நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 75 124. ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகா னுறழு மென்மரு முளரே. சூ-ம், இதுவும் ஒரோ மயக்கம் கூறியது. (இ-ள்) ஐகான் யவ்வழி - ஐகாரத்தின் பின்னும் யகாரத்தின் பின்னும் வரும், நவ்வொடு சில்வழி - நகரத்துடனே சில இடங்களில், ஞஃகா னுறமும் - ஞகாரம் பொருந்தி வரப்பெறும், என் மரும் உளரே - என்று சொல்லுவாரும் உளர் என்றவாறு. உ-ம்: செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞன்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க நெய்ஞ்ஞன் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான் கைஞ்ஹீன்ற வாட, ல்கண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்ட தென்னே (தே. கோயில் திருவிருத்தம், 5) எனவும், உறழ்ச்சியான் மை நீலம், மெய் நானம் எனவும் கொள்க. (9) போலி 125. அம்மு னிகரம் யகர மென்றிவை எய்தி னையொத் திசைக்கு மவ்வோ டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன. சூ-ம், நிறுத்த முறையானே போலியெழுத்து ஆமாறு கூறியது. (இ-ள்) அம்முன் இகரம் யகரம் என்றிவை எய்தின் - அகரத்தின் முன்னர் இகரமும் யகரமும் வந்து பொருந்தின், ஐயொத்து இசைக் கும் - ஐகார ஓசை போல இசைக்குமென்ப; அவ்வோடு உவ்வும் வவ் வும் - அகரத்தின் முன்னர் உகரமும் வகரமும் வந்து பொருந்தின், ஒளவோரன்ன - ஔகார ஓசைபோல இசைக்கும் என்றவாறு. உ-ம்: ஐவனம், அய்வனம் எனவும்; மௌவல், மஉவல் எனவும் வரும். அவை ஐகார போலியாம் என்க. (70) எழுத்தின் சாரியை 126. மெய்க ளகரமு நெட்டுயிர் காரமும் ஐஔக் கானு மிருமைக் குறிலிவ் விரண்டொடு காரமுமாஞ் சாரியை பெறும்பிற சூ-ம், எழுத்துக்கு வரும் சாரியை இன்னதென உரைத்தது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 75 124. ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகா னுறழு மென்மரு முளரே . சூ - ம் இதுவும் ஒரோ மயக்கம் கூறியது . ( - ள் ) ஐகான் யவ்வழி - ஐகாரத்தின் பின்னும் யகாரத்தின் பின்னும் வரும் நவ்வொடு சில்வழி - நகரத்துடனே சில இடங்களில் ஞஃகா னுறமும் - ஞகாரம் பொருந்தி வரப்பெறும் என் மரும் உளரே - என்று சொல்லுவாரும் உளர் என்றவாறு . - ம் : செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞன்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க நெய்ஞ்ஞன் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான் கைஞ்ஹீன்ற வாட ல்கண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்ட தென்னே ( தே . கோயில் திருவிருத்தம் 5 ) எனவும் உறழ்ச்சியான் மை நீலம் மெய் நானம் எனவும் கொள்க . ( 9 ) போலி 125. அம்மு னிகரம் யகர மென்றிவை எய்தி னையொத் திசைக்கு மவ்வோ டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன . சூ - ம் நிறுத்த முறையானே போலியெழுத்து ஆமாறு கூறியது . ( - ள் ) அம்முன் இகரம் யகரம் என்றிவை எய்தின் - அகரத்தின் முன்னர் இகரமும் யகரமும் வந்து பொருந்தின் ஐயொத்து இசைக் கும் - ஐகார ஓசை போல இசைக்குமென்ப ; அவ்வோடு உவ்வும் வவ் வும் - அகரத்தின் முன்னர் உகரமும் வகரமும் வந்து பொருந்தின் ஒளவோரன்ன - ஔகார ஓசைபோல இசைக்கும் என்றவாறு . - ம் : ஐவனம் அய்வனம் எனவும் ; மௌவல் மஉவல் எனவும் வரும் . அவை ஐகார போலியாம் என்க . ( 70 ) எழுத்தின் சாரியை 126. மெய்க ளகரமு நெட்டுயிர் காரமும் ஐஔக் கானு மிருமைக் குறிலிவ் விரண்டொடு காரமுமாஞ் சாரியை பெறும்பிற சூ - ம் எழுத்துக்கு வரும் சாரியை இன்னதென உரைத்தது .