குமாரசுவாமியம்

330) சான்றினன் கருணை பூத்துச் சனனவெந்துயர மாற்று நீற்றினை இனிது நல்கி நிறைந்தவன் மறைந்து போனான் சீற்றமில் வணிக ரேறுந் திடீரென விழித்தான் வேலர் போற்றினன் புகழ்ந்தான் கண்ணீர் பொழிந்தான் புகை முற்றான்.39 ஆடினான் அழல்சேர் வுற்ற வரக்கென அகங்கு ழைந்தான் பாடினான் பரமானந்தப் பரவையில் படிந்தான் அன்பில் நீடினான் நிமலன் கோயில் நிலவுசன் னதியைச் சார்ந்து சூடினான் கரங்கள் சென்னிதுதித்தனன் வாய்கொ ளாதே. வேலவன் கருணை எல்லாம் விளங்கி செய்யுன் மாலை சாலநன் கினிது சாத்தித் தரைமிசைப் பணிந்தெழுந்து பாலன மொழியாள் வள்ளி பாகனல் விடையும் பெற்று மேலவர் புகழா நிற்கும் வீரையும் பதியைச் சார்ந்தான். உருகுமெய்யடியாருள்ளம் உவந்தன வெல்லாம் நல்கும் குருதிகொப்பளிக்கும் வைவேற் குமரன தருளைக் கொண்டு முருகவிழ் முல்லை மார்பன் முந்துசோ திடங்க ளெல்லாம் கருதியே வயன மொன்றில் கசடற பயின்றிட்டானால். கான்றமின் மணிப்பூண் மார்பன் கற்பமும் குணிக்க வல்ல வான்றநல் லறிஞனாகி அற்புதம் எவர்க்கும் தோன்றச் சான்றமெய்ப் பலன்கள் எல்லாம் தரணியோர்க் கிசையக் கூறி ஈன்றவட் கிறுதி நாளும் எய்திடும் கதியும் தேர்ந்தான். 43. பெரியபன் மலைக ளெல்லாம் பிறங்குகண்ணாடி தன்னுள் தெளிவுற காட்டு மாபோல் சீவபல் கோடி கட்கு முரியபல் குணமும் இங்ஙன் நோவறு தொழிலும் மற்றும் விரியுமுக் காலந்தன்னுள் விளைபொருள் பலவும் தோன்ற. 44 உலகமும் அலைவு றாமல் உயர்ந்ததன் பெயரா லென்றும் இலகுற இந்த நரலை எம்மனோர்க் கியம்பினானால்
330 ) சான்றினன் கருணை பூத்துச் சனனவெந்துயர மாற்று நீற்றினை இனிது நல்கி நிறைந்தவன் மறைந்து போனான் சீற்றமில் வணிக ரேறுந் திடீரென விழித்தான் வேலர் போற்றினன் புகழ்ந்தான் கண்ணீர் பொழிந்தான் புகை முற்றான் . 39 ஆடினான் அழல்சேர் வுற்ற வரக்கென அகங்கு ழைந்தான் பாடினான் பரமானந்தப் பரவையில் படிந்தான் அன்பில் நீடினான் நிமலன் கோயில் நிலவுசன் னதியைச் சார்ந்து சூடினான் கரங்கள் சென்னிதுதித்தனன் வாய்கொ ளாதே . வேலவன் கருணை எல்லாம் விளங்கி செய்யுன் மாலை சாலநன் கினிது சாத்தித் தரைமிசைப் பணிந்தெழுந்து பாலன மொழியாள் வள்ளி பாகனல் விடையும் பெற்று மேலவர் புகழா நிற்கும் வீரையும் பதியைச் சார்ந்தான் . உருகுமெய்யடியாருள்ளம் உவந்தன வெல்லாம் நல்கும் குருதிகொப்பளிக்கும் வைவேற் குமரன தருளைக் கொண்டு முருகவிழ் முல்லை மார்பன் முந்துசோ திடங்க ளெல்லாம் கருதியே வயன மொன்றில் கசடற பயின்றிட்டானால் . கான்றமின் மணிப்பூண் மார்பன் கற்பமும் குணிக்க வல்ல வான்றநல் லறிஞனாகி அற்புதம் எவர்க்கும் தோன்றச் சான்றமெய்ப் பலன்கள் எல்லாம் தரணியோர்க் கிசையக் கூறி ஈன்றவட் கிறுதி நாளும் எய்திடும் கதியும் தேர்ந்தான் . 43 . பெரியபன் மலைக ளெல்லாம் பிறங்குகண்ணாடி தன்னுள் தெளிவுற காட்டு மாபோல் சீவபல் கோடி கட்கு முரியபல் குணமும் இங்ஙன் நோவறு தொழிலும் மற்றும் விரியுமுக் காலந்தன்னுள் விளைபொருள் பலவும் தோன்ற . 44 உலகமும் அலைவு றாமல் உயர்ந்ததன் பெயரா லென்றும் இலகுற இந்த நரலை எம்மனோர்க் கியம்பினானால்