குமாரசுவாமியம்

43 நடத்துக. இந்தப்படி நித்திரை செய்த பட்சியை ஊண் பட்சியாக வைத்து மற்ற சாமங்களுக்கும் நடத்துக. அமரபட்சம் முதல் சாமம் நடந்த பட்சியை இரண்டாம் சாமத்துக்கு ஊண் பட்சியாக வைத்து, வலமாக ஒன்றுவிட்டு நேர் நடத்துக. இந்தப்படி நடந்த பட்சியை ஊண் பட்சியாக வைத்து மற்ற சாமங்களுக்கும் நடத்துக. அமரபட்சம் இரவு முதல்சாமம் அரசு செய்த பட்சியை இரண்டாம் சாமத்துக்கு ஊண்பட்சியாக வைத்து இடமாக ஒன்றுவிட்டு நேர் நடத்துக. இந்தபடி அரசு செய்த பட்சியை ஊண் பட்சியாக வைத்து மற்ற சாமங்களில் நடத்துக. பூர்வபட்சம் வியாழக்கிழமை, சனிக்கிழமையில் வல்லூறும், வெள்ளி, ஞாயிற்றில் ஆந்தையும், திங்களில் காகமும், செவ்வாயில் கோழியும், புதனில் மயிலும் மரிக்கும். அமரபட்சம் புதன், வெள்ளியில் மயிலும், வியாழன் சனியில் கோழியும், ஞாயிறில் காகமும், திங்களில் ஆந்தையும், செவ்வாயில் வல்லூறும் மரிக்கும். இவைபடுபட்சியாம். இரவிப்பாய்ச்சல் எய்தும்ரவிப் பாய்ச்சறெற்கா யெமனிசினே ரறுபான் இதற்குமுப்பா னேறலிரு பானொருபா னிளைத்த ஐயிரண்டை நான்கேறல் பாதியுற இவைநேர் அலர்களுமுற் றிடல்சோமன் அசிதனுமந் தணனும் வெய்யவன்பார்க் கவனுமனல் மேதையுநாற் றிசைச்சூல் விளம்புவரத் திசைமுதற்கோள் விட்டறுகோ ணமுமாய் வைகுவதவ் வயதுளநாழிகையாகும் அதிகம் வரிலுதயத் தேறுமிரா வீற்றன்மற் றதுவே. 36 சனிக்கிழமை இரவு 30, ஞாயிறுக்கிழமை பகல் நாழிகை 30 ஆக நாழிகை அறுபதும் தென்திசையிலும்; ஞாயிற்றுக்கிழமை இரவு 30 நாழிகை, திங்கள் இரவுபகல் ல நாழிகை ஆக நாழிகை 90ம் தென்மேற்றிசையிலும்; செவ்வாய்க்கிழமை பகல் 30 நாழிகை, இரவு 10 நாழிகை ஆக 40 நாழிகை மேற்றிசையிலும், செவ்வாய்க்கிழமை இரவு 20
43 நடத்துக . இந்தப்படி நித்திரை செய்த பட்சியை ஊண் பட்சியாக வைத்து மற்ற சாமங்களுக்கும் நடத்துக . அமரபட்சம் முதல் சாமம் நடந்த பட்சியை இரண்டாம் சாமத்துக்கு ஊண் பட்சியாக வைத்து வலமாக ஒன்றுவிட்டு நேர் நடத்துக . இந்தப்படி நடந்த பட்சியை ஊண் பட்சியாக வைத்து மற்ற சாமங்களுக்கும் நடத்துக . அமரபட்சம் இரவு முதல்சாமம் அரசு செய்த பட்சியை இரண்டாம் சாமத்துக்கு ஊண்பட்சியாக வைத்து இடமாக ஒன்றுவிட்டு நேர் நடத்துக . இந்தபடி அரசு செய்த பட்சியை ஊண் பட்சியாக வைத்து மற்ற சாமங்களில் நடத்துக . பூர்வபட்சம் வியாழக்கிழமை சனிக்கிழமையில் வல்லூறும் வெள்ளி ஞாயிற்றில் ஆந்தையும் திங்களில் காகமும் செவ்வாயில் கோழியும் புதனில் மயிலும் மரிக்கும் . அமரபட்சம் புதன் வெள்ளியில் மயிலும் வியாழன் சனியில் கோழியும் ஞாயிறில் காகமும் திங்களில் ஆந்தையும் செவ்வாயில் வல்லூறும் மரிக்கும் . இவைபடுபட்சியாம் . இரவிப்பாய்ச்சல் எய்தும்ரவிப் பாய்ச்சறெற்கா யெமனிசினே ரறுபான் இதற்குமுப்பா னேறலிரு பானொருபா னிளைத்த ஐயிரண்டை நான்கேறல் பாதியுற இவைநேர் அலர்களுமுற் றிடல்சோமன் அசிதனுமந் தணனும் வெய்யவன்பார்க் கவனுமனல் மேதையுநாற் றிசைச்சூல் விளம்புவரத் திசைமுதற்கோள் விட்டறுகோ ணமுமாய் வைகுவதவ் வயதுளநாழிகையாகும் அதிகம் வரிலுதயத் தேறுமிரா வீற்றன்மற் றதுவே . 36 சனிக்கிழமை இரவு 30 ஞாயிறுக்கிழமை பகல் நாழிகை 30 ஆக நாழிகை அறுபதும் தென்திசையிலும் ; ஞாயிற்றுக்கிழமை இரவு 30 நாழிகை திங்கள் இரவுபகல் நாழிகை ஆக நாழிகை 90ம் தென்மேற்றிசையிலும் ; செவ்வாய்க்கிழமை பகல் 30 நாழிகை இரவு 10 நாழிகை ஆக 40 நாழிகை மேற்றிசையிலும் செவ்வாய்க்கிழமை இரவு 20