நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

58 எழுத்தியல் கின்ற கிடக்கை முறைதானே, முறையாகும்மே - நூலுள்ளும் முறை யாம் என்றவாறு. விகாரமின்றி இயல்பிற் பிறத்தலானும் அவ்வுடம்பை நண்ணி அவையிற்றின் தன்மையாய் நிற்றலானும் அகரம் முன் விகாரமின்றி வைக்கப்பட்டது. அதற்கு இனமாதலின் அகரத்தின் பின் ஆகாரம் வைக்கப்பட்டது. இடமும் செய்கையும் சுட்டுப் பொருட்டாதலும் நோக்கி அதற்பின் இகரமும் அதற்கு இனமாதலின் அதன்பின் ஈகாரமும் வைக்கப்பட்டது. இவ்வாறே ஒழிந்த எழுத்துக்கள் தம் கிடக்கை முறை காரணம் அறிந்து கொள்க. முதல் நா முதலண்ண முறப் பிறத்தலான் மெய்களுட் ககரம் முன் வைக்கப்பட்டது. தமிழ் எழுத்தென்பது அறிவித்தற்கு றகர னகரங்களை இறுதிக்கண் வைத் தார். உயிர் உடல் போலாகாமையின் அதற்கிடையே ஆய்தம் வைக் கப்பட்டது. (18) எழுத்தின் பிறப்பு 74. நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின் வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே. சூ-ம், எழுத்துக்களது பிறப்பு இன்னதெனக் கூறியது. (இ-ள்) நிறையுயிர் - விகாரப்படாமல் தன்னியல்பில் நின்ற உயிர், முயற்சியில் - மொழிவேனென்னும் உள்ளம் தோன்றிய முயற்சியினாலே, உள் வளி துரப்ப - உள்ளே நின்ற வாயுக்கள் எழுப்ப, எழும் அணுத்திரள் - ஆண்டு நின்ற ஒலியணுக் கூட்டங்கள் விசைத்து எழுந்து, உரம் கண் டம் உச்சி மூக்கிற்று - நெஞ்சும் மிடறும் தலையும் மூக்குமென்னும் இந்நான்கு இடத்தையும் முதலடைந்து, இதழ் நாப் பல்லணத் தொழிலின் - இதழும் நாவும் பல்லும் அண்ணமுமென்னும் இந்நான் கிடத்தையும் பின் அடைந்து இவற்றது முயற்சி விகற்பத்தால், வெவ் வேறு எழுத்தொலியாய் - பல வேறு வகைப்பட்ட எழுத்தொலியாய், வரல் பிறப்பே - புலப்படல் எழுத்துக்களது பிறப்பாம் என்றவாறு. (19) முதலெழுத்துக்களின் இடம் 75. அவ்வழி, ஆவி யிடைமை யிடமிட றாகும் மேவு மென்மைமூக் குரம் பெறும் வன்மை. சூம், முதலெழுத்துக்கட்கு இடம் கூறியது.
58 எழுத்தியல் கின்ற கிடக்கை முறைதானே முறையாகும்மே - நூலுள்ளும் முறை யாம் என்றவாறு . விகாரமின்றி இயல்பிற் பிறத்தலானும் அவ்வுடம்பை நண்ணி அவையிற்றின் தன்மையாய் நிற்றலானும் அகரம் முன் விகாரமின்றி வைக்கப்பட்டது . அதற்கு இனமாதலின் அகரத்தின் பின் ஆகாரம் வைக்கப்பட்டது . இடமும் செய்கையும் சுட்டுப் பொருட்டாதலும் நோக்கி அதற்பின் இகரமும் அதற்கு இனமாதலின் அதன்பின் ஈகாரமும் வைக்கப்பட்டது . இவ்வாறே ஒழிந்த எழுத்துக்கள் தம் கிடக்கை முறை காரணம் அறிந்து கொள்க . முதல் நா முதலண்ண முறப் பிறத்தலான் மெய்களுட் ககரம் முன் வைக்கப்பட்டது . தமிழ் எழுத்தென்பது அறிவித்தற்கு றகர னகரங்களை இறுதிக்கண் வைத் தார் . உயிர் உடல் போலாகாமையின் அதற்கிடையே ஆய்தம் வைக் கப்பட்டது . ( 18 ) எழுத்தின் பிறப்பு 74. நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின் வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே . சூ - ம் எழுத்துக்களது பிறப்பு இன்னதெனக் கூறியது . ( - ள் ) நிறையுயிர் - விகாரப்படாமல் தன்னியல்பில் நின்ற உயிர் முயற்சியில் - மொழிவேனென்னும் உள்ளம் தோன்றிய முயற்சியினாலே உள் வளி துரப்ப - உள்ளே நின்ற வாயுக்கள் எழுப்ப எழும் அணுத்திரள் - ஆண்டு நின்ற ஒலியணுக் கூட்டங்கள் விசைத்து எழுந்து உரம் கண் டம் உச்சி மூக்கிற்று - நெஞ்சும் மிடறும் தலையும் மூக்குமென்னும் இந்நான்கு இடத்தையும் முதலடைந்து இதழ் நாப் பல்லணத் தொழிலின் - இதழும் நாவும் பல்லும் அண்ணமுமென்னும் இந்நான் கிடத்தையும் பின் அடைந்து இவற்றது முயற்சி விகற்பத்தால் வெவ் வேறு எழுத்தொலியாய் - பல வேறு வகைப்பட்ட எழுத்தொலியாய் வரல் பிறப்பே - புலப்படல் எழுத்துக்களது பிறப்பாம் என்றவாறு . ( 19 ) முதலெழுத்துக்களின் இடம் 75. அவ்வழி ஆவி யிடைமை யிடமிட றாகும் மேவு மென்மைமூக் குரம் பெறும் வன்மை . சூம் முதலெழுத்துக்கட்கு இடம் கூறியது .