குமாரசுவாமியம்

258| திதிக்குருடு நத்தை இருத் தையுளதும் யோகத் தில்தோஷம் மற்றுளதும் கரணமதில் தீதும் விதிப்பதறு விவ்வகையில் அவ்வியமற் றுளதாய் விளம்புவாரவ் வினைக்குமிதன் மேலுமிரா சிப்பேர் இதற்கொருநேர் மணத்தல்சிராத் தங்கெமனந் தருவைத் திடல்கேள்வி புல்லலகம் எடுத்தலுழ வின்னீர் மதித்தன்மரக் கலநடத்தன் மயிர்வினைகற் பனவு மாற்றியம லத்தியல்பு வழுத்துவதற் கதுவே. 342 திதிக்குருடு, நத்தை, இருந்தை இவை முதலாகிய திதித் தீதும், யோக தோடம் மற்றுள்ளதும் கரணதோஷமும், தீர்த்து முகூர்த்தம் சொல்லுக. இராசித்தீது அறியும்படி : மேடம் நேர் கலியாணம், சிராத்தம், கமனம், தருவைத்திடல், புராணகாவிய உபதேசக் கேள்வி, சையோகம், மனை எடுத்தல், உழவு, கிணறு, குளம் வெட்டல், கப்பல் ஓட்டல், மயிர்வினை, வித்யாரம்பம் இவற்றிற்கு ஆகாது என்ப. வழுத்தரிவை சால்வில்லல வன்மாதம் சூன்யம் மற்றுளவுத் தமம்அயனம் தையாடி மாதத் தழுத்து முதல் சத்தமிதொட் டதுடைந்தெக் கணங்கந் தாயமொரு நான்கிரண்டே ஆனிமுதல் ருதுவாம் தொழில்படில்பேர் கார்குளிர்முன் பின்பனிவே னிற்பேர் தோன்றலிலி வேனில் முன் பாத்துருவை சுறாமாத மொழித்தலதில் செய்வர்முதல் கலியாணத் துடைய உபயகளத் திரக்கரிமா தத்தவநவ் வுதுவே. 343 புரட்டாசி, மாசி, மார்கழி, ஆடி இம்மாதங்கள் சூன்யம் என்ப. மற்றுள்ள மாதங்கள் உத்தமம் என்ப. தை மாதம் பூர்வ பட்சசப்தமி முதல் உத்தராயணம் என்ப. இந்தப்படி ஆடிமாதம் முதல் தெட்சணாயனம் என்ப. மாதம் நான்கு கூடில் கந்தாயம் என்ப. இரண்டாகில் இருது என்ப.
258 | திதிக்குருடு நத்தை இருத் தையுளதும் யோகத் தில்தோஷம் மற்றுளதும் கரணமதில் தீதும் விதிப்பதறு விவ்வகையில் அவ்வியமற் றுளதாய் விளம்புவாரவ் வினைக்குமிதன் மேலுமிரா சிப்பேர் இதற்கொருநேர் மணத்தல்சிராத் தங்கெமனந் தருவைத் திடல்கேள்வி புல்லலகம் எடுத்தலுழ வின்னீர் மதித்தன்மரக் கலநடத்தன் மயிர்வினைகற் பனவு மாற்றியம லத்தியல்பு வழுத்துவதற் கதுவே . 342 திதிக்குருடு நத்தை இருந்தை இவை முதலாகிய திதித் தீதும் யோக தோடம் மற்றுள்ளதும் கரணதோஷமும் தீர்த்து முகூர்த்தம் சொல்லுக . இராசித்தீது அறியும்படி : மேடம் நேர் கலியாணம் சிராத்தம் கமனம் தருவைத்திடல் புராணகாவிய உபதேசக் கேள்வி சையோகம் மனை எடுத்தல் உழவு கிணறு குளம் வெட்டல் கப்பல் ஓட்டல் மயிர்வினை வித்யாரம்பம் இவற்றிற்கு ஆகாது என்ப . வழுத்தரிவை சால்வில்லல வன்மாதம் சூன்யம் மற்றுளவுத் தமம்அயனம் தையாடி மாதத் தழுத்து முதல் சத்தமிதொட் டதுடைந்தெக் கணங்கந் தாயமொரு நான்கிரண்டே ஆனிமுதல் ருதுவாம் தொழில்படில்பேர் கார்குளிர்முன் பின்பனிவே னிற்பேர் தோன்றலிலி வேனில் முன் பாத்துருவை சுறாமாத மொழித்தலதில் செய்வர்முதல் கலியாணத் துடைய உபயகளத் திரக்கரிமா தத்தவநவ் வுதுவே . 343 புரட்டாசி மாசி மார்கழி ஆடி இம்மாதங்கள் சூன்யம் என்ப . மற்றுள்ள மாதங்கள் உத்தமம் என்ப . தை மாதம் பூர்வ பட்சசப்தமி முதல் உத்தராயணம் என்ப . இந்தப்படி ஆடிமாதம் முதல் தெட்சணாயனம் என்ப . மாதம் நான்கு கூடில் கந்தாயம் என்ப . இரண்டாகில் இருது என்ப .