நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

52 எழுத்தியல் தோற்றமும், உருவம் - எழுத்துக்களது வடிவும், மாத்திரை - கால வழி யும், முதல் - எழுத்துக்கள் மொழிக்கு முதலாய் வருவனவும், ஈறு - எழுத்துக்கள் மொழிக்கு ஈறாய் வருவனவும், இடைநிலை - எழுத்துக் கள் மொழிக்கு நடுவாய் வருவனவும், போலி - எழுத்துக்கள் போலியா வனவும், என்றா - இப்பத்துக் கூறுபாடும், பதம் - எழுத்துக்கள் பதமா வனவும், புணர்வு - நின்ற பதத்தின் ஈற்றெழுத்து வரும் பதத்தின் முத லெழுத்துப் புணரும் புணர்ச்சியும், என - இவ்விரு கூறுபாடும், பன் னிரு பாற்று - ஆகப் பன்னிரண்டு பகுதியை உடையதாம், அதுவே - மேற்சொல்லிய எழுத்திலக்கணம் என்றவாறு. (2) எழுத்து இன்னதென்பதும் அதன் வகையும் 58. மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. சூ-ம், எழுத்தாவது இன்னது என்பதூஉம் அதன் பகுதியும் சொல் லியது. (இ-ள்) மொழிமுதற் காரணமாம் - மொழிக்கு முதற் காரணமாகியும், அணுத்திரள் - வாயு அணுக்கூட்டத்தின் காரிய மாகியும், ஒலி - வரும் ஓசையை, எழுத்து - எழுத்தென்று சொல்லப்படும், அது - அவ் வெழுத்து, முதல்சார்பென - முதலெழுத்தென்றும் சார்பெழுத்தென் றும், இருவகைத்தே - இரண்டு பகுதிப்படும் என்ற வாறு. எழுத்தென்றது யாதெனில் முன்பு கட்புலனாகாது மனனுருவாய் நிற்கும் கருத்துப் பொருளாய் பின்பு கட்புலனாகிய வடிவுமுடைய வாய் வேறு வேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கியைந்து நிற்கும் ஓசையேயாம். கடலொலி சங்கொலி முதலிய ஓசைகள் பொருள் உணர்த்தா மையானும் முற்கு வீளை முதலியன பொருளுணர்த்திற்று. எழுத்து ஆகாமையானும் அவை ஈண்டுக் கொள்ளாராயினார். (3) முதலெழுத்து 59. உயிரு முடம்புமா முப்பது முதலே. சூ-ம், முதலெழுத்தாயது இன்னதென்று சொல்லியது. (இ-ள்) உயிரும் - உயிர் பன்னிரண்டெழுத்தும், உடம்பும் - உடல் பதினெட்டெழுத்தும், ஆமுப்பதும் - ஆகிய முப்பதெழுத்தும், முதலே - முதலெழுத்தென்று சொல்லப்படும். (4)
52 எழுத்தியல் தோற்றமும் உருவம் - எழுத்துக்களது வடிவும் மாத்திரை - கால வழி யும் முதல் - எழுத்துக்கள் மொழிக்கு முதலாய் வருவனவும் ஈறு - எழுத்துக்கள் மொழிக்கு ஈறாய் வருவனவும் இடைநிலை - எழுத்துக் கள் மொழிக்கு நடுவாய் வருவனவும் போலி - எழுத்துக்கள் போலியா வனவும் என்றா - இப்பத்துக் கூறுபாடும் பதம் - எழுத்துக்கள் பதமா வனவும் புணர்வு - நின்ற பதத்தின் ஈற்றெழுத்து வரும் பதத்தின் முத லெழுத்துப் புணரும் புணர்ச்சியும் என - இவ்விரு கூறுபாடும் பன் னிரு பாற்று - ஆகப் பன்னிரண்டு பகுதியை உடையதாம் அதுவே - மேற்சொல்லிய எழுத்திலக்கணம் என்றவாறு . ( 2 ) எழுத்து இன்னதென்பதும் அதன் வகையும் 58. மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே . சூ - ம் எழுத்தாவது இன்னது என்பதூஉம் அதன் பகுதியும் சொல் லியது . ( - ள் ) மொழிமுதற் காரணமாம் - மொழிக்கு முதற் காரணமாகியும் அணுத்திரள் - வாயு அணுக்கூட்டத்தின் காரிய மாகியும் ஒலி - வரும் ஓசையை எழுத்து - எழுத்தென்று சொல்லப்படும் அது - அவ் வெழுத்து முதல்சார்பென - முதலெழுத்தென்றும் சார்பெழுத்தென் றும் இருவகைத்தே - இரண்டு பகுதிப்படும் என்ற வாறு . எழுத்தென்றது யாதெனில் முன்பு கட்புலனாகாது மனனுருவாய் நிற்கும் கருத்துப் பொருளாய் பின்பு கட்புலனாகிய வடிவுமுடைய வாய் வேறு வேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கியைந்து நிற்கும் ஓசையேயாம் . கடலொலி சங்கொலி முதலிய ஓசைகள் பொருள் உணர்த்தா மையானும் முற்கு வீளை முதலியன பொருளுணர்த்திற்று . எழுத்து ஆகாமையானும் அவை ஈண்டுக் கொள்ளாராயினார் . ( 3 ) முதலெழுத்து 59. உயிரு முடம்புமா முப்பது முதலே . சூ - ம் முதலெழுத்தாயது இன்னதென்று சொல்லியது . ( - ள் ) உயிரும் - உயிர் பன்னிரண்டெழுத்தும் உடம்பும் - உடல் பதினெட்டெழுத்தும் ஆமுப்பதும் - ஆகிய முப்பதெழுத்தும் முதலே - முதலெழுத்தென்று சொல்லப்படும் . ( 4 )