குமாரசுவாமியம்

253 வையகத்தின் அதிபனிலொன் றாகவசி தன்சேர் வதுவுமங் சமாவதுமாய் வக்கிரநீ சமுமாய்ச் செய்வதெனில் இலக்கினத்தில் கன்லாங்ச மாகச் செம்பொனதி நீசமுறில் தினத்திறைலக் கனத்தை பொய்யினர்பார்த் திடக்கூட குளிகவர்க்க மாகில் புகல்வதிவ டொழுத்தையெனல் புரைமினர்வேட் புகுதல் ஐயமற மூவரெனில் பதிக்கடங்கா தவளாம் மனலேழுற் றிடினுமன வைரியென லாமே. 334 மேடம், விருச்சிகம் இலக்கனமாகிச் சனி இருந்து வர்க்கோத்தமாகச் சேய் நீசம் ஏறிலும், இலக்கனத்தில் சேய் அங்கிசம் ஏறக் குரு அதி நீசம் ஏறிலும், இலக்கனத்தையும் சந்திரனையும் பாவர் கூடிப் பார்க்கக் குளிக வர்க்கம் ஏறிலும், தொழுத்தை என்ப. ஏழாமிடத்தில் மூன்றாமிடத்தில் பாவர் இருக்கில் பதிக்கு அடங்காதவள் என்ப. ஏழாமிடத்தில் சேய் இருக்கில் மனவயிரி. அனல் வீடொன் றாகவதில் சனிபுகரைச் சேரில் அவளிதய வைரமிவள் பதியுடனா மனன்மான் முனர்வீடவ் வரியாக வங்கிசமு திக்கின் மூர்க்கமுளாள் பதிக்கிரியை முழுதுமுடிப் பவளாம் சனியாதி தன்னிலவர்க் கோத்தமமா கிற்றுட்டை தழலிவைபோல் வரில்கலகி தபன்னிலொன் றாக வனவாடே றிறைவரங்ச மாதல்பதி ரோக மகிழ்நரசு பஞ்சுபம்வேண் மருவிலிரண் டெனுமே. 335 மேடம், விருச்சிகம் இலக்கனமாகிச் சனி, சுக்கிரன் கூடில் பதிக்கும் இவளுக்கும் வயிரம் என்க. இலக்கனம் சிங்கமாகி சேய், புதன் அங்கிசம் ஏறில் மூர்க்கம் உள்ளவள். பர்த்தா செய்யும் கிரிகையைத் தான் செய்து முடிப்பள். இலக்கனத்தில் சனி வர்க்கோத்தமமாகில் துட்டை என்ப. சேயாகில் சதா கலகி. இலக்கனம் சிங்கமாகி சேய், சுக்கிரன் அங்கிசம் ஏறில் ரோக பர்த்தா உடையவள். ஏழாம் இடத்தில் பாவர், சுபர்கூடில் தூய பர்த்தா உடையவள்.
253 வையகத்தின் அதிபனிலொன் றாகவசி தன்சேர் வதுவுமங் சமாவதுமாய் வக்கிரநீ சமுமாய்ச் செய்வதெனில் இலக்கினத்தில் கன்லாங்ச மாகச் செம்பொனதி நீசமுறில் தினத்திறைலக் கனத்தை பொய்யினர்பார்த் திடக்கூட குளிகவர்க்க மாகில் புகல்வதிவ டொழுத்தையெனல் புரைமினர்வேட் புகுதல் ஐயமற மூவரெனில் பதிக்கடங்கா தவளாம் மனலேழுற் றிடினுமன வைரியென லாமே . 334 மேடம் விருச்சிகம் இலக்கனமாகிச் சனி இருந்து வர்க்கோத்தமாகச் சேய் நீசம் ஏறிலும் இலக்கனத்தில் சேய் அங்கிசம் ஏறக் குரு அதி நீசம் ஏறிலும் இலக்கனத்தையும் சந்திரனையும் பாவர் கூடிப் பார்க்கக் குளிக வர்க்கம் ஏறிலும் தொழுத்தை என்ப . ஏழாமிடத்தில் மூன்றாமிடத்தில் பாவர் இருக்கில் பதிக்கு அடங்காதவள் என்ப . ஏழாமிடத்தில் சேய் இருக்கில் மனவயிரி . அனல் வீடொன் றாகவதில் சனிபுகரைச் சேரில் அவளிதய வைரமிவள் பதியுடனா மனன்மான் முனர்வீடவ் வரியாக வங்கிசமு திக்கின் மூர்க்கமுளாள் பதிக்கிரியை முழுதுமுடிப் பவளாம் சனியாதி தன்னிலவர்க் கோத்தமமா கிற்றுட்டை தழலிவைபோல் வரில்கலகி தபன்னிலொன் றாக வனவாடே றிறைவரங்ச மாதல்பதி ரோக மகிழ்நரசு பஞ்சுபம்வேண் மருவிலிரண் டெனுமே . 335 மேடம் விருச்சிகம் இலக்கனமாகிச் சனி சுக்கிரன் கூடில் பதிக்கும் இவளுக்கும் வயிரம் என்க . இலக்கனம் சிங்கமாகி சேய் புதன் அங்கிசம் ஏறில் மூர்க்கம் உள்ளவள் . பர்த்தா செய்யும் கிரிகையைத் தான் செய்து முடிப்பள் . இலக்கனத்தில் சனி வர்க்கோத்தமமாகில் துட்டை என்ப . சேயாகில் சதா கலகி . இலக்கனம் சிங்கமாகி சேய் சுக்கிரன் அங்கிசம் ஏறில் ரோக பர்த்தா உடையவள் . ஏழாம் இடத்தில் பாவர் சுபர்கூடில் தூய பர்த்தா உடையவள் .