குமாரசுவாமியம்

2511 இளமை அதி பதியாங்கிட மேறிலசி தன்மால் ஏழணையில் விற்குருவை இரவியுறின் மலடாம் விளவரவா றனல்சனிதான் மேவிலழல் வீட்டில் இதுவுறில னாசார மென்பதிவட் கெனுமே. 330 ஐந்தாமிடத்தில் பாவர் இருக்கினும், நான்காமிடத்தில் கேது இல்லாமல் மிதுனம், கன்னி இலக்கனமாகிச் சனி அங்கிசம் ஏறினும், கடகம், தனுசு, மீனம், பாவர், சுபர் கூடிலும், கடகம் இலக்கனமாகக் குரு அங்கிசம் ஏறிலும், பெற்றிழப்பள் என்க, மகரம், கும்பம் இலக்கனமாகச் சேய் அங்கிசம் ஏறிலும், ஏழாமிடத்தில் சனி, புதன் இருக்கிலும், தனுசில் குரு, இரவி கூடினும் மலடி என்ப. ஆறாமிடத்தில் கேது, பன்னிரண்டில் சனி, சேய் இருக்கிலும், மேடம், விருச்சிகம், மதி இருக்கிலும் அனாசாரம் உடையவள். பதிபுருட லட்சணமா மணியாயத் திறைவர் பாலருறில் ஏழில்ரவி பவர்சேரில் ரிபுவா மறியிலுத யக்கனலாம் கிழமாக விதவை மாசுளர்கூ டில்புகர்சேய் மலனபவமாய்ச் சேரில் அதிகவிர கப்பிணியால் பதி அறியா வண்ணம் அனேகபுரு டர்க்கூட அனல்புகராங் கிசவேள் விதுமருவ வம்மதியை ரவியனல்சேர்ந் திருக்கில் விபசாரம் பதியறிய மேவுவதும் இவளே. 331 மூன்று , பதினோராமிடத்திற்கு உடையவர்கள் ஐந்தாம் இடத்தில் இருக்க, பதிக்குச் சத்புருட லட்சணாங்கம் என்ப. ஏழாமிடத்தில் இரவி, பாவருடன் கூடில், பதி சத்ரு என்ப. இலக்கனம் கடகமாகச் சேய் அங்கிசம் ஏற, மதி பாவருடன் கூடிலும், சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கச் சேய் பதினோராம் இடத்தில் இருக்கிலும், அதிக விரகினியாகி, இரகசியமாக விபசாரம் நடத்துவாள் என்ப. ஏழாமிடத்தில் சேய், சுக்கிரன் அங்கிசம் ஏற், இதில் இரவி, மதி, சேய் கூடில் பதியறிய விபசாரம் பண்ணுவாள்.
2511 இளமை அதி பதியாங்கிட மேறிலசி தன்மால் ஏழணையில் விற்குருவை இரவியுறின் மலடாம் விளவரவா றனல்சனிதான் மேவிலழல் வீட்டில் இதுவுறில னாசார மென்பதிவட் கெனுமே . 330 ஐந்தாமிடத்தில் பாவர் இருக்கினும் நான்காமிடத்தில் கேது இல்லாமல் மிதுனம் கன்னி இலக்கனமாகிச் சனி அங்கிசம் ஏறினும் கடகம் தனுசு மீனம் பாவர் சுபர் கூடிலும் கடகம் இலக்கனமாகக் குரு அங்கிசம் ஏறிலும் பெற்றிழப்பள் என்க மகரம் கும்பம் இலக்கனமாகச் சேய் அங்கிசம் ஏறிலும் ஏழாமிடத்தில் சனி புதன் இருக்கிலும் தனுசில் குரு இரவி கூடினும் மலடி என்ப . ஆறாமிடத்தில் கேது பன்னிரண்டில் சனி சேய் இருக்கிலும் மேடம் விருச்சிகம் மதி இருக்கிலும் அனாசாரம் உடையவள் . பதிபுருட லட்சணமா மணியாயத் திறைவர் பாலருறில் ஏழில்ரவி பவர்சேரில் ரிபுவா மறியிலுத யக்கனலாம் கிழமாக விதவை மாசுளர்கூ டில்புகர்சேய் மலனபவமாய்ச் சேரில் அதிகவிர கப்பிணியால் பதி அறியா வண்ணம் அனேகபுரு டர்க்கூட அனல்புகராங் கிசவேள் விதுமருவ வம்மதியை ரவியனல்சேர்ந் திருக்கில் விபசாரம் பதியறிய மேவுவதும் இவளே . 331 மூன்று பதினோராமிடத்திற்கு உடையவர்கள் ஐந்தாம் இடத்தில் இருக்க பதிக்குச் சத்புருட லட்சணாங்கம் என்ப . ஏழாமிடத்தில் இரவி பாவருடன் கூடில் பதி சத்ரு என்ப . இலக்கனம் கடகமாகச் சேய் அங்கிசம் ஏற மதி பாவருடன் கூடிலும் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கச் சேய் பதினோராம் இடத்தில் இருக்கிலும் அதிக விரகினியாகி இரகசியமாக விபசாரம் நடத்துவாள் என்ப . ஏழாமிடத்தில் சேய் சுக்கிரன் அங்கிசம் ஏற் இதில் இரவி மதி சேய் கூடில் பதியறிய விபசாரம் பண்ணுவாள் .