நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

94 உயிரீற்றுப் புணரியல் என (இ-ள்) தோன்றல் - சாரியையே உயிரே ஒற்றே உயிர்மெய்யே என் றிவை மிகுதல் தோன்றல் என்பதாம், திரிதல் - சொன்ன பெற்றியே முன்னின்ற எழுத்து வேறுபட நிற்பின் திரிவு என்பதாம், கெடுதல் - இவற்றுள் ஒன்றும் பலவும் தொகுத்தல் கேடென்பவாம், விகார மூன்றும் - இத்தன்மையாய் வருகிற விகார வகை மூன்றும், மொழி மூவிடத்துமாகும் - நிலைமொழியிடத்தும் வருமொழியிடத்தும் இரு மொழியிடத்தும் வந்து பொருந்தும் என்றவாறு. உ-ம்: புளியங்காய் எனச் சாரியை மிக்கது. உரிது மாட்சியென உயிர் மிக்கது. மலைத்தலையென ஒற்று மிக்கது. உரிய தெய்யென உயிர்மெய் மிக்கது எனவும், அறுகலம் என உயிர் திரிந்தது. மட்குடம் என ஒற்றுத் திரிந்தது. “திருத்தார் நன் றென்றேன் றியேன்” உயிர்மெய் திரிந்தது எனவும், பல்சாத்து என உயிர் கெட்டது. மரவேரென ஒற்றுக் கெட்டது. அங்கை என உயிர்மெய் கெட்டது எனவுமாம். மரவேர் என நிலைமொழி விகாரம். மலைத்தலை என வருமொழி விகாரம். அறுபது என இருமொழியும் விகாரம் எனவும் வந்தன. மலைத்தலை, மட்குடம், மரவேர் இவை பெயரொடு பெயர் புணர்ந்து மூன்று விகாரமும் வந்தன. பலர்க் கொணர்ந்தான், சொற் கேட்டான், மா நட்டான் இவை பெயரொடு தொழில் புணர்ந்து மூன்று விகாரமும் வந்தன. கோடாப் பொருள், வந்தானாற் சாத்தன், ஓடுநாகம் தொழிலொடு பெயர் புணர்ந்து மூன்று விகாரமும் வந்தன. பாடப் போயிளான், வந்தாற் கொள்க, நின்றான் இவை தொழிலொடு தொழில் புணர்ந்து மூன்று விகாரமும் வந்தன. சாகா அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே எனத் தொல்காப்பியர் (எழு.109) விகாரம் மூன்றும் திரிபென்று கூறியதும் கொள்க. “மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று இவ்வென மொழிப திரியுமாறே” (தொல். எழு.110). (4)
94 உயிரீற்றுப் புணரியல் என ( - ள் ) தோன்றல் - சாரியையே உயிரே ஒற்றே உயிர்மெய்யே என் றிவை மிகுதல் தோன்றல் என்பதாம் திரிதல் - சொன்ன பெற்றியே முன்னின்ற எழுத்து வேறுபட நிற்பின் திரிவு என்பதாம் கெடுதல் - இவற்றுள் ஒன்றும் பலவும் தொகுத்தல் கேடென்பவாம் விகார மூன்றும் - இத்தன்மையாய் வருகிற விகார வகை மூன்றும் மொழி மூவிடத்துமாகும் - நிலைமொழியிடத்தும் வருமொழியிடத்தும் இரு மொழியிடத்தும் வந்து பொருந்தும் என்றவாறு . - ம் : புளியங்காய் எனச் சாரியை மிக்கது . உரிது மாட்சியென உயிர் மிக்கது . மலைத்தலையென ஒற்று மிக்கது . உரிய தெய்யென உயிர்மெய் மிக்கது எனவும் அறுகலம் என உயிர் திரிந்தது . மட்குடம் என ஒற்றுத் திரிந்தது . திருத்தார் நன் றென்றேன் றியேன் உயிர்மெய் திரிந்தது எனவும் பல்சாத்து என உயிர் கெட்டது . மரவேரென ஒற்றுக் கெட்டது . அங்கை என உயிர்மெய் கெட்டது எனவுமாம் . மரவேர் என நிலைமொழி விகாரம் . மலைத்தலை என வருமொழி விகாரம் . அறுபது என இருமொழியும் விகாரம் எனவும் வந்தன . மலைத்தலை மட்குடம் மரவேர் இவை பெயரொடு பெயர் புணர்ந்து மூன்று விகாரமும் வந்தன . பலர்க் கொணர்ந்தான் சொற் கேட்டான் மா நட்டான் இவை பெயரொடு தொழில் புணர்ந்து மூன்று விகாரமும் வந்தன . கோடாப் பொருள் வந்தானாற் சாத்தன் ஓடுநாகம் தொழிலொடு பெயர் புணர்ந்து மூன்று விகாரமும் வந்தன . பாடப் போயிளான் வந்தாற் கொள்க நின்றான் இவை தொழிலொடு தொழில் புணர்ந்து மூன்று விகாரமும் வந்தன . சாகா அவற்றுள் நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே எனத் தொல்காப்பியர் ( எழு .109 ) விகாரம் மூன்றும் திரிபென்று கூறியதும் கொள்க . மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று இவ்வென மொழிப திரியுமாறே ( தொல் . எழு .110 ) . ( 4 )