குமாரசுவாமியம்

160 பாதத்தில் பெண் பிறக்கினும், சேய், சனி துர்ப்பெலமாகி பதினோராம் இடத்திற்கு உடையவனுக்கு மறையிலும் இவன் பாவ மத்தியமாகிலும், மூத்த சகோதரம் மரணம் என்ப. மூன்று, நான்காம் இடத்திற்கு உடையவர்கள் கூடிப் பாவ இராசியாகிய நான்காமிடத்தில் இருக்கச் சனி பார்க்கிலும், இலக்கனாதிபதி புடத்தில் மூன்றாமிடத்திற்கு உடையவன் புடத்தை வாங்கிக் கண்ட இராசியிலாகிலும், சேய் புடத்தில் இராகு புடத்தை வாங்கிக் கண்ட இராசியிலாகிலும், சேய் புடத்தில் இராகு புடத்தை வாங்கிக் கண்ட இராசியாகிலும்; சனி, குரு வருநாளிலும் இளைய சகோதரம் மரணம் என்ப. இவை இரண்டு புடமும் மாறிப் பார்க்கக் கண்டத்தில் சனி, குரு வருநாள் மூத்த சகோதரம் மரணம். தவத்தினுக்கா றாதாயம் இவைக்குளர்சுக் கிரனும் சஞ்சலம்உற் றொன்றிறையத் தலமிவர்கட் கொளிக்கில் அவத்தரிடைக் குள்ளாகில் பாகவன்தேள் வேளாய் அணையிலச்சேல் வெயில்பார்க்க அசிதனுறில் அவமாய்க் கவித்திடப்பொன் னணைதலெனக் கன்னியிலுற் றிருக்கில் காமனிலெட் டிறை இருக்கக் கசடர்விழித் திடில்கார் செவித்தலத்துக் கைந்தாகிச் சனியசுபர்ச் சேரச் சிதன்விழிக்கில் எமன்திசையில் சேர்தல்களத் திரமே. 188 இரண்டாம் இடம், இவைகளுக்கு உடையவர்களும், சுக்கிரனும் துர்பெலமாகி இலக்கனம், இலக்கனேசன் , இரண்டு, ஏழாமிடங்கள் இவற்றிற்கு மறையிலும் அல்லது பாவ மத்தியமாகியும், விருச்சிகம் ஏழாமிடமாகிச் சுக்கிரன் இருக்கினும், மீனம் ஏழாமிடமாகிச் சனி இருக்க, இரவி பார்க்கிலும், நான்காம் இடத்தில் வெகு பாவர்கூட, ஏழாமிடம் கன்னியாகிக் குரு இருக்கிலும், ஏழாமிடத்தில் எட்டாமிடத்திற்கு உடையவன் இருக்கப் பாவர் பார்க்கிலும், கடகம் ஏழாமிடமாகச் சனி பாவரை கூடியிருக்கச் சுக்கிரன் பார்க்கிலும் களத்திரமாரணம்.
160 பாதத்தில் பெண் பிறக்கினும் சேய் சனி துர்ப்பெலமாகி பதினோராம் இடத்திற்கு உடையவனுக்கு மறையிலும் இவன் பாவ மத்தியமாகிலும் மூத்த சகோதரம் மரணம் என்ப . மூன்று நான்காம் இடத்திற்கு உடையவர்கள் கூடிப் பாவ இராசியாகிய நான்காமிடத்தில் இருக்கச் சனி பார்க்கிலும் இலக்கனாதிபதி புடத்தில் மூன்றாமிடத்திற்கு உடையவன் புடத்தை வாங்கிக் கண்ட இராசியிலாகிலும் சேய் புடத்தில் இராகு புடத்தை வாங்கிக் கண்ட இராசியிலாகிலும் சேய் புடத்தில் இராகு புடத்தை வாங்கிக் கண்ட இராசியாகிலும் ; சனி குரு வருநாளிலும் இளைய சகோதரம் மரணம் என்ப . இவை இரண்டு புடமும் மாறிப் பார்க்கக் கண்டத்தில் சனி குரு வருநாள் மூத்த சகோதரம் மரணம் . தவத்தினுக்கா றாதாயம் இவைக்குளர்சுக் கிரனும் சஞ்சலம்உற் றொன்றிறையத் தலமிவர்கட் கொளிக்கில் அவத்தரிடைக் குள்ளாகில் பாகவன்தேள் வேளாய் அணையிலச்சேல் வெயில்பார்க்க அசிதனுறில் அவமாய்க் கவித்திடப்பொன் னணைதலெனக் கன்னியிலுற் றிருக்கில் காமனிலெட் டிறை இருக்கக் கசடர்விழித் திடில்கார் செவித்தலத்துக் கைந்தாகிச் சனியசுபர்ச் சேரச் சிதன்விழிக்கில் எமன்திசையில் சேர்தல்களத் திரமே . 188 இரண்டாம் இடம் இவைகளுக்கு உடையவர்களும் சுக்கிரனும் துர்பெலமாகி இலக்கனம் இலக்கனேசன் இரண்டு ஏழாமிடங்கள் இவற்றிற்கு மறையிலும் அல்லது பாவ மத்தியமாகியும் விருச்சிகம் ஏழாமிடமாகிச் சுக்கிரன் இருக்கினும் மீனம் ஏழாமிடமாகிச் சனி இருக்க இரவி பார்க்கிலும் நான்காம் இடத்தில் வெகு பாவர்கூட ஏழாமிடம் கன்னியாகிக் குரு இருக்கிலும் ஏழாமிடத்தில் எட்டாமிடத்திற்கு உடையவன் இருக்கப் பாவர் பார்க்கிலும் கடகம் ஏழாமிடமாகச் சனி பாவரை கூடியிருக்கச் சுக்கிரன் பார்க்கிலும் களத்திரமாரணம் .