குமாரசுவாமியம்

231 நட்சத்திரம் முதல் தினப்படி கண்ட நட்சத்திரத்தை வைத்து அதற்குடையவன் திசை தொட்டுச் சாதகப் பலன் போலப் பலன் சொல்லுக. இதன்மேல் காலச்சக்கரப் பலம் சொல்லுவோம். தினப்பலப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் முப்பத்து மூன்றுக்குக் கவி 296 34. காலசக்கர நரசக்கரப் பலப் படலம் சக்கரன்சேய்க் கொருதனை யதபனன் முதல் எழுவர் தலமுதலபே ரனுவாகச் சாற்றுதிசை நாத ருக்கதர்ம தர்மரெனில் இப்பெயர்போல் பலமாய் உரைப்பபர பகாரமுமத் தலத்தியல்போல் உளதாய். அக்கிரம மாகவரு மிருகரசி னவலோ கனத்தியன்மீன் தேளாகில் அனல்கருவி அரச ரொக்கலலர் சோரபலம் தளைசிறைதற் போலும் உடற்பதனம் பவரிடையுற் றிருக்கில்உரைப் பதுவே. 297 சக்கிராயுதனுக்குப் பவுத்திரனான அகத்தியமாமுனியே! இரவி ஆதி சனி வரை எழுவரும் திசைநாதராக வருமிடத்தில் அந்தந்தக் கிரக முதலாலும் அதற்குடையவர்கள் பெயர் அடுத்தும் மேடச் செவ்வாய், இடப சுக்கிரன், மிதுன புதன், கடகச் சந்திரன், சிங்க ஆதித்தன், கன்னிப் புதன், துலாச் சுக்கிரன், விருச்சிகச் செவ்வாய், தனுர் வியாழன், மகரச் சனி, கும்பச்சனி, மீன வியாழன் என்பனவாகப் பன்னிரண்டு பாவகத்திற்கும் பெயர் நடத்துக. இந்தப்படி நடத்துமிடத்தில் பாவர் சுபர் அறிந்து பலமும் அப்படிச் சொல்லுக. அபகார பலமும் பாவக பலம் போலச் சொல்லுக. இதில் தப்புப் பாய்ச்சலாக வரும் இடத்தில் மீனத்தில் நின்று விருச்சிகத்தில் தாண்டும் காலம் இடையில் பாவக் கிரகங்களும் இருக்கில், கருவியாக்கினி, சோரர் பயம், இராச விரோதம், இனசன விரோதம், சத்துரு பயம், தளை, சிறை, காவல்கட்டு ஆற்பன சமான சரீர பதனம் உண்டாம்.
231 நட்சத்திரம் முதல் தினப்படி கண்ட நட்சத்திரத்தை வைத்து அதற்குடையவன் திசை தொட்டுச் சாதகப் பலன் போலப் பலன் சொல்லுக . இதன்மேல் காலச்சக்கரப் பலம் சொல்லுவோம் . தினப்பலப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் முப்பத்து மூன்றுக்குக் கவி 296 34 . காலசக்கர நரசக்கரப் பலப் படலம் சக்கரன்சேய்க் கொருதனை யதபனன் முதல் எழுவர் தலமுதலபே ரனுவாகச் சாற்றுதிசை நாத ருக்கதர்ம தர்மரெனில் இப்பெயர்போல் பலமாய் உரைப்பபர பகாரமுமத் தலத்தியல்போல் உளதாய் . அக்கிரம மாகவரு மிருகரசி னவலோ கனத்தியன்மீன் தேளாகில் அனல்கருவி அரச ரொக்கலலர் சோரபலம் தளைசிறைதற் போலும் உடற்பதனம் பவரிடையுற் றிருக்கில்உரைப் பதுவே . 297 சக்கிராயுதனுக்குப் பவுத்திரனான அகத்தியமாமுனியே ! இரவி ஆதி சனி வரை எழுவரும் திசைநாதராக வருமிடத்தில் அந்தந்தக் கிரக முதலாலும் அதற்குடையவர்கள் பெயர் அடுத்தும் மேடச் செவ்வாய் இடப சுக்கிரன் மிதுன புதன் கடகச் சந்திரன் சிங்க ஆதித்தன் கன்னிப் புதன் துலாச் சுக்கிரன் விருச்சிகச் செவ்வாய் தனுர் வியாழன் மகரச் சனி கும்பச்சனி மீன வியாழன் என்பனவாகப் பன்னிரண்டு பாவகத்திற்கும் பெயர் நடத்துக . இந்தப்படி நடத்துமிடத்தில் பாவர் சுபர் அறிந்து பலமும் அப்படிச் சொல்லுக . அபகார பலமும் பாவக பலம் போலச் சொல்லுக . இதில் தப்புப் பாய்ச்சலாக வரும் இடத்தில் மீனத்தில் நின்று விருச்சிகத்தில் தாண்டும் காலம் இடையில் பாவக் கிரகங்களும் இருக்கில் கருவியாக்கினி சோரர் பயம் இராச விரோதம் இனசன விரோதம் சத்துரு பயம் தளை சிறை காவல்கட்டு ஆற்பன சமான சரீர பதனம் உண்டாம் .