குமாரசுவாமியம்

நூல் குமாரசுவாமியம் மூலமும் உரையும் காப்பு போதிட மாகிய வேதிய னாத புராதனன் மான்முதலோர் ஈதிட மாய்வரு வாரெனில் யாவும் விடாதியல் பாகநவில் சோதிட மேதிட மாக நடாவு குமாரசுவாமியம்மான் ஓதிட வேயென தோரகம் வாழ்ப வனைச கோதரனே. செந்தாமரை மலரின்கண் வீற்றிருக்கும் பிரமதேவனும், சப்தாட்டம பரமரூப அநாதியான உருத்திரமூர்த்தியும் மகாவிட்டுணுவும், மகேஸ்வரனும், சதாசிவனும், இந்தப் பூமியின்கண் வந்து செனிப்பார்களேயாகில், அவர்களுடைய ஆயுர்த்தாயம் கிரியா கமன முதலாகிய யாவற்றையும், வழுவாது உள்ளவாறு சொல்லும் சோதிடத்தையே சத்தியமாகச் சொல்லாநின்ற குமாரசுவாமியம் என்னும் நூலை, யான் சொல்லும் பொருட்டு, எனது ஒப்பற்ற இதயக் கமலத்தின்கண் நீங்காமல் எழுந்தருளியிருப்பவன் விக்கினேசுவரன் சகோதரனான சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு. பாயிரம் ஆதிமுதற் குபதேசற் குருதேசி கன்முன் அகத்தியனுக் குரைத்தருள்சோ திடத்தியல்பந் நாளில் ஓதிவை நாயிலினர் வசிட்டர்கற் கரெவுன ரோமசர்ப ராசர்மநு நாரதர்வி யாசர் போதகரங்கி ராமரத்ரி மரீசிபுரு குச்சர் புகர்சவுனர் சவுகர்கா சிபரிவர்புத் தியினால் ஏதெனினும் கவர்கடங்கட் கியன்றதுமாத் திரங்கற் றிவ்வுலகில் இவர்முதலோர் சொனதபரி மிதமே.
நூல் குமாரசுவாமியம் மூலமும் உரையும் காப்பு போதிட மாகிய வேதிய னாத புராதனன் மான்முதலோர் ஈதிட மாய்வரு வாரெனில் யாவும் விடாதியல் பாகநவில் சோதிட மேதிட மாக நடாவு குமாரசுவாமியம்மான் ஓதிட வேயென தோரகம் வாழ்ப வனைச கோதரனே . செந்தாமரை மலரின்கண் வீற்றிருக்கும் பிரமதேவனும் சப்தாட்டம பரமரூப அநாதியான உருத்திரமூர்த்தியும் மகாவிட்டுணுவும் மகேஸ்வரனும் சதாசிவனும் இந்தப் பூமியின்கண் வந்து செனிப்பார்களேயாகில் அவர்களுடைய ஆயுர்த்தாயம் கிரியா கமன முதலாகிய யாவற்றையும் வழுவாது உள்ளவாறு சொல்லும் சோதிடத்தையே சத்தியமாகச் சொல்லாநின்ற குமாரசுவாமியம் என்னும் நூலை யான் சொல்லும் பொருட்டு எனது ஒப்பற்ற இதயக் கமலத்தின்கண் நீங்காமல் எழுந்தருளியிருப்பவன் விக்கினேசுவரன் சகோதரனான சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு . பாயிரம் ஆதிமுதற் குபதேசற் குருதேசி கன்முன் அகத்தியனுக் குரைத்தருள்சோ திடத்தியல்பந் நாளில் ஓதிவை நாயிலினர் வசிட்டர்கற் கரெவுன ரோமசர்ப ராசர்மநு நாரதர்வி யாசர் போதகரங்கி ராமரத்ரி மரீசிபுரு குச்சர் புகர்சவுனர் சவுகர்கா சிபரிவர்புத் தியினால் ஏதெனினும் கவர்கடங்கட் கியன்றதுமாத் திரங்கற் றிவ்வுலகில் இவர்முதலோர் சொனதபரி மிதமே .