நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 81 (இ-ள்) தத்தம் - பொருளாதி ஆறும் காரணமாக வரும் பகுபதங் கட்குத் தந்தமுடைய, பகாப் பதங்களே - அப்பொருளாதி ஆறான பகாப்பதங்களே, பகுதியாகும் - பகுதி ஆகும் என்று சொல்லுவர் புல வர் என்றவாறு. உ-ம்: குழையன், குழையான், குழையள், குழையாள், குழை யவை, குழையென், குழையேன், குழையன், குழையம், குழையாம், குழையெம், குழையேம், குழையோம், குழையை, குழையாய், குழையிர், குழையீர் என வருவன இப்பொருண் மையுடையார் என்னும் பொருட்பெயர்ப் பகுபதம். ஒழிந்த வானான், காரான், தாளான், கரியான், ஊணான் என்னும் ஐ வகைப் பெயர்ப் பகுபதத்துக்கும் அவ்வாறு ஒட்டிக்கொள்க. இவற்றுள் தத்தம் பகப்பாதங்களே பகுதியானவாறும் அன் ஆன் முதலான விகுதியானவாறும் சாரியை சந்தி விகாரங்கள் ஏற்ற வாறும் கண்டுகொள்க. (7) 135. செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர் இன்னவும் பண்புப் பகாநிலைப் பதமே. . சூ-ம், பண்புப் பகாப்பதம் விளங்கித் தோன்றாமையின் அவற்றை எடுத்து விரித்துரைத்தது. (இ-ள்) செம்மை - செம்மையும் செம்மைக்கு மாறான வெண்மை, கருமை, பொன்மை, பசுமையும், சிறுமை - சிறுமையும் சிறுமைக்கு மாறான பெருமையும், சேய்மை - சேய்மையும் சேய்மைக்கு மாறான அணிமையும், தீமை - தீமையும் தீமைக்கு மாறான நன்மையும், வெம்மை - வெம்மையும் வெம்மைக்கு மாறான தண்மையும், புதுமை - புதுமையும் புதுமைக்கு மாறான பழமையும், மென்மை - மென்மையும் மென்மைக்கு மாறான வன்மையும், மேன்மை - மேன்மையும் மேன் மைக்கு மாறாக கீழ்மையும், திண்மை - திண்மையும் திண்மைக்கு மாறாக நொய்மையும், உண்மை - உண்மையும் உண்மைக்கு மாறான இன்மையும், நுண்மை இவற்றெதிர் - நுண்மையும் நுண்மைக்கு மாறான பருமையும், இன்னவும் - இவை போல்வன பிறவும், பண்புப் பகா நிலைப் பதமே - பண்புப் பெயர்ப் பகாப்பதமாம் என்றவாறு. (8) 136. ஈறு போத லிடையுகர மிய்யாதல் ஆதி நீட லடியகர மையாதல் தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல் இனமிக லினையவும் பண்பிற் கியல்பே. சூ-ம், பண்புப் பதத்திற்குரிய சில விகாரம் எடுத்துரைத்தது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 81 ( - ள் ) தத்தம் - பொருளாதி ஆறும் காரணமாக வரும் பகுபதங் கட்குத் தந்தமுடைய பகாப் பதங்களே - அப்பொருளாதி ஆறான பகாப்பதங்களே பகுதியாகும் - பகுதி ஆகும் என்று சொல்லுவர் புல வர் என்றவாறு . - ம் : குழையன் குழையான் குழையள் குழையாள் குழை யவை குழையென் குழையேன் குழையன் குழையம் குழையாம் குழையெம் குழையேம் குழையோம் குழையை குழையாய் குழையிர் குழையீர் என வருவன இப்பொருண் மையுடையார் என்னும் பொருட்பெயர்ப் பகுபதம் . ஒழிந்த வானான் காரான் தாளான் கரியான் ஊணான் என்னும் வகைப் பெயர்ப் பகுபதத்துக்கும் அவ்வாறு ஒட்டிக்கொள்க . இவற்றுள் தத்தம் பகப்பாதங்களே பகுதியானவாறும் அன் ஆன் முதலான விகுதியானவாறும் சாரியை சந்தி விகாரங்கள் ஏற்ற வாறும் கண்டுகொள்க . ( 7 ) 135 . செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர் இன்னவும் பண்புப் பகாநிலைப் பதமே . . சூ - ம் பண்புப் பகாப்பதம் விளங்கித் தோன்றாமையின் அவற்றை எடுத்து விரித்துரைத்தது . ( - ள் ) செம்மை - செம்மையும் செம்மைக்கு மாறான வெண்மை கருமை பொன்மை பசுமையும் சிறுமை - சிறுமையும் சிறுமைக்கு மாறான பெருமையும் சேய்மை - சேய்மையும் சேய்மைக்கு மாறான அணிமையும் தீமை - தீமையும் தீமைக்கு மாறான நன்மையும் வெம்மை - வெம்மையும் வெம்மைக்கு மாறான தண்மையும் புதுமை - புதுமையும் புதுமைக்கு மாறான பழமையும் மென்மை - மென்மையும் மென்மைக்கு மாறான வன்மையும் மேன்மை - மேன்மையும் மேன் மைக்கு மாறாக கீழ்மையும் திண்மை - திண்மையும் திண்மைக்கு மாறாக நொய்மையும் உண்மை - உண்மையும் உண்மைக்கு மாறான இன்மையும் நுண்மை இவற்றெதிர் - நுண்மையும் நுண்மைக்கு மாறான பருமையும் இன்னவும் - இவை போல்வன பிறவும் பண்புப் பகா நிலைப் பதமே - பண்புப் பெயர்ப் பகாப்பதமாம் என்றவாறு . ( 8 ) 136. ஈறு போத லிடையுகர மிய்யாதல் ஆதி நீட லடியகர மையாதல் தன்னொற் றிரட்டன் முன்னின்ற மெய்திரிதல் இனமிக லினையவும் பண்பிற் கியல்பே . சூ - ம் பண்புப் பதத்திற்குரிய சில விகாரம் எடுத்துரைத்தது .