நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 95 வன் செய்யுள் விகாரம் 155. வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல் விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி. சூ-ம், இதுவும் ஒரு சார் விகாரவகை இவையென உரைத்தது. (இ-ள்) வலித்தல் - மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்கலும், மெலித் தல் - வல்லெழுத்தை மெல்லெழுத்தாக்கலும், நீட்டல் குறுக்கல் - குறுக்கலை நீட்டலும் நீட்டலைக் குறுக்கலும், விரித்தல் தொகுத் தலும் - தொகுத்தலை விரித்தலும் விரித்தலைத் தொகுத்தலும், வரும் செய்யுள வேண்டுழி - செய்யுளிடத்து வேண்டுழி வரப் பெறும் என்றவாறு. உ-ம்: குறுத்தாட்பூதம்', குறுந்தாளென்பதனைக் குறுத்தாளென வலித்தவாறு. தண்டையின் இனக்கிளி கடிவோர்'. இது தட்டையென்பதனைத் தண்டையென்று மெலித்தவாறு. போத் தறார் புல்லறிவினார்” (நாலடி.351). இது பொத்தறாரென் நதனைப் போத்தறாரென நீட்டியவாறு. “திருத்தார நன்றென் றேன் றியேன்." இது தீயேன் என்றதனைத் தியேன் என்று குறுக்கியவாறு. "தண்ணந் துறைவனென்". இது தண்டுறை என்றதனைத் தண்ணந் துறைவனென விரித்தவாறு. “வேண்டார் பெரியர் விறன்மதி றான்கோடல்." இது வேண்டா தாரென்பதனை வேண்டார் எனத் தொகுத்தவாறு. பிறவுமன்ன. (5) 156. ஒருமொழி மூவழிக் குறைதலு மலைத்தே. சூ-ம், புணர்மொழியல்லா ஒரு மொழிக்கண் விகாரம் வருமாறு உரைத்தது. (இ-ள்) ஒரு மொழி - புணர்மொழியல்லாத ஒரு மொழியின், மூவழிக் குறைதலும் - முதலும் இடையும் கடையும் குறைதலும், அனைத்தே - மேற்கூறிய செய்யுள் விகாரத்தோடு ஒப்பனவாம் என்றவாறு. உ-ம்: "மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி" எனவும், “வேதின வெரிநி னோதிமுது போத்து" (குறு.140) எனவும், “நீலுண் டுகிலிகை கடுப்ப" எனவும் முறையே தாமரை, ஓந்தி, நீலம் என்றதில் முதல், இடை, கடை குறைந்தவாறு காண்க. இங் ஙனம் வரும் செய்யுள் விகாரம் ஒன்பதையும் விரித்தல் தோன் றல் விகாரமாகவும், வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் திரிபு விகாரமாகவும், தொகுத்தலும் மூவிடத்தினும் குறைதலும் கெடுதல் விகாரமாகவும் அடக்கச் செய்யுள் விகாரம் இம் மூன்று மென அமையுமென்பது போதற்கே ஈண்டே வைத்தா ரென்க.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 95 வன் செய்யுள் விகாரம் 155. வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல் விரித்த றொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி . சூ - ம் இதுவும் ஒரு சார் விகாரவகை இவையென உரைத்தது . ( - ள் ) வலித்தல் - மெல்லெழுத்தை வல்லெழுத்தாக்கலும் மெலித் தல் - வல்லெழுத்தை மெல்லெழுத்தாக்கலும் நீட்டல் குறுக்கல் - குறுக்கலை நீட்டலும் நீட்டலைக் குறுக்கலும் விரித்தல் தொகுத் தலும் - தொகுத்தலை விரித்தலும் விரித்தலைத் தொகுத்தலும் வரும் செய்யுள வேண்டுழி - செய்யுளிடத்து வேண்டுழி வரப் பெறும் என்றவாறு . - ம் : குறுத்தாட்பூதம் ' குறுந்தாளென்பதனைக் குறுத்தாளென வலித்தவாறு . தண்டையின் இனக்கிளி கடிவோர் ' . இது தட்டையென்பதனைத் தண்டையென்று மெலித்தவாறு . போத் தறார் புல்லறிவினார் ( நாலடி .351 ) . இது பொத்தறாரென் நதனைப் போத்தறாரென நீட்டியவாறு . திருத்தார நன்றென் றேன் றியேன் . இது தீயேன் என்றதனைத் தியேன் என்று குறுக்கியவாறு . தண்ணந் துறைவனென் . இது தண்டுறை என்றதனைத் தண்ணந் துறைவனென விரித்தவாறு . வேண்டார் பெரியர் விறன்மதி றான்கோடல் . இது வேண்டா தாரென்பதனை வேண்டார் எனத் தொகுத்தவாறு . பிறவுமன்ன . ( 5 ) 156. ஒருமொழி மூவழிக் குறைதலு மலைத்தே . சூ - ம் புணர்மொழியல்லா ஒரு மொழிக்கண் விகாரம் வருமாறு உரைத்தது . ( - ள் ) ஒரு மொழி - புணர்மொழியல்லாத ஒரு மொழியின் மூவழிக் குறைதலும் - முதலும் இடையும் கடையும் குறைதலும் அனைத்தே - மேற்கூறிய செய்யுள் விகாரத்தோடு ஒப்பனவாம் என்றவாறு . - ம் : மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி எனவும் வேதின வெரிநி னோதிமுது போத்து ( குறு .140 ) எனவும் நீலுண் டுகிலிகை கடுப்ப எனவும் முறையே தாமரை ஓந்தி நீலம் என்றதில் முதல் இடை கடை குறைந்தவாறு காண்க . இங் ஙனம் வரும் செய்யுள் விகாரம் ஒன்பதையும் விரித்தல் தோன் றல் விகாரமாகவும் வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் திரிபு விகாரமாகவும் தொகுத்தலும் மூவிடத்தினும் குறைதலும் கெடுதல் விகாரமாகவும் அடக்கச் செய்யுள் விகாரம் இம் மூன்று மென அமையுமென்பது போதற்கே ஈண்டே வைத்தா ரென்க .