குமாரசுவாமியம்

189| பதினெட்டு. சனி சேகரம் பூச்சியம். இவர்கள் சேகர பலத்துடனே, இவர்கள் கூடும் பாவக வர்க்கம் காரக வர்க்கமும் கூட்டிப் பலன் சொல்லுக. நா உதயவாணி நாயகனுக்குப் புத்திரனானவா ! இதன்மேல் யோகாதிசயப் பலமும் கேட்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளியவன் என்னுடைய இதய செந்தாமரை புட்போதனாகிய சுப்பிரமணியக் கடவுள். கிரக சேகரப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் இருபத்து ஏழிற்குக் கவி 233 28. யோகாதிசயப் படலம் தவமுனியே ! யோகபலத் ததிசயங்கேள் என்ற சடாக்கரனை அகத்தியனும் தாழ்ந்தெவர்க்கு முதலாம் சிவகுருவே இரவிமுதல் சேகரத்துள் ளனவும் சிறிதுசிறி தாய்வகுத்துச் சிறியேனுக் கறிய நவரசசெம் பாகமொரு நாட்குமுதத் தூறி நனையவிந்தூற் றுவபோலும் நவின்றனைஅப் பாலிப் புவனமதில் இவன்யோகப் புருடனெனும் மார்க்கம் புகலெனுமுன் னவன்மனதன் புருகவுரைத் தனனே. 234 தவசினை உடைய அகத்தியமாமுனியே! யோகாதியப் பலமும் கேட்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளிய சடாட்சர ரூபனுக்குச் சித்தம் வரும் பொருட்டு அகத்தியமாமுனிவனும் தெண்டம் பண்ணி யாவர்க்குந் தெய்வமாகிய சிவனுக்கும் குருவாகியவர் சூரியாதி சேகரப் பலனையும் சிறிது சிறிதாக வகுத்து அடியேனுக்குத் தெரியும்படி நவரச செம்பாகம் ஒருநாள் குமுத மலரிடத்தில் ஊறிமுகை அவிழ்ந்து ஊற்றுவது போலத் தேவரீர் திருவுளம் பற்றினது சரி இதன்மேல் பூமியினிடத்தில் இவன் யோகபுருடன் என்று சொல்லும் தன்மை அறியும்படி திருவுளம் பற்றவேண்டும் என்று விண்ணப்பம் செய்யாமுன்னம் அவன் மனது உருகமுபடி திருவாய் மலர்ந்து அருளினவன் சுப்பிரமணியக் கடவுள்.
189 | பதினெட்டு . சனி சேகரம் பூச்சியம் . இவர்கள் சேகர பலத்துடனே இவர்கள் கூடும் பாவக வர்க்கம் காரக வர்க்கமும் கூட்டிப் பலன் சொல்லுக . நா உதயவாணி நாயகனுக்குப் புத்திரனானவா ! இதன்மேல் யோகாதிசயப் பலமும் கேட்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளியவன் என்னுடைய இதய செந்தாமரை புட்போதனாகிய சுப்பிரமணியக் கடவுள் . கிரக சேகரப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் இருபத்து ஏழிற்குக் கவி 233 28 . யோகாதிசயப் படலம் தவமுனியே ! யோகபலத் ததிசயங்கேள் என்ற சடாக்கரனை அகத்தியனும் தாழ்ந்தெவர்க்கு முதலாம் சிவகுருவே இரவிமுதல் சேகரத்துள் ளனவும் சிறிதுசிறி தாய்வகுத்துச் சிறியேனுக் கறிய நவரசசெம் பாகமொரு நாட்குமுதத் தூறி நனையவிந்தூற் றுவபோலும் நவின்றனைஅப் பாலிப் புவனமதில் இவன்யோகப் புருடனெனும் மார்க்கம் புகலெனுமுன் னவன்மனதன் புருகவுரைத் தனனே . 234 தவசினை உடைய அகத்தியமாமுனியே ! யோகாதியப் பலமும் கேட்பாயாக என்று திருவாய் மலர்ந்தருளிய சடாட்சர ரூபனுக்குச் சித்தம் வரும் பொருட்டு அகத்தியமாமுனிவனும் தெண்டம் பண்ணி யாவர்க்குந் தெய்வமாகிய சிவனுக்கும் குருவாகியவர் சூரியாதி சேகரப் பலனையும் சிறிது சிறிதாக வகுத்து அடியேனுக்குத் தெரியும்படி நவரச செம்பாகம் ஒருநாள் குமுத மலரிடத்தில் ஊறிமுகை அவிழ்ந்து ஊற்றுவது போலத் தேவரீர் திருவுளம் பற்றினது சரி இதன்மேல் பூமியினிடத்தில் இவன் யோகபுருடன் என்று சொல்லும் தன்மை அறியும்படி திருவுளம் பற்றவேண்டும் என்று விண்ணப்பம் செய்யாமுன்னம் அவன் மனது உருகமுபடி திருவாய் மலர்ந்து அருளினவன் சுப்பிரமணியக் கடவுள் .