குமாரசுவாமியம்

294) 48. உலகியல் படலம் செப்புதலிப் படிக்கதிபன் காரகம்மற் றுளதும் தெரிந்துரைத்தல் சிந்தனைக்காம் இதன்மேல் செப் புவது முப்புரிமார் புனன்பால உலகியல் முன் மழைக்காம் மும்மூன்றேழ் நவம்உபய முதற்றினநேர் இவைநேர் அப்புகர்மால் கூடிலதி கம்மிலற்பந் திரட்சி அனாவிருட்டி வெகுமழையாம் அரிதுலைகெர்ச் சிதமின் இப்பருதி இவைஉறவிக் குறிஎழுநாட் குளதாம் என்னில் உண் டாமற்றெனின் மற்றில்வருஷத் தியல்பே. 392 சிந்தனா பலத்துக்குக் காரகம் அதிபதி முதலானவை கொண்டு யோசனை பண்ணிச்சொல்லுக. இதன்மேல் பிரமாவுக்குப் புத்திரனானவர் உலகியல்பு சொல்லுவதில் முதலாவது மழைக்கியல்பு சொல்லுவோம், அசுபதி, பரணி, கார்த்திகையில் சுக்கிரனும், புதனும் கூடில் அதிக மழை. உரோகிணி, மிருகசிரம், திருவாதிரையில் கூடில் மழை இல்லை . புனர்பூசம், பூசம், ஆயிலியத்தில் கூடில் அற்ப மழை. மகம், பூரம், உத்திரம், அத்தம், சித்திரை, சோதி, விசாகத்தில் கூடில் சிலாமழை. அனுசம், கேட்டை , மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதியில் கூடில் அனாவிருட்டி. உத்திரட்டாதி, ரேவதியில் கூடில் வெகு மழை என்க. ஆவணி மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதிவரைக்கும் இடி முழங்கிலும், ஐப்பசி மாதம் இந்தப்படி மின்வெட்டிலும் அந்த வருடம் மழை மிகுதியும் உண்டு என்க, இந்தக் குறி தப்பில் மழையில்லை . இதுவுமது அத்தமுத லைந்தரன்மா வடுப்பெமன்பெண் படியில் அசிதன்வரில் சால்விலொரு வங்கனையான் துலையில் வித்தம்வரில் அனல்சுகன்போல் வெயில்மனைபெண் நீக்கி வெள்ளியுறின் மாகேந்த்ர தகிகிரணம் மேவில் சித்திரைமா தம்புகர்பொன் திங்கள்பெறில் இவையில் தீபமுறில் பஞ்சமிமுற் பட்சமுறில் சிகிதீன் டத்தினம்பெய் திடில்சிலைகோ லினன்பாவ வாரத் தனதணையில் மாரிபெய்வ தாவசியம் எனுமே. 393
294 ) 48 . உலகியல் படலம் செப்புதலிப் படிக்கதிபன் காரகம்மற் றுளதும் தெரிந்துரைத்தல் சிந்தனைக்காம் இதன்மேல் செப் புவது முப்புரிமார் புனன்பால உலகியல் முன் மழைக்காம் மும்மூன்றேழ் நவம்உபய முதற்றினநேர் இவைநேர் அப்புகர்மால் கூடிலதி கம்மிலற்பந் திரட்சி அனாவிருட்டி வெகுமழையாம் அரிதுலைகெர்ச் சிதமின் இப்பருதி இவைஉறவிக் குறிஎழுநாட் குளதாம் என்னில் உண் டாமற்றெனின் மற்றில்வருஷத் தியல்பே . 392 சிந்தனா பலத்துக்குக் காரகம் அதிபதி முதலானவை கொண்டு யோசனை பண்ணிச்சொல்லுக . இதன்மேல் பிரமாவுக்குப் புத்திரனானவர் உலகியல்பு சொல்லுவதில் முதலாவது மழைக்கியல்பு சொல்லுவோம் அசுபதி பரணி கார்த்திகையில் சுக்கிரனும் புதனும் கூடில் அதிக மழை . உரோகிணி மிருகசிரம் திருவாதிரையில் கூடில் மழை இல்லை . புனர்பூசம் பூசம் ஆயிலியத்தில் கூடில் அற்ப மழை . மகம் பூரம் உத்திரம் அத்தம் சித்திரை சோதி விசாகத்தில் கூடில் சிலாமழை . அனுசம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதியில் கூடில் அனாவிருட்டி . உத்திரட்டாதி ரேவதியில் கூடில் வெகு மழை என்க . ஆவணி மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதிவரைக்கும் இடி முழங்கிலும் ஐப்பசி மாதம் இந்தப்படி மின்வெட்டிலும் அந்த வருடம் மழை மிகுதியும் உண்டு என்க இந்தக் குறி தப்பில் மழையில்லை . இதுவுமது அத்தமுத லைந்தரன்மா வடுப்பெமன்பெண் படியில் அசிதன்வரில் சால்விலொரு வங்கனையான் துலையில் வித்தம்வரில் அனல்சுகன்போல் வெயில்மனைபெண் நீக்கி வெள்ளியுறின் மாகேந்த்ர தகிகிரணம் மேவில் சித்திரைமா தம்புகர்பொன் திங்கள்பெறில் இவையில் தீபமுறில் பஞ்சமிமுற் பட்சமுறில் சிகிதீன் டத்தினம்பெய் திடில்சிலைகோ லினன்பாவ வாரத் தனதணையில் மாரிபெய்வ தாவசியம் எனுமே . 393