குமாரசுவாமியம்

“குமாரசுவாமியம் ஓர் சோதிட நூல். இது அறிஞர்களால் போற்றப்பெறுவது” என்று சோதிடப் பேரகராதி இந்நூலினைப் பற்றிக் கூறுகிறது. தமிழில் குமாரசுவாமியம் என்ற நூல் இயற்றப்பட்டுள்ளது. இது ஒரு அரிய பெட்டகமாகும். தமிழில் வந்த நூல்களில் மிகவும் சிறந்த நூலாகும் ” என்று சோதிடகலைக் களஞ்சியம் இந்நூலின் சிறப்பினை எடுத்துரைக்கிறது. இன்று அரிதாகக் கிடைக்கும் நூலாக விளங்கும் இக்குமாரசுவாமியத்தின் மூன்று ஏட்டுச் சுவடிகள் தஞ்சை சரபோசி மன்னரின் சரசுவதி மகால் நூல் நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 802 e, 1007 a என்ற சுவடி எண்ணுள்ளவை பதிப்பிற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டன. 802e சுவடியில் படலங்கள் வரிசையின்றி மாறிமாறி அமைந்திருந்தன. பாடல்கள் மிகக் குறைந்த எண்ணிக் கையிலேயே கிடைத்தன. இருப்பினும் உரைப்பகுதி சிறப்பாக அமைந்திருந்தது. 1007 a எண்ணுள்ள சுவடியில் பாடல்கள் முழுமையாக அமைந்திருந்தன. எனவே, இவ்விரு சுவடிகளில் உள்ள செய்திகளையும் ஒன்றாகச் சேர்த்து, நூலுக்கு முழுவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. 15726 என்ற எண்ணுள்ள சுவடி மிகவும் சிறியதாகையால் ஒப்பிடப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. குமாரசுவாமியம் (மயநூல்) என்ற நூல் (சுவடி எண். 9136) ஒன்றும் இந்நூலகத்தில் உள்ளது. மேலும், காளிதாசன் எழுதிய குமாரசுவாமியம் என்ற புராணம் தொடர்பான நூல் ஒன்று இருப்பதும் இங்கு சுட்டத்தக்கது. நூலாசிரியர் வரலாறு குமாரசுவாமியம் என்ற நூலை எழுதியவர் ஸ்ரீ குமார சுவாமியாவார். “வயமுளசந்தாசலசெந்தூர்க்கதிபன் வீரை வருமாறி யாடுபெருமாள்புதல்வனான செயமுகும்ப்ர பலசுமுக குமாரசுவாமிக்கோர் தெய்வமவனுளத்திருந்து திருவுளம்பற்றியதே" (பாயிரம் : 5) 1. சோதிடப் பேரகராதி - பக். 87 2. சோதிடக் கலைக்களஞ்சியம் - பக். 269
குமாரசுவாமியம் ஓர் சோதிட நூல் . இது அறிஞர்களால் போற்றப்பெறுவது என்று சோதிடப் பேரகராதி இந்நூலினைப் பற்றிக் கூறுகிறது . தமிழில் குமாரசுவாமியம் என்ற நூல் இயற்றப்பட்டுள்ளது . இது ஒரு அரிய பெட்டகமாகும் . தமிழில் வந்த நூல்களில் மிகவும் சிறந்த நூலாகும் என்று சோதிடகலைக் களஞ்சியம் இந்நூலின் சிறப்பினை எடுத்துரைக்கிறது . இன்று அரிதாகக் கிடைக்கும் நூலாக விளங்கும் இக்குமாரசுவாமியத்தின் மூன்று ஏட்டுச் சுவடிகள் தஞ்சை சரபோசி மன்னரின் சரசுவதி மகால் நூல் நிலையத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன . அவற்றுள் 802 e 1007 a என்ற சுவடி எண்ணுள்ளவை பதிப்பிற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டன . 802e சுவடியில் படலங்கள் வரிசையின்றி மாறிமாறி அமைந்திருந்தன . பாடல்கள் மிகக் குறைந்த எண்ணிக் கையிலேயே கிடைத்தன . இருப்பினும் உரைப்பகுதி சிறப்பாக அமைந்திருந்தது . 1007 a எண்ணுள்ள சுவடியில் பாடல்கள் முழுமையாக அமைந்திருந்தன . எனவே இவ்விரு சுவடிகளில் உள்ள செய்திகளையும் ஒன்றாகச் சேர்த்து நூலுக்கு முழுவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது . 15726 என்ற எண்ணுள்ள சுவடி மிகவும் சிறியதாகையால் ஒப்பிடப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது . குமாரசுவாமியம் ( மயநூல் ) என்ற நூல் ( சுவடி எண் . 9136 ) ஒன்றும் இந்நூலகத்தில் உள்ளது . மேலும் காளிதாசன் எழுதிய குமாரசுவாமியம் என்ற புராணம் தொடர்பான நூல் ஒன்று இருப்பதும் இங்கு சுட்டத்தக்கது . நூலாசிரியர் வரலாறு குமாரசுவாமியம் என்ற நூலை எழுதியவர் ஸ்ரீ குமார சுவாமியாவார் . வயமுளசந்தாசலசெந்தூர்க்கதிபன் வீரை வருமாறி யாடுபெருமாள்புதல்வனான செயமுகும்ப்ர பலசுமுக குமாரசுவாமிக்கோர் தெய்வமவனுளத்திருந்து திருவுளம்பற்றியதே ( பாயிரம் : 5 ) 1 . சோதிடப் பேரகராதி - பக் . 87 2 . சோதிடக் கலைக்களஞ்சியம் - பக் . 269