நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 49 (இ-ள்) மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் - அரசுடைய அவைக் கண் செல்லும் ஓலைச் செய்யுளினும், தன்னுடைய ஆற்றல் உணரார் இடையினும் - தனது கல்விப் பெருமையை உணரார் இடத்தினும், மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் - தன்னை மறு தலை பழித்த காலையும் - தன்னிடத்து எதிர்வாதி கல்வியெளிமை தோன்ற இகழ்ந்த காலையும், தன்னைப் புகழ்தலும் - இவ்விடங் களிற் றன்னைப் புகழ்ந்து கூறுதலும், தகும் புலவோற்கே - புல வோற்கு முறையாம் என்றவாறு. (7) பாயிரம் நூற்கு இன்றியமையாதது என்பது. 54. ஆயிர முகத்தா னகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே சூ-ம், நூற்குப் பாயிரம் இன்றியமையாமையெனக் கூ கூறுகின்றது. (இ-ள்) ஆயிர முகத்தான் - நுண்னிதாய இலக்கணத்தோடு பல பல துறைகளினாலும், அகன்றதாயினும் - விரிவுள்ள நூலாகச் செய்யி னும், பாயிரமில்லது - பாயிரமின்மையுடைய நூல், பனுவ லன்றே - நூலன்று என்றவாறு. (8) 55. மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோ ணல்லார்க் கணியும் போல் நாடிமுன் ஐதுரையாய் நின்ற வணிந்துரையை யெந்நூற்கும் பெய்துரையாய் வைத்தார் பெரிது. சூ-ம், பல வகைச் சிறப்பினாலும் நிரம்பிய பாயிரம் கேட்க வேண்டு மெனக் கூறுகின்றது. (இ-ள்) மாடக்குச் சித்திரமும் - மாடங்கட்கு எழுதிய சித்திரச் சிறப் புப் போலவும், மாநகர்க்குக் கோபுரமும் - பெரிய நகரங்களினின்ற கோபுரச் சிறப்புப் போலவும், ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும் போல் - அழகு அமைந்த வேய்போன்ற தோளையுடைய மாதர்க்கு அணிந்த ஆபரணச் சிறப்புப் போலவும், நாடி முன் - எந்நூற்கும் ஆராய்ந்து நூல் முன்னாக, ஐதுரையாய் நின்ற அணிந்துரையை - அழ காகிய பொருளாய் நின்ற பாயிரத்தை, எந்நூற்கும் - எவ்வகைப்பட்ட நூற் கும், பெய்துரையாய் வைத்தார் பெரிது - அவ்வவ் நூற்குப் பொருள் கூறு முறையாக வைத்தார் பெருமையோடு என்றவாறு. நூல் கேட் கின்னே புறவுரை கேட்டுப் பயன் என்னையோவெனின் கொழுச் சென்ற வழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோலப் பருப்பொருட்டாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 49 ( - ள் ) மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் - அரசுடைய அவைக் கண் செல்லும் ஓலைச் செய்யுளினும் தன்னுடைய ஆற்றல் உணரார் இடையினும் - தனது கல்விப் பெருமையை உணரார் இடத்தினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் - தன்னை மறு தலை பழித்த காலையும் - தன்னிடத்து எதிர்வாதி கல்வியெளிமை தோன்ற இகழ்ந்த காலையும் தன்னைப் புகழ்தலும் - இவ்விடங் களிற் றன்னைப் புகழ்ந்து கூறுதலும் தகும் புலவோற்கே - புல வோற்கு முறையாம் என்றவாறு . ( 7 ) பாயிரம் நூற்கு இன்றியமையாதது என்பது . 54 . ஆயிர முகத்தா னகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே சூ - ம் நூற்குப் பாயிரம் இன்றியமையாமையெனக் கூ கூறுகின்றது . ( - ள் ) ஆயிர முகத்தான் - நுண்னிதாய இலக்கணத்தோடு பல பல துறைகளினாலும் அகன்றதாயினும் - விரிவுள்ள நூலாகச் செய்யி னும் பாயிரமில்லது - பாயிரமின்மையுடைய நூல் பனுவ லன்றே - நூலன்று என்றவாறு . ( 8 ) 55 . மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோ ணல்லார்க் கணியும் போல் நாடிமுன் ஐதுரையாய் நின்ற வணிந்துரையை யெந்நூற்கும் பெய்துரையாய் வைத்தார் பெரிது . சூ - ம் பல வகைச் சிறப்பினாலும் நிரம்பிய பாயிரம் கேட்க வேண்டு மெனக் கூறுகின்றது . ( - ள் ) மாடக்குச் சித்திரமும் - மாடங்கட்கு எழுதிய சித்திரச் சிறப் புப் போலவும் மாநகர்க்குக் கோபுரமும் - பெரிய நகரங்களினின்ற கோபுரச் சிறப்புப் போலவும் ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும் போல் - அழகு அமைந்த வேய்போன்ற தோளையுடைய மாதர்க்கு அணிந்த ஆபரணச் சிறப்புப் போலவும் நாடி முன் - எந்நூற்கும் ஆராய்ந்து நூல் முன்னாக ஐதுரையாய் நின்ற அணிந்துரையை - அழ காகிய பொருளாய் நின்ற பாயிரத்தை எந்நூற்கும் - எவ்வகைப்பட்ட நூற் கும் பெய்துரையாய் வைத்தார் பெரிது - அவ்வவ் நூற்குப் பொருள் கூறு முறையாக வைத்தார் பெருமையோடு என்றவாறு . நூல் கேட் கின்னே புறவுரை கேட்டுப் பயன் என்னையோவெனின் கொழுச் சென்ற வழித் துன்னூசி இனிது செல்லுமாறுபோலப் பருப்பொருட்டாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்