலசந் தளப்பொருப்புற் றவனே. 338
255 3 . முகூர்த்தகாண்டம் 38 . தினாதி சுபாசுபப் படலம் உதயவரெண் ணிலதிக்கில் ஒருகோணத் திலகு மொளிக்கொளியற் றுண்மழங்கவு தித்தொளிர்பே ரழகென் விதயமுள தாகவறி வீனமுள புழுவுக் கிறகுயிர்ப்பத் தன்னுயிராய் இயற்றியவேட் டுவப்பேர் அதயுமுரைப் பதற்காய்ச்செய் வனபோனா யடியேற் கருள்சுரந்தா ளக்கடனென் றாண்டுகொண்டாய் அதனால் விதையும் விதைக் கிடமுமென மேவியலா ! வேறா விண்ணப்ப மொன்றுளதென் றேத்தினன்வே ணியனே 337 எண்ணிறந்த கோடி சூரியர் உதிக்கிலும் ஒரு கோணத்தில் இலங்கா நின்ற ஒளிக்கும் ஒளியற்று உள்மழுங்கும்படி அதிகப் பிரகாசமாகப் பிரகாசியா நின்ற நினது திருவழகு என் இதயத்தில் உளதாகும்படி அறிவீனம் உள்ள புழுவுக்கு இறகும் உயிரும் உண்டாகத் தனது வடிவமாய்ச் செய்த தன்னுடைய பெயரும் கொடுத்த வேட்டுவக் குளவியின் தன்மையைப் போல தேவரீர் ! திருவுளம் இரங்கித் தடுத்தாட்கொண்டு அருளவேண்டும் கடனுக்காக நாயடியேனை ஆட்கொண்டவா ! விதையும் விதைக்கு இடமுமாக மேவியவா ! திருச்செவிக்கு ஏறாதாயினும் அடியேன் விண்ணப்பம் ஒன்று உள்ளதென்று மிகுதியும் துத்தியம் பண்ணினான் அகத்தியமாமுனிவன் வேணிதென் மலையரவி லென்றனனென் னாமுன் வீழ்ந்தடிதாழ்ந் தெழுந்த முதல் சாதகவி லாசம் காணும்வரை தொகை இனமும் இன்னதின்ன தெனந் காட்டினதென் னிருசெவிக்கும் கனிகனிந்த தூற் றமிர்த ஊணது ஊட்டியபோல் என் னுளத்தினவா வடங்க உரைத்தனையீ தன்றியுள்ள முகூர்த்தவிலா சத்தும் பூணும் விருப் புற்றனனென் றோதுமுனிக் கன்பால் புகன்றனன் முன் நினத்தியலசந் தளப்பொருப்புற் றவனே . 338