நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

12 எழுத்தியல் (இ-ள்) ண ன முன் - ணகார னகாரத்தின் முன்னர், இனம் - தனக்கு இனமாகிய டறக்களும், க ச ஞ ப ம ய வ வரும் - இவ்வேழு மெய்யும் வந்து மயங்கும் என்றவாறு. உ-ம்: விண்டு எனவும்; நன்று எனவும்; வெண்கலம், வெண்சோறு, வெண்ஞாண், பண்பு, வெண்மை, மண்யாது, மண்வலிது எனவும்; புன்கண், புன்செய், புன்ஞாண், அன்பு, வன்மை, பொன்யாது, பொன்வலிது எனவும் வரும். (59) 115. மம்முன் பயவ மயங்கு மென்ப. சூ-ம், மகார மெய்மயக்கம் கூறியது. (இ-ள்) மம்முன் - மகார மெய் முன்னர், ப ய வ மயங்குமென்ப - தனக்கு இனமாகிய பகரமும் யகாரவகாரமும் வந்து மயங்கும் என்றவாறு. உ-ம்: கம்பன், கலம் யாது, கலம் வலிது எனவும் வரும்.(60) 116. யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும். சூ-ம், யகார ரகார ழகார மெய்மயக்கம் கூறியது. (இ-ள்) ய ர ழ முன்னர் - இம்மூன்று மெய் முன்னரும், மொழிமுதன் மெய் வரும் - ஙகாரம் ஒழித்து மொழிக்கு முதலாம் ஒன்பது எழுத்தும் வந்து மயங்கும் என்றவாறு. உ-ம்: வேய், வேர், வீழ் : கடிது, சிறிது, தீது, பெரிது, நீண்டது, மாண்டது, ஞான்றது, யாது, வலிது என வரும். (61) 117. லளமுன் கசப வயவொன் றும்மே. சூ-ம், லகார ளகார மெய்மயக்கம் கூறியது. (இ-ள்) ல ள முன் - லகார ளகார மெய் முன்னர், க ச பவய ஒன் றும்மே - கசபவய என்னும் ஐந்து மெய்யும் மயங்கும் என்றவாறு. உ-ம்: செல்க, வல்சி, செல்ப, செல்வம், கொல்யானை எனவும்; கொள்க, நீள்சினை, கொள்ப, கள்வன், வெள்யாறு எனவும் வரும்: (62) 118. ரழவல் லனதம்முற் றாமுட னிலையும். சூ-ம், உடனிலைமயக்கம் ஆமாறு கூறியது.
12 எழுத்தியல் ( - ள் ) முன் - ணகார னகாரத்தின் முன்னர் இனம் - தனக்கு இனமாகிய டறக்களும் வரும் - இவ்வேழு மெய்யும் வந்து மயங்கும் என்றவாறு . - ம் : விண்டு எனவும் ; நன்று எனவும் ; வெண்கலம் வெண்சோறு வெண்ஞாண் பண்பு வெண்மை மண்யாது மண்வலிது எனவும் ; புன்கண் புன்செய் புன்ஞாண் அன்பு வன்மை பொன்யாது பொன்வலிது எனவும் வரும் . ( 59 ) 115. மம்முன் பயவ மயங்கு மென்ப . சூ - ம் மகார மெய்மயக்கம் கூறியது . ( - ள் ) மம்முன் - மகார மெய் முன்னர் மயங்குமென்ப - தனக்கு இனமாகிய பகரமும் யகாரவகாரமும் வந்து மயங்கும் என்றவாறு . - ம் : கம்பன் கலம் யாது கலம் வலிது எனவும் வரும் . ( 60 ) 116 . யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும் . சூ - ம் யகார ரகார ழகார மெய்மயக்கம் கூறியது . ( - ள் ) முன்னர் - இம்மூன்று மெய் முன்னரும் மொழிமுதன் மெய் வரும் - ஙகாரம் ஒழித்து மொழிக்கு முதலாம் ஒன்பது எழுத்தும் வந்து மயங்கும் என்றவாறு . - ம் : வேய் வேர் வீழ் : கடிது சிறிது தீது பெரிது நீண்டது மாண்டது ஞான்றது யாது வலிது என வரும் . ( 61 ) 117. லளமுன் கசப வயவொன் றும்மே . சூ - ம் லகார ளகார மெய்மயக்கம் கூறியது . ( - ள் ) முன் - லகார ளகார மெய் முன்னர் பவய ஒன் றும்மே - கசபவய என்னும் ஐந்து மெய்யும் மயங்கும் என்றவாறு . - ம் : செல்க வல்சி செல்ப செல்வம் கொல்யானை எனவும் ; கொள்க நீள்சினை கொள்ப கள்வன் வெள்யாறு எனவும் வரும் : ( 62 ) 118. ரழவல் லனதம்முற் றாமுட னிலையும் . சூ - ம் உடனிலைமயக்கம் ஆமாறு கூறியது .