நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

62 எழுத்தியல் உயிர்மெய் 89. புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும் ஏனை யுயிரோ டுருபு திரிந்தும் உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற் பெயரொடு மொற்றுமுன் னாய்வரு முயிர் மெய் சூ-ம், உயிர்மெய் ஆமாறு உரைத்தது. (இ-ள்) புள்ளிவிட்டு - மெய்யானது புள்ளியை ஒழிந்து, அவ்வொடு - அகரத்துடனே சேர்ந்து, முன்னுருவாகியும் - புள்ளியழிந்த உருவே உருவாகியும், ஏனை உயிரோடு - ஒழிந்து உயிர்களோடும் சேர்ந்து, உருபு திரிந்தும் - தனது உருவு வேறுபட்டும், உயிரளவாய் - உயிரி னுடைய மாத்திரையே தனக்கு மாத்திரையாய், அதன் வடிவொழித்து இருவயிற் பெயரோடும் - உயிர் மெய் என்ற இருவகைப் பெய ரொடும், ஒற்று முன்னாய் வரும் உயிர்மெய் - ஒற்று முன்னாகவும் உயிர் பின்னாகவும் வருவது உயிர்மெய் என்றவாறு. உ--ம்: க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ ஒழிந்தனவும் இவ்வாறே வரும். ஆக உயிர்மெய் 216. (34) முற்றாய்தம் 90. குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே சூ-ம், முற்றாய்தத் தோற்றம் வருமாறு கூறுகின்றது. 4 (இ-ள்) குறியதன் முன்னர் - குற்றெழுத்துக்கு முன்னாக, ஆய்தட் புள்ளி - முற்றாய்த எழுத்தானது, உயிரொடு புணர்ந்த - உயிரொடுங் கூடிய, வல்லாறன் மிசைத்தே - வல்லெழுத்து ஆறின்மேல் வரு மென்றவாறு. உ-ம்: எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு, "விலஃஃகி" ஓசை நிறைத்தற்பொருட்டு வந்த ஆய்தம். இருபஃது புணர்ச்சிக்கண் வந்த ஆய்தம் ஆக ஆய்தம் 8. (36) அ உயிரளபெடை 91. இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில் அளபௌ மவற்றவற் றினக்குறில் குறியே. சூ-ம், உயிரளபெடைத் தோற்றம் கூறியது.
62 எழுத்தியல் உயிர்மெய் 89. புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும் ஏனை யுயிரோ டுருபு திரிந்தும் உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற் பெயரொடு மொற்றுமுன் னாய்வரு முயிர் மெய் சூ - ம் உயிர்மெய் ஆமாறு உரைத்தது . ( - ள் ) புள்ளிவிட்டு - மெய்யானது புள்ளியை ஒழிந்து அவ்வொடு - அகரத்துடனே சேர்ந்து முன்னுருவாகியும் - புள்ளியழிந்த உருவே உருவாகியும் ஏனை உயிரோடு - ஒழிந்து உயிர்களோடும் சேர்ந்து உருபு திரிந்தும் - தனது உருவு வேறுபட்டும் உயிரளவாய் - உயிரி னுடைய மாத்திரையே தனக்கு மாத்திரையாய் அதன் வடிவொழித்து இருவயிற் பெயரோடும் - உயிர் மெய் என்ற இருவகைப் பெய ரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர்மெய் - ஒற்று முன்னாகவும் உயிர் பின்னாகவும் வருவது உயிர்மெய் என்றவாறு . -- ம் : கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ ஒழிந்தனவும் இவ்வாறே வரும் . ஆக உயிர்மெய் 216 . ( 34 ) முற்றாய்தம் 90. குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே சூ - ம் முற்றாய்தத் தோற்றம் வருமாறு கூறுகின்றது . 4 ( - ள் ) குறியதன் முன்னர் - குற்றெழுத்துக்கு முன்னாக ஆய்தட் புள்ளி - முற்றாய்த எழுத்தானது உயிரொடு புணர்ந்த - உயிரொடுங் கூடிய வல்லாறன் மிசைத்தே - வல்லெழுத்து ஆறின்மேல் வரு மென்றவாறு . - ம் : எஃகு கஃசு கஃடு கஃது கஃபு கஃறு விலஃஃகி ஓசை நிறைத்தற்பொருட்டு வந்த ஆய்தம் . இருபஃது புணர்ச்சிக்கண் வந்த ஆய்தம் ஆக ஆய்தம் 8 . ( 36 ) உயிரளபெடை 91 . இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில் அளபௌ மவற்றவற் றினக்குறில் குறியே . சூ - ம் உயிரளபெடைத் தோற்றம் கூறியது .