குமாரசுவாமியம்

124 இலக்கன கோண கேந்திரத்தில் இருந்து சுபசகிதமாகி; ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களுக்கு உடையவர்களுடன் கூடாமல், பதினொன்றுக்கு உடையவன் வர்க்கம் ஏறி, இலக்கனேசனுக்கு நட்பாகி இவனுக்கு மறையாது இருக்கில் குபேரன் என்று பெயருடையவனாகி, ஆயுட்தாயம் வரைக்கும் இப்பெயர் நடத்துவன். இதுவுமது உளத்தினுக்கொன் பானிசையர் கேந்திரமுற் றெதிர்க்கில் ஒன்றருகன் இதுவும்உறல் உச்சமிரண் டுதிக்கில் வளர்ந்திடல்பத் தவர்க்கிரக மாற இறை பெலக்க மச்சமனன் பார்க்கிலிரண் டொன்றினர்கேந் திரமாய்க் களத்தவிர வறமிலவர் கட்கதுவில் உதயம் கனகம் உற அதுவும் உறில் கயல்இறை ஒன் றாகக் குளத்தானண னின்மாறில் ஒன்றிகண்டீ தைந்தாய்க் கூடல்ரட்டி மும்மடங்காய் இரந்தனத்துக் குளதே. 129 பன்னிரண்டுக்குடையவர்கள் எதிர் கேந்திரமானால் ஆயிரம் பொன்னுடையவன். இப்பலத்துடனே புதன் இலக்கன உதயமாகில் இரண்டாயிரம் பொன் உடையவன். இப்பலத்தில் இலக்கனத்தில் புதன் அல்லாமல் இரண்டாம் இடத்தில் உச்ச கிரகம் இருக்கில் மூவாயிரம் பொன் உடையவன். பதினொன்று, பத்துக்கு உடையவர்கள் கிரகம் மாற, இலக்கனேசன் பெலக்கக் குரு பார்க்கில், ஐந்தாயிரம் பொன் உடையவன். ஒன்றாம், இரண்டாம் இடங்களுக்கு உடையவர் கேந்திரமாக நான்கு, ஒன்பதாம் இடங்களுக்கு உடையவர் பாவ சகிதம் அல்லாமல் கூடி, இரண்டில் இருக்கில் பதினோராயிரம் பொன்னுடையவன். இப்பலத்துடனே குரு உதயமாகில் இருபத்து இரண்டாயிரம் பொன் உடையவன். குரு உதயமாகி இரண்டு, பதினொன்றாம் இடங்களுக்கு உடையவர் கிரகம் மாறில் முப்பத்து மூன்றாயிரம் பொன் உடையவன்.
124 இலக்கன கோண கேந்திரத்தில் இருந்து சுபசகிதமாகி ; ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களுக்கு உடையவர்களுடன் கூடாமல் பதினொன்றுக்கு உடையவன் வர்க்கம் ஏறி இலக்கனேசனுக்கு நட்பாகி இவனுக்கு மறையாது இருக்கில் குபேரன் என்று பெயருடையவனாகி ஆயுட்தாயம் வரைக்கும் இப்பெயர் நடத்துவன் . இதுவுமது உளத்தினுக்கொன் பானிசையர் கேந்திரமுற் றெதிர்க்கில் ஒன்றருகன் இதுவும்உறல் உச்சமிரண் டுதிக்கில் வளர்ந்திடல்பத் தவர்க்கிரக மாற இறை பெலக்க மச்சமனன் பார்க்கிலிரண் டொன்றினர்கேந் திரமாய்க் களத்தவிர வறமிலவர் கட்கதுவில் உதயம் கனகம் உற அதுவும் உறில் கயல்இறை ஒன் றாகக் குளத்தானண னின்மாறில் ஒன்றிகண்டீ தைந்தாய்க் கூடல்ரட்டி மும்மடங்காய் இரந்தனத்துக் குளதே . 129 பன்னிரண்டுக்குடையவர்கள் எதிர் கேந்திரமானால் ஆயிரம் பொன்னுடையவன் . இப்பலத்துடனே புதன் இலக்கன உதயமாகில் இரண்டாயிரம் பொன் உடையவன் . இப்பலத்தில் இலக்கனத்தில் புதன் அல்லாமல் இரண்டாம் இடத்தில் உச்ச கிரகம் இருக்கில் மூவாயிரம் பொன் உடையவன் . பதினொன்று பத்துக்கு உடையவர்கள் கிரகம் மாற இலக்கனேசன் பெலக்கக் குரு பார்க்கில் ஐந்தாயிரம் பொன் உடையவன் . ஒன்றாம் இரண்டாம் இடங்களுக்கு உடையவர் கேந்திரமாக நான்கு ஒன்பதாம் இடங்களுக்கு உடையவர் பாவ சகிதம் அல்லாமல் கூடி இரண்டில் இருக்கில் பதினோராயிரம் பொன்னுடையவன் . இப்பலத்துடனே குரு உதயமாகில் இருபத்து இரண்டாயிரம் பொன் உடையவன் . குரு உதயமாகி இரண்டு பதினொன்றாம் இடங்களுக்கு உடையவர் கிரகம் மாறில் முப்பத்து மூன்றாயிரம் பொன் உடையவன் .