போகர் கற்பம் 300

போகர் கற்பம். 300. - A wயா புட்ட . (192) - (193) மிடுக்கான குண்டலமாம் பாலையோடு வெள்ளைநீர் முள்ளி வெள்ளை விஷ்ணுகிராந்தி கடுக்கான வெண்கண்டங் காரியோடு கசப்பான பசளையொடு மதுரவேம்பு கிடுக்கான கிளிமூக்குத் துவரை அழுகண்ணி கொடியான பொன்மத்தை மதுரக்கோவை படுக்கான பொன்வண்ணச் சாலியோடு பாங்கான கருந்தும்பை மதனத்தண்டே. தண்டோடு மூவிலையாங் குருந்தினோடு தனலான சிவந்ததில்லை கருத்தவேம்பு இண்டோடு இவ்வகைகள் நாற்பத்தைந்தும் ஏத்தமா மலைகளிலே மெத்தவுண்டு பண்டோடு பாஷாண மறுபத்து நாலும் பட்டுடனே கட்டுண்டு படுதீப்பற்றும் துண்டோடு சூதமது கட்டுமாகும் சுயம்பான உபரசங்கள் சத்துமாமே. சத்தான மூலிகையில் சுருக்குச் சுற்றி சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோயில்லை மத்தான மன்மதன் போல் தேகமாகும் மாசற்று நரைதிரைக ளெல்லாமாறும் எத்தான வாசியெல்லாஞ் சென்றுயேறி - ஏறலாங் கெவுனத்தில் ஏற்றமாக அத்தான அடுக்கெல்லாஞ் சென்று ஏறி அண்டரண்ட பதமெல்லா மறியலாமே. அண்டக் கற்பம் அறியவே அண்டத்தின் கற்பங்கேளு ஆக்கமாங் கருங்கோழி சாவலுடன் பேடு வறியவே வளர்த்தந்த முட்டை வாங்கி மாசற்ற கல்லுப்பைப் பொடியாய்ப் பண்ணி பறியவே பண்டத்தில் பாதி போட்டு பதிந்துமே முட்டையைத்தான் மேலும் போட்டு செறியவே ஆகாசக் கெருடனான கிழங்குச்சார் படிவிட்டு மூடிப்போடே. 1 குண்டலமாம்பாலை - வெப்பாலை (194) - : ' 1. '. (195)
போகர் கற்பம் . 300 . - A wயா புட்ட . ( 192 ) - ( 193 ) மிடுக்கான குண்டலமாம் பாலையோடு வெள்ளைநீர் முள்ளி வெள்ளை விஷ்ணுகிராந்தி கடுக்கான வெண்கண்டங் காரியோடு கசப்பான பசளையொடு மதுரவேம்பு கிடுக்கான கிளிமூக்குத் துவரை அழுகண்ணி கொடியான பொன்மத்தை மதுரக்கோவை படுக்கான பொன்வண்ணச் சாலியோடு பாங்கான கருந்தும்பை மதனத்தண்டே . தண்டோடு மூவிலையாங் குருந்தினோடு தனலான சிவந்ததில்லை கருத்தவேம்பு இண்டோடு இவ்வகைகள் நாற்பத்தைந்தும் ஏத்தமா மலைகளிலே மெத்தவுண்டு பண்டோடு பாஷாண மறுபத்து நாலும் பட்டுடனே கட்டுண்டு படுதீப்பற்றும் துண்டோடு சூதமது கட்டுமாகும் சுயம்பான உபரசங்கள் சத்துமாமே . சத்தான மூலிகையில் சுருக்குச் சுற்றி சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோயில்லை மத்தான மன்மதன் போல் தேகமாகும் மாசற்று நரைதிரைக ளெல்லாமாறும் எத்தான வாசியெல்லாஞ் சென்றுயேறி - ஏறலாங் கெவுனத்தில் ஏற்றமாக அத்தான அடுக்கெல்லாஞ் சென்று ஏறி அண்டரண்ட பதமெல்லா மறியலாமே . அண்டக் கற்பம் அறியவே அண்டத்தின் கற்பங்கேளு ஆக்கமாங் கருங்கோழி சாவலுடன் பேடு வறியவே வளர்த்தந்த முட்டை வாங்கி மாசற்ற கல்லுப்பைப் பொடியாய்ப் பண்ணி பறியவே பண்டத்தில் பாதி போட்டு பதிந்துமே முட்டையைத்தான் மேலும் போட்டு செறியவே ஆகாசக் கெருடனான கிழங்குச்சார் படிவிட்டு மூடிப்போடே . 1 குண்டலமாம்பாலை - வெப்பாலை ( 194 ) - : ' 1 . ' . ( 195 )