குமாரசுவாமியம்

286 குரு யாதொரு பாவகத்தில் இருக்கிலும், மூல இராசியில் தாது இராசி வர்க்கம் ஏறிலும் சீவ சிந்தனை என்க. இவ்வகைக்கு எல்லாம் இனம், பேர், நடவடி முதலானவைகளையும், முன்சொல்லி இருப்பதால் யாவையும் கண்டறிவர். மகத்தாகிய தவசினையுடைய அகத்தியமா முனியே இதன்மேல் சோர இயல்பு சொல்லுவோம். பலஞாபகப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் நாற்பத்து நான்கிற்குக் கவி 380 45. சோரப் படலம் சோரபலஞ் சனி அனல்பாம் பாறிவன்பார்த் திடுதல் தோன்றலுத யத்துமிறை தோய்வினும்சொல் லுவரார் ஓரிருநாள் காறுவியம் வீழ்தல்கர அசதி ஒன்றிறைகேந் திரமேறப் போனதிலை ஒருநேர் சேருவதும் வெளியுளிடை தேளலவன் மனையா தினகரனேர்க் குளதலமான் சேலிறப்பில் அசிதன் சாருதல்பார்த் திடலெனில் அந் தரம்இவை அல்லாதத் தகர்முதல்நேர்க் குளராசிச் சார்புநிகழ்ந்த துவதே. 381 சோர பலன் அறியவேண்டில் சனி, சேய், இராகுவும் ஆறாமிடமும், ஆறாமிடத்திற்கு உடையவனும், இலக்கனத்தையும் இலக்கனாதிபதியையும் பார்த்தல் அல்லது சேர்தலாகில் சோர சிந்தனை என்க. உதய இலக்கனாதிபதி எட்டாமிடத்தில் இருக்கில் கைவிட்டு விழுந்து போனது என்க. ஆறாமிடத்தில் இருக்கில் சோரரிடம் என்க. பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கில் வைத்து மறதி என்க. கேந்திரத்தில் இருக்கில் போனது அல்ல என்க. இதற்கு இடம் அறியவேண்டில் மேடாதி நேர்வெளி, உள், இடை என்றும்; விருச்சிகம், கடகமாகில் கிரகத்தில் என்றும்; அசுபதி முதல் நேர்க்குள்ளவர்கள் தானத்தில் என்றும்; மகரம், மீனமாகில் இறப்பில் என்றும்; சனி பார்த்தல் அல்லது சேர்தலாகில் அந்தரத்தில் என்றும் மேடாதி இராசிக்கு உள்ள இடத்தில் என்றும் கண்டு யோசனை பண்ணிச்சொல்லுக.
286 குரு யாதொரு பாவகத்தில் இருக்கிலும் மூல இராசியில் தாது இராசி வர்க்கம் ஏறிலும் சீவ சிந்தனை என்க . இவ்வகைக்கு எல்லாம் இனம் பேர் நடவடி முதலானவைகளையும் முன்சொல்லி இருப்பதால் யாவையும் கண்டறிவர் . மகத்தாகிய தவசினையுடைய அகத்தியமா முனியே இதன்மேல் சோர இயல்பு சொல்லுவோம் . பலஞாபகப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் நாற்பத்து நான்கிற்குக் கவி 380 45 . சோரப் படலம் சோரபலஞ் சனி அனல்பாம் பாறிவன்பார்த் திடுதல் தோன்றலுத யத்துமிறை தோய்வினும்சொல் லுவரார் ஓரிருநாள் காறுவியம் வீழ்தல்கர அசதி ஒன்றிறைகேந் திரமேறப் போனதிலை ஒருநேர் சேருவதும் வெளியுளிடை தேளலவன் மனையா தினகரனேர்க் குளதலமான் சேலிறப்பில் அசிதன் சாருதல்பார்த் திடலெனில் அந் தரம்இவை அல்லாதத் தகர்முதல்நேர்க் குளராசிச் சார்புநிகழ்ந்த துவதே . 381 சோர பலன் அறியவேண்டில் சனி சேய் இராகுவும் ஆறாமிடமும் ஆறாமிடத்திற்கு உடையவனும் இலக்கனத்தையும் இலக்கனாதிபதியையும் பார்த்தல் அல்லது சேர்தலாகில் சோர சிந்தனை என்க . உதய இலக்கனாதிபதி எட்டாமிடத்தில் இருக்கில் கைவிட்டு விழுந்து போனது என்க . ஆறாமிடத்தில் இருக்கில் சோரரிடம் என்க . பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கில் வைத்து மறதி என்க . கேந்திரத்தில் இருக்கில் போனது அல்ல என்க . இதற்கு இடம் அறியவேண்டில் மேடாதி நேர்வெளி உள் இடை என்றும் ; விருச்சிகம் கடகமாகில் கிரகத்தில் என்றும் ; அசுபதி முதல் நேர்க்குள்ளவர்கள் தானத்தில் என்றும் ; மகரம் மீனமாகில் இறப்பில் என்றும் ; சனி பார்த்தல் அல்லது சேர்தலாகில் அந்தரத்தில் என்றும் மேடாதி இராசிக்கு உள்ள இடத்தில் என்றும் கண்டு யோசனை பண்ணிச்சொல்லுக .