நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

5 தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய இலக்கண, இலக்கிய நூல்களை நன்கு கற்றறிந்து உணர்ந்து மக்கள் வழக்காற்றையும் அறிந்து இந்நூலை யாத்துள்ளார். எனவே தொல்காப்பியத்திலும் சங்கப் பாடல்களிலும் காணப்படாத இலக்கண விதிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் கற்கும் மாணவர்களுக்கு இலக்கணப் பயிற்சி இன்றியமையாதது. ஆகையால் பள்ளிப் பருவம் முதல் நன்னூல் கற்பிக்கப்படுகிறது. எனவே 'நன்னூலை அறியார் எந் நூலையும் அறியார்' என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நன்னூல், சிறப்புப் பாயிரம் பொதுப்பாயிரம் எனும் இரு பாயிரங் களையும் எழுத்து, சொல் எனும் இரு அதிகாரங்களையும் கொண் டமைந்த நூலாகும். சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் ஆகியவற்றில் 56 நூற்பாக்கள் உள்ளன. பாயிரங்களில் இடம் பெற்றுள்ள நூற் பாக்கள் பழைய நூல்களான இறையனார் களவியல் உரை, இளம் பூரணர் உரை முதலியவற்றில் காணப்படுகின்றன. எனவே சிறப்புப் பாயிரத்தையும், பொதுப்பாயிரத்தையும் பவணந்தியார் எழுதவில்லை என்பார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கம். எழுத்ததிகாரம் 5 இயல்களையும் 202 நூற்பாக்களையும், சொல்லதிகாரம் 5 இயல்களையும் 204 நூற்பாக்களையும் ஆக மொத்தம் 406 நூற்பாக்களைக் கொண்டு அமைந்துள்ளது. தொல் காப்பியர் 6 இயல்களில் விரித்துக்கூறிய புணர்ச்சி விதிகளை நன்னூலார் 3 இயல்களில் சுருக்கி விளக்கியுள்ளார். மேலும் நன்னூல் நூற்பாக்கள் சுருக்கம், எளிமை, தெளிவு ஆகிய பண்பு நலன்களைக் கொண்டு விளங்குகின்றன. உரையாசிரியர்கள் நன்னூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். குறிப்பாக மயிலை நாதர், ஆண்டிப்புலவர், சங்கர நமச்சிவாயர், சிவஞான முனிவர், கூழங்கைத் தம்பிரான், முகவை ராமானுஜ கவிராயர், விசாகப் பெரு மாள் அய்யர், ஆறுமுக நாவலர், வை.மு. சடகோபராமாநுசாசாரியார் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். நன்னூலுக்கு எழுதிய உரைகளில் மிகப் பழமையானது மயிலை நாதர் எழுதிய உரையேயாகும். சமணர்கள் போற்றும் 22ஆம் தீர்த் தங்கரரின் பெயர் நேமிநாதர். மயிலையில் நேமிநாதர் எழுந்தருளிய தால் மயிலைநாதர் எனப் பெயர் பெற்றார். அம்மயிலை நாதர் பெயரே உரையாசிரியர்க்கும் பெயர் ஆயிற்று.
5 தொல்காப்பியத்திற்குப் பிறகு தோன்றிய இலக்கண இலக்கிய நூல்களை நன்கு கற்றறிந்து உணர்ந்து மக்கள் வழக்காற்றையும் அறிந்து இந்நூலை யாத்துள்ளார் . எனவே தொல்காப்பியத்திலும் சங்கப் பாடல்களிலும் காணப்படாத இலக்கண விதிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன . தமிழ் கற்கும் மாணவர்களுக்கு இலக்கணப் பயிற்சி இன்றியமையாதது . ஆகையால் பள்ளிப் பருவம் முதல் நன்னூல் கற்பிக்கப்படுகிறது . எனவே ' நன்னூலை அறியார் எந் நூலையும் அறியார் ' என்ற நிலை ஏற்பட்டுள்ளது . நன்னூல் சிறப்புப் பாயிரம் பொதுப்பாயிரம் எனும் இரு பாயிரங் களையும் எழுத்து சொல் எனும் இரு அதிகாரங்களையும் கொண் டமைந்த நூலாகும் . சிறப்புப்பாயிரம் பொதுப்பாயிரம் ஆகியவற்றில் 56 நூற்பாக்கள் உள்ளன . பாயிரங்களில் இடம் பெற்றுள்ள நூற் பாக்கள் பழைய நூல்களான இறையனார் களவியல் உரை இளம் பூரணர் உரை முதலியவற்றில் காணப்படுகின்றன . எனவே சிறப்புப் பாயிரத்தையும் பொதுப்பாயிரத்தையும் பவணந்தியார் எழுதவில்லை என்பார் மூதறிஞர் வ.சுப . மாணிக்கம் . எழுத்ததிகாரம் 5 இயல்களையும் 202 நூற்பாக்களையும் சொல்லதிகாரம் 5 இயல்களையும் 204 நூற்பாக்களையும் ஆக மொத்தம் 406 நூற்பாக்களைக் கொண்டு அமைந்துள்ளது . தொல் காப்பியர் 6 இயல்களில் விரித்துக்கூறிய புணர்ச்சி விதிகளை நன்னூலார் 3 இயல்களில் சுருக்கி விளக்கியுள்ளார் . மேலும் நன்னூல் நூற்பாக்கள் சுருக்கம் எளிமை தெளிவு ஆகிய பண்பு நலன்களைக் கொண்டு விளங்குகின்றன . உரையாசிரியர்கள் நன்னூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர் . குறிப்பாக மயிலை நாதர் ஆண்டிப்புலவர் சங்கர நமச்சிவாயர் சிவஞான முனிவர் கூழங்கைத் தம்பிரான் முகவை ராமானுஜ கவிராயர் விசாகப் பெரு மாள் அய்யர் ஆறுமுக நாவலர் வை.மு. சடகோபராமாநுசாசாரியார் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள் . நன்னூலுக்கு எழுதிய உரைகளில் மிகப் பழமையானது மயிலை நாதர் எழுதிய உரையேயாகும் . சமணர்கள் போற்றும் 22 ஆம் தீர்த் தங்கரரின் பெயர் நேமிநாதர் . மயிலையில் நேமிநாதர் எழுந்தருளிய தால் மயிலைநாதர் எனப் பெயர் பெற்றார் . அம்மயிலை நாதர் பெயரே உரையாசிரியர்க்கும் பெயர் ஆயிற்று .