நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 73 (இ-ள்) ரழ அல்லன - ரகார ழகாரம் ஒழித்து ஒழிந்த மெய் பதி னாறும், றம்முற் றாமுடனிலையும் - தம் முன்னர்த் தாம் வந்து ஒன்று வது உடனிலைமயக்கமாம் என்றவாறு. உ-ம்: பக்கம், அங்ஙனம், அச்சம், அஞ்ஞானம், திட்டம், திண்ணை, அத்தம், வெந்நீர், தப்பு, அம்மி, அய்யர், வெல்ல, கவ்வை, கள்ளு, குற்றம், அன்னம் என வரும். (63) 119. யாழவொற் றின் முன் கசதப ஙஞநம ஈரொற் றாம்ரழத் தனிக்குறி லணையா. சூ-ம், ஈரொற்றாகும் உடனிலை மயக்கம் ஆமாறும் தனிக்குறிற் கீழ் ஒற்று வாராதெனவும் உரைத்தது. (இ-ள்) ய ர ழ ஒற்றின் முன் - ய ர ழ என்னும் இம்மூன்று மெய் முன்னும், க ச தபங ஞ ந ம - க ச தபங ஞ ந ம என்னும் இவ் வெட்டு ஒற்றுங்கூடி, ஈரொற்றாம் - ஈரொற்று உடனிலை மயக்கமாம், ரழ - ரகார மகாரம் என்னும் இவ்விரண்டு மெய்யும், தனிக்குறில் அணையா - தனிக்குறிற்கீழ் வந்து ஒற்றாய் நில்லாது என்றவாறு. உ-ம்: வேய்க்குறை, வேய்ச்சிறை, வேய்த்தல், வேய்ப்புறம், வேய்ங் குறை, வேய்ஞ்சிறை, வேய்ந்தல், வேய்ம்புறம் என வரும். வேர் வீழ் என்பவற்றிற்கும் இவ்வாறொட்டி க சதபங ஞ ந மக்கள் ஈரொற்றாய் வந்தன காண்க. ஆகாதனவற்றிற்கு யாண்டும் காட்ட வராவென்க. (64) 120. லளமெய் திரிந்த னணமுன் மகாரம் நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே. சூ-ம், செய்யுட்குரிய ஈரொற்றுடனிலைமயக்கம் கூறியது. (இ-ள்) லள மெய் திரிந்த ன ண முன் - லகாரம் திரிந்த னகாரத்தின் முன்னும் ளகாரம் திரிந்த ணகாரத்தின் முன்னும், மகாரம் நைந்து ஈரொற்றாம் - மகாரம் குறுகி ஈரொற்றாய் நிற்கும், செய்யுளுள்ளே செய்யுளிடத்து என்றவாறு. உ-ம்: சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும் திசையறி மீகானும் போன்ம் (பரி.10) எனவும், வெயிலிகல் வெஞ்சுர மைய நீ யேகின் மயிலியன் மாதர் மருண்ம் எனவும் வரும். (65)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 73 ( - ள் ) ரழ அல்லன - ரகார ழகாரம் ஒழித்து ஒழிந்த மெய் பதி னாறும் றம்முற் றாமுடனிலையும் - தம் முன்னர்த் தாம் வந்து ஒன்று வது உடனிலைமயக்கமாம் என்றவாறு . - ம் : பக்கம் அங்ஙனம் அச்சம் அஞ்ஞானம் திட்டம் திண்ணை அத்தம் வெந்நீர் தப்பு அம்மி அய்யர் வெல்ல கவ்வை கள்ளு குற்றம் அன்னம் என வரும் . ( 63 ) 119. யாழவொற் றின் முன் கசதப ஙஞநம ஈரொற் றாம்ரழத் தனிக்குறி லணையா . சூ - ம் ஈரொற்றாகும் உடனிலை மயக்கம் ஆமாறும் தனிக்குறிற் கீழ் ஒற்று வாராதெனவும் உரைத்தது . ( - ள் ) ஒற்றின் முன் - என்னும் இம்மூன்று மெய் முன்னும் தபங - தபங என்னும் இவ் வெட்டு ஒற்றுங்கூடி ஈரொற்றாம் - ஈரொற்று உடனிலை மயக்கமாம் ரழ - ரகார மகாரம் என்னும் இவ்விரண்டு மெய்யும் தனிக்குறில் அணையா - தனிக்குறிற்கீழ் வந்து ஒற்றாய் நில்லாது என்றவாறு . - ம் : வேய்க்குறை வேய்ச்சிறை வேய்த்தல் வேய்ப்புறம் வேய்ங் குறை வேய்ஞ்சிறை வேய்ந்தல் வேய்ம்புறம் என வரும் . வேர் வீழ் என்பவற்றிற்கும் இவ்வாறொட்டி சதபங மக்கள் ஈரொற்றாய் வந்தன காண்க . ஆகாதனவற்றிற்கு யாண்டும் காட்ட வராவென்க . ( 64 ) 120. லளமெய் திரிந்த னணமுன் மகாரம் நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே . சூ - ம் செய்யுட்குரிய ஈரொற்றுடனிலைமயக்கம் கூறியது . ( - ள் ) லள மெய் திரிந்த முன் - லகாரம் திரிந்த னகாரத்தின் முன்னும் ளகாரம் திரிந்த ணகாரத்தின் முன்னும் மகாரம் நைந்து ஈரொற்றாம் - மகாரம் குறுகி ஈரொற்றாய் நிற்கும் செய்யுளுள்ளே செய்யுளிடத்து என்றவாறு . - ம் : சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும் திசையறி மீகானும் போன்ம் ( பரி .10 ) எனவும் வெயிலிகல் வெஞ்சுர மைய நீ யேகின் மயிலியன் மாதர் மருண்ம் எனவும் வரும் . ( 65 )